ops 2

திமுகவில் இணைந்த அதிமுக மாஜி முதலமைச்சர்

175 0

அதிமுகவில் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம், அக்கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி மோதலால் தனித்து செயல்பட்டு வந்தவர், தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.

அதிமுகவில் உட்கட்சி மோதல்

தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக அதிமுக ஆட்சி காலத்தில் 3 முறை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் திமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம், 2017ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக பல பிளவுகளாக அதிமுக பிரிந்தது. இதனையடுத்து அதிமுகவில் ஏற்பட்ட அடுத்தடுத்த மோதல்கள் காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் ஓபிஎஸ்.  இதனையடுத்து பல சட்ட போராட்டங்கள் நடத்தினாலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனையடுத்து எந்த வித நிபந்தனையும் முறை அதிமுகவில் இணைய எவ்வளவோ முயற்சி செய்தார்.

திமுகவில் ஓபிஎஸ்

ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி மறுத்த நிலையில், பாஜகவின் உதவியோடு அதிமுகவில் இணைய திட்டம் போட்டார். ஆனால் பாஜகவின் வலியுறுத்தலையும் இபிஎஸ் கேட்டுக்கொள்ளவில்லை. இதனையடுத்து திமுகவில் இணைய திட்டமிட்டார். இதற்கான நடவடிக்கைகள் திரைமறைவில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில்  இன்று அண்ணா அறிவாலயம் வந்த ஓ.பன்னீர் செல்வத்தை திமுக மூத்த தலைவரும் அமைச்சருமான எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், சேகர்பாபு ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர்.

இதனையடுத்து திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினை ஓ.பன்னீர் செல்வத்தை ஆரத்தழுவி வரவேற்றார். இதனையடுத்து ஸ்டாலின்  முன்னிலையில் திமுகவில் ஓ.பன்னீர் செல்வம் இணைந்தார். அப்போது உசிலம்ப்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், முன்னாள் எம்பி ரவீந்திரநாத் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்.

Related Post

Gemini Generated Image 1mc9ek1mc9ek1mc9

கர்மா சும்மா விடுமா? – உலகத்தில் முதல் முறை.. திருமாவை சாடிய மோகன் ஜி!

Posted by - April 7, 2026 0
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 9ம் தேதி நடைபெறுகிறது. அங்கு ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் ஏனாம் தொகுதிகளில் தான் அறிவித்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என…
ASDFGH

மீண்டும் அக்கவுண்ட்டுக்கு வந்த ரூ.2,000

Posted by - March 3, 2026 0
முதியோர், கைம்பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையுடன், சிறப்பு நிதி வழங்கியுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். ஏற்கனவே வழங்கப்படும் தொகையுடன் ரூ.2,000 கூடுதலாக வரவு.…
Generated Image November 27 2025 10 14AM

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்!

Posted by - November 27, 2025 0
எம்எல்ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்த நிலையில், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார். அதிமுகவில் இருந்த எம்ஜிஆர் காலத்து…
Generated Image January 05 2026 11 52AM

இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள்

Posted by - January 5, 2026 0
அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். TN Govt Teachers Protest: சம வேலைக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *