தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கம் – விஜயின் ஓராண்டு அரசியல் பயணம் – தமிழக அரசியலில் தாக்கம்?

231 0

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாமாண்டு தொடக்கநாளை ஒட்டி, அக்கட்சி தலைவர் விஜய் இன்று பல்வேறு தலைவர்களின் சிலையை திறந்து வைக்க உள்ளார்.

தலைவர்கள் சிலையை திறக்கும் விஜய்:

இரண்டாவது ஆண்டு தொடக்கவிழாவை ஒட்டி, சென்னை அடுத்த பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், கட்சி கொள்கைத்தலைவர்களின் சிலையை விஜய் திறந்துவைக்க உள்ளார். அதில் தந்த பெரியார், அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் சிலைகள் அடங்கும். கொடியேற்றி நலத்திட்ட உதவிகளையும் விஜய் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, கட்சியை வலுப்படுத்தும் விதமாகவும், தேர்தலுக்கு தயாராகும் நோக்கிலும், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான அறிவிப்பையும் விஜய் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜயின் ஒரு வருட அரசியல் பயணம்:

திரைத்துறையின் உச்சநட்சத்திரமாக இருந்தபோது தினசரி பேசுபொருளாக இருந்த விஜய், அரசியல் பயணத்தை தொடங்கியது முதல் புதிய களத்திலும் விவாதப் பொருளாக தொடர்கிறார். அந்த வகையில் கடந்த ஓராண்டில் விஜயின் அரசியல் பயணம் எப்படி இருந்தது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

  • கட்சி தொடங்கியதுமே தனது அரசியல் எதிரி திமுக தான் என்பதை மீண்டும் மீண்டும் உறுதிபடுத்தி, அரசியல் பயணத்தை தீவிரமாக்கினார்
  • தமிழக வெற்றி(க்) கழகத்தின் பெயரில் ஒற்றுப்பிழை இருந்ததற்கு தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது
  • அரசியல் கட்சிகள் அதைகொண்டு விமர்சிக்க, பிழைய திருத்தி ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை எதிர்கொள்ள தான் தயார் என்பதை விஜய் உறுதிப்படுத்தினார்
  • கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை என பல்வேறு முக்கிய நிகழ்வுகளுக்கும் சமூக வலைதளங்கள் வாயிலாக கண்டனம் தெரிவித்தார்
  • அரசியல் தலைவர்களின் நினைவு நாளுக்கு வீட்டிலிருந்தபடியே அஞ்சலி செலுத்தினார்
  • கள அரசியலுக்கு விஜய் வரமாட்டார், அவர் ஒரு வர்க் ஃப்ரம் ஹோம் அரசியல்வாதி என பிரதான அரசியல் கட்சிகள் விமர்சித்தன
  • குறிப்பிட்ட தேதியில் கட்சி மாநாட்டை கூட நடத்த முடியவில்லை, இவரெல்லாம் அரசியலுக்கு சரிவரமாட்டார் என எள்ளி நகையாடப்பட்டார்
  • காவல்துறையின் கடும் கட்டுப்பாடுகளையும் மீறி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெகவின் முதல் மாநில மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி முடித்தார்
  • மாநாட்டில் உரையாற்றியபோது அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என பகிரங்கமாக அறிவித்தார்
  • தமிழக அரசியல் களத்தை திமுக Vs தவெக என மாற்றும் முயற்சிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளார்
  • விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறவில்லை என பாஜக ஒருபக்கமும், அவர்களின் பி டீம் தான் விஜய் என திமுக ஒரு பக்கமும் தவெகவை கடுமையாக அட்டாக் செய்தது
  • மறுபுறம் தனது பாணியில் இருந்து விலகியதால், தம்பி என குறிப்பிட்டு வந்த விஜயை, நாதகவின் சீமானும் கடுமையாக சாடி வந்தார்
  • விஜய் பங்கேற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவால், திமுக கூட்டணியில் பெரும் குழப்பமே வெடித்தது
  • விஜய்க்கு ஆதரவான நிலைப்பாட்டால் விசிகவில் துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்த ஆதவ் அர்ஜுனா கட்சியிலிருந்தே நீக்கப்பட்டார்
  • அதிமுக உடன் தவெக கூட்டணி என பேச்சு எழுந்தபோது, தனித்து நின்று போட்டியிட்டு ஆட்சி அமைப்பதே இலக்கு என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்
  • திமுக அரசில் நிகழும் ஒவ்வொரு தவறையும் தவறாமல் சுட்டிக் காட்ட தொடங்கினார்
  • திமுகவினரின் கடும் விமர்சனங்களை தங்கள் பக்கம் திருப்பி, இனி அவர்களின் போட்டியாளர் தான் தான் என்பதை உறுதிப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறார்
  • கட்சியை வலுப்படுத்தும் விதமாக கட்சி நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார்
  • விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் பரந்தூர் மக்களுக்கு நேரில் சென்று ஆதரவு அளித்து கள அரசியலை விஜய் தொடங்கினார்
  • வேங்கைவயலுக்கு நேரில் செல்லவும் விஜய் திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டது
  • அந்த நிலையில் தான் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வேங்கைவயல் சம்பவம் தொடர்பான குற்றவாளிகளின் விவரங்களையே தமிழக அரசு வெளியிட்டது

Related Post

நிலக்கடலை.. இதயத்தை காக்கும் அட்டகாசமான வேர்க்கடலை.. ஆனா “இவங்க” மட்டும் நிலக்கடலையை தொடவே கூடாதாம்

Posted by - December 14, 2023 0
சென்னை: பல்வேறு சத்துக்களை கொண்டிருக்கும் நிலக்கடலையை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா? யாரெல்லாம் நிலக்கடலை சாப்பிடக்கூடாது? தெரியுமா? மிகச்சிறந்த புரதத்தின் ஆதாரமாக விளங்கக்கூடியது வேர்க்கடலை என்று சொல்லக்கூடிய…

பொன்முடிக்கு நோ ! ஆர்டர் போட்ட லட்சுமணன்.. ஆடிப்போன எம்.ஆர்.கே

Posted by - May 24, 2025 0
விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்ட பேனர்களில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தலைமையில் விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக…

சொத்து வரியை வரும் 30-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும்: சென்னை மாநகராட்சி உத்தரவு

Posted by - September 27, 2023 0
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி என்பது பிரதான வருவாயாக உள்ளது. இதனால், நடப்பு அரை நிதியாண்டுக்கான சொத்து வரியை செலுத்த சென்னை மாநகராட்சி கடந்த ஜூன்…

அரசியல் கட்சிகளின் புது ஆயுதம்..

Posted by - July 1, 2025 0
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் ஒட்டுமொத்த இந்தியாவாலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. திமுக, அதிமுக என்ற பாரம்பரியம் மிக்க கட்சிகளுடன் சேர்ந்து…

இன்று கரையை கடக்கும் மாண்டஸ் புயல்.. 8 மாவட்டங்களில் அதிகனமழை கொட்டும் – வானிலை மையம் அலெர்ட்

Posted by - December 9, 2022 0
Cyclone Mandous | திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *