திமுக தோல்வி அடைந்தால் தான் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்கும் – அன்புமணி தேர்தல் பரப்புரை..!!!

362 0

திமுக தோல்வி அடைந்தால் தான் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்கும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் மெய்யனூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு அங்கு கூடி இருந்த மக்களிடம் எழுச்சியுரையாற்றினார்.அப்போது பேசிய அவர் கூறியதாவது :

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் தொலைநோக்கு சிந்தனை உள்ளதா? திட்டமிடுதல் என்பது திமுக, அதிமுக இரு கட்சிகளுக்கும் கிடையாது . அடுத்த தலைமுறையை காக்க வேண்டுமென்றால் திமுகவை தோற்கடியுங்கள் .

பழைய ஓய்வூதியம் கேட்டு பல நாட்களாக போராடி வரும் தோழர்களுக்கு ஒன்றே ஒன்று மட்டும் சொல்கிறேன் . திமுக தோல்வி அடைந்தால் தான் மட்டுமே அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்கும் அவர்கள் இருக்கும் காலம் வரை நீங்கள் கேட்டது கனவாகவே இருக்கும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் தேர்தலின் முடிவில் எந்த கட்சி வெற்றிபெற போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

 

Related Post

வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

Posted by - December 5, 2025 0
தாயுமானவர் திட்டத்தில் டிசம்பர் 6, 7, 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் முதியோர் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம்…

திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் – உடல் தானம்

Posted by - March 25, 2025 0
நடிகரும், பிரபல கராத்தே மாஸ்டருமான ஷிஹான் ஹுசைனி, உடல்நலக்க்குறைவால் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறப்புக்கு முன்னதாகவே ஷிஹான் ஹுசைனி, தனது உடலை தானம் செய்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் ஹுசைனி…

தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கம் – விஜயின் ஓராண்டு அரசியல் பயணம் – தமிழக அரசியலில் தாக்கம்?

Posted by - February 2, 2025 0
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாமாண்டு தொடக்கநாளை ஒட்டி, அக்கட்சி தலைவர் விஜய் இன்று பல்வேறு தலைவர்களின் சிலையை திறந்து வைக்க உள்ளார். தலைவர்கள் சிலையை திறக்கும் விஜய்:…

இது கூட தெரியாம இருக்கீங்க.. CAA-விற்கு எதிராக குரல் கொடுத்த விஜய்.. வெளுத்து வாங்கிய மக்கள்

Posted by - March 12, 2024 0
விஜய் நடிகர் விஜய் கடந்த மாதம் தன்னுடைய அரசியல் கட்சியை துவங்கினார். தமிழக வெற்றிக்கழகம் எனும் பெயரில் துவங்கப்பட்டுள்ள இக்கட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபத்தில் தான்,…

‘இந்தி தெரியாது போடா’ என சொல்லிவிட்டு இப்ப ‘கேலோ இந்தியா’-வாம்… சூடு, சொரணை இல்லாத உதயநிதி – நடிகை விந்தியா விமர்சனம்

Posted by - January 29, 2024 0
திமுக இளைஞரணி மாநாடு பயனுள்ளதாக இல்லை என்றும், அது சர்க்கஸ் மாநாடு என அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் நடிகை விந்தியா கிண்டலடித்துள்ளார். பழனியில் முன்னாள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *