தீர்ப்பு வழங்கியதற்காகவே மோசமாக விமர்சிக்கின்றனர்: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

151 0

சென்னை: வழக்குகளில் தீர்ப்பு வழங்கியதற்காக நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பின்புலம் குறித்து சமூக வளைதளத்தில் மோசமாக விமர்சிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

யூடியூப் மற்றும் சமூக வளைதளங்களில் கிறிஸ்டில்லா பதிவிட்ட வீடியோ மற்றும் கருத்துகளை நீக்கக் கோரி சமையல்கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘ஆடை வடிவமைப்பாளர் கிறிஸ்டில்லா, தனக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பதாக யூடியூப் மற்றும் சமூக வளைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதனால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. அதனால், அவரது கருத்துக்களை யூடியூப்களில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாதம்பட்டி ரங்கராஜன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “சமையல் கலை நிபுணர் ரங்கராஜன், ஸ்ருதி என்பவரை கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். தொழிலில் வளர்ச்சியடைந்த நிலையில் ஆடை வடிவமைப்பாளரான கிறிஸ்டில்லாவுடன் தொழில் ரீதியாக பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவருக்கும் தொழிலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கிறிஸ்டில்லாவுக்கு கோபம் ஏற்பட்டது.இதையடுத்து தன்னை ஏமாற்றி விட்டதாகவும், மோசம் செய்து விட்டதாகவும் கிறிஸ்டில்லா பேட்டி மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால், சமூகத்தில் ரங்கராஜனுக்கு இருந்த நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளது. தொழிலில் ஏற்பட்ட இழப்பு தொடர்பாகவும் தனியாக வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ளது” என்று வழக்கறிஞர் வாதிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், “ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்காக நீதிபதிகள் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்படுகின்றனர். அவர்களின் செயல்பாடுகளுக்கு கலர் சாயம் பூசப்படுகிறது. குடும்பத்தினர் மற்றும் பின்புலங்கள் விமர்சிக்கப்படுகிறது. சமூக வளைதளங்களில் அவர்களுக்குத் தேவையானதை எழுதுவார்கள். அதை நாம் கவனத்தில் கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும். சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வருபவர்கள் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவது இயல்பானது.

கிறிஸ்டில்லா குற்றச்சாட்டு குறித்து மாதம்பட்டி ரங்கராஜன் ஆதாரங்களுடன் மறுக்க முடியுமா? அனைத்துக்கும் ஆதாரங்கள் உள்ளதா? தொடர்புக்கான காரணங்களை மறுக்க முடியுமா? என கேள்வி எழுப்பிய நீதிபதி, கிறிஸ்டில்லா தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்.22-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

Related Post

asdfghnm e1777009634491

85%-ஐ கடந்த வாக்குப்பதிவு – ஸ்டாலின் Vs எடப்பாடி Vs விஜய் Vs சீமான் – CM வேட்பாளர்களின் நிலை என்ன?

Posted by - April 24, 2026 0
Tamilnadu Assembly Election 2026 Vote Percentage: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளவர்களின், தொகுதிகளில் பதிவான வாக்குகளின் விவரங்களை இங்கே அறியலாம். Tamilnadu Assembly…
unnamed

திமுக வார் ரூமில் ஓய்வு பெற்ற காவல்துறை உயரதிகாரிகள்!

Posted by - April 15, 2026 0
திமுகவின் வார் ரூம் எனும் கட்டளை மையத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் உயர் அதிகாரிகள் பணியாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் சமயத்தில் யதார்த்தமான கள நிலவரத்தை கண்காணித்து,…
CHT

விஜய்க்கு விசில் சின்னம்..

Posted by - January 22, 2026 0
முதன்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் தவெக-விற்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 4 மாதங்களுக்குள் நடைபெற உள்ள நிலையில், மிகப்பெரிய…
Generated Image February 09 2026 3 52PM

‘மார்ச் 1ல் முக்கிய முடிவு – மாநாடு’ திமுக மாஸ்டர் ப்ளான்..!

Posted by - February 9, 2026 0
’கே.என்.நேரு தலைமையில் ஏ.வே.வேலு உள்ளிட்டோரை உள்ளடக்கிய தொகுதி பங்கீட்டு குழுவை திமுக அமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது’ சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தன்னுடைய  பிரச்சாரத்தை தீவிரமாக…

”காக்கா, தற்குறி கூட்டம்.. மழையில பேசுவியா?” – விஜயை அடித்த சீமான், திருப்பிக் கொடுக்கும் தவெக

Posted by - September 15, 2025 0
தவெக தலைவர் விஜய்க்கு கூடியது காகங்கள் மற்றும் தற்குறி கூட்டம் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். மக்கள் பிரச்னைகளை கூட…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *