தவெக தொண்டர்களே! பிறந்த நாளில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் விஜய்? என்னவா இருக்கும்?

325 0

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் அடுத்த மாதம் வரும் அவருடைய பிறந்த நாளில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று கருதப்படுகிறது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.  ஆளுங்கட்சியான திமுக தங்களது 5 ஆண்டுகால ஆட்சி திட்டங்கள், கூட்டணியை வலுப்படுத்துவது எனவும், அதிமுக ஏற்கனவே பா.ஜ.க.வுடன் கூட்டணியை அமைத்தும் தங்கள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது.

தவெக-வுக்கு முதல் தேர்தல்:

தமிழக சட்டமன்ற தேர்தல் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சூடுபிடித்திருப்பதற்கு காரணம் நடிகர் விஜய் ஆவார். அறிமுக அரசியல்வாதியாக வரும் தேர்தலில் அவருடைய தமிழக வெற்றிக் கழகம் களமிறங்குகிறது. கடந்தாண்டு பிப்ரவரியில் அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜய், கடந்தாண்டு பிற்பாதியில் இருந்துதான் அரசியலில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

நடப்பாண்டு முதல் தீவிரமாக அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், பூத் கமிட்டியை வலுப்படுத்துதல் உள்ளிட்ட கட்சியை அடிமட்டத்தில் இருந்து வலுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், மக்களை தவெக பக்கம் இழுக்கும் முயற்சியாக விஜய் விரைவில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

விரைவில் சுற்றுப்பயணம்?

விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்ற தகவல்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டே  இருக்கும் சூழலில், அவர் எப்போது இந்த பயணத்தை தொடங்குவார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக நேற்று பேசிய ஆதவ் அர்ஜுனா விஜய் வரும் டிசம்பர் மாதத்திற்குள் தனது சுற்றுப்பயணத்தால் பெரும் அதிர்வலையை ஏற்படுத்துவார் என்று கூறினார்.

பிறந்த நாளில் முக்கிய அறிவிப்பு:

விஜய்யின் பிறந்த நாள் அடுத்த மாதம் வர உள்ள நிலையில், அவருடைய பிறந்தநாள் பரிசாக அவரின் ஜனநாயகன் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக உள்ளது. அதனுடன் அவருடைய சுற்றுப்பயண அதிகாரப்பூர்வ அறிவிப்போ அல்லது அவர் சுற்றுப்பயணத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்குவார் என்றோ கருதப்படுகிறது.

விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தினர் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விஜய் சுற்றுப்பயணம் வருவதற்குள் பூத் கமிட்டியை வலுப்படுத்துவதுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கையையும் அதிகரிக்க கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடப்பதால் ஆளுங்கட்சியான திமுக தங்களது ஆட்சியைத் தக்க வைக்க பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அடுத்தடுத்த நாட்களில் வெளியிடுவதற்கு பிரதான வாய்ப்புகள் உள்ளது.

கூட்டணியில் யார்?

அதேசமயம் தமிழக வெற்றிக் கழகத்தினருடன் இதுவரை எந்த பெரிய கட்சியும் கைகோர்க்கவில்லை. இதனால், ஒருபுறம் முக்கிய அரசியல் கட்சிகளை தங்கள் பக்கம் கூட்டணிக்கு கொண்டு வரவும் விஜய் தீவிரமாக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். மேலும், அக்டோபரில் விஜய் மிகப்பெரிய மாநாட்டை மதுரையில் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.

Related Post

மத்திய அரசு தமிழை புறக்கணிப்பதாக திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கூறுவது வேடிக்கையாக உள்ளது – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Posted by - October 19, 2024 0
மத்திய அரசு தமிழை புறக்கணிப்பதாக திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கூறுவது வேடிக்கையாக உள்ளதாக  மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள…

“ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” – அமைச்சர் மூர்த்தி பேச்சால் சர்ச்சை

Posted by - January 2, 2025 0
“பல வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது. தற்போது ஐந்து பேர் இறந்து போனால் கூட பெரிதாக பேசப்படுகிறது. சுதந்திரத்திற்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்து போனார்கள்.” மதுரை முக்குலத்தோர் இலவச…

சிறுமியை வீட்டில் அடைத்து 3 நாட்கள் பாலியல் வன்கொடுமை : ஓட்டுநர் கைது!

Posted by - February 18, 2025 0
தஞ்சாவூரில் 14 வயது சிறுமியை வீட்டில் அடைத்து 3 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தஞ்சை மாவட்டம் திருவோணம்…

அரையாண்டு லீவ் முடிந்தது..! தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு

Posted by - January 2, 2023 0
6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு. அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று மீண்டும் மாணவர்களுக்கு பள்ளிக்கூடம் திறக்கப்பட உள்ளது. மாணவர்களுக்கு கடந்த 15ஆம்…

பிரபல அரசியல் கட்சி நிர்வாகிகள், YouTuber-களின் அதிர்ச்சி வீடியோக்களை அடுத்தடுத்து லீக் செய்த மதன் ரவிச்சந்திரன்.. தமிழகமே பரபரப்பு..!

Posted by - March 16, 2023 0
பொறுப்புத்துறப்பு: இந்த செய்தி Mars Tamilnadu Youtube பக்கத்தில் வெளியான முதல் 4 விடியோக்களில் கூறியதை சுருக்கமாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.   எங்கும் அரசியல், எதிலும் அரசியல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *