தீ தளபதி… வாரிசு இரண்டாவது சிங்கிள் வெளியானது

308 0

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் வாரிசு படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகியிருக்கிறது. பாடலை சிம்பு பாடியிருக்கிறார்.

நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க சரத்குமார், பிரபு உள்ளிட்ட பலர் படத்தில் நடித்திருக்கின்றனர்.தில்ராஜு தயாரித்திருக்கிறார், தமன் இசையமைத்திருக்கிறார். படத்திற்கு ஆந்திர திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முட்டுக்கட்டை போட முயல படம் திட்டமிட்டப்படி பொங்கலுக்கு வெளியாகுமா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்திருந்தது. ஆனால் தடைகளை தாண்டி படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியிருக்கிறது. துணிவு படம் பொங்கலுக்கு வெளியாவதால் வாரிசு Vs துணிவு என்ற போட்டி உருவாகியிருக்கிறது.

இதற்கிடையே வாரிசு படத்தின் முதல் சிங்கிளான ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. பாடலை விஜய்யும், மானசியும் பாட பாடலாசிரியர் விவேக் எழுதியிருந்தார். இதுவரை 75 மில்லியனுக்கும் அதிகமானோர் பாடலை யூட்யூப்பில் பார்த்திருக்கின்றனர்.

இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாடலான  ‘தீ தளபதி’ பாடல் இன்று வெளியாகுமென்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பாடலானது தற்போது வெளியாகியிருக்கிறது. 30 வருடங்களை நிறைவு செய்திருக்கும் விஜய்க்கு இந்தப் பாடல் சமர்ப்பிக்கப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்தப் பாடலை சிம்பு பாடியிருக்கிறார். முதல்முறையாக விஜய்க்கு எஸ்டிஆர் குரல் கொடுத்திருப்பதால் இரண்டு பேரின் ரசிகர்களும் பாடலை கொண்டாடிவருகின்றனர்.

முன்னதாக, தமன் குறித்து பேசியிருந்த வம்சி பைடிபள்ளி, முதல்முறையாக விஜய் படத்துக்கு தமன் இசையமைத்திருக்கிறார். அவர் எவ்வளவு ஈடுபாட்டோடு உழைத்தார் என்பதை நீங்கள் படம் பார்க்கும்போதும், பாடல்களை கேட்கும்போதும் உணர்ந்துகொள்ளலாம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Post

நடிகர் தனுஷ்-க்கு எதிரான வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

Posted by - July 10, 2023 0
நடிகர் தனுஷ், நடிகை அமலா பால் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ‘வேலையில்லா பட்டதாரி’. இந்த படத்தை வொண்டர்பார் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக நடிகர் தனுசும்,…

திரிஷாவுடன் மட்டும் காமினேஷன் போட்டோஷூட்!..லியோ படக்குழுவை அறவே மதிக்காமல் சென்ற விஜய்!

Posted by - July 22, 2023 0
மாஸ்டர் படத்தை தொடர்ந்து லியோ படத்தின் மூலம் விஜய் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாம் முறையாக கூட்டணி வைத்துள்ளார். இதில் பல நட்சத்திரங்கள் பட்டாளமே நடித்துள்ளனர். இதனால்…

லியோவில் விஜய்யுடன் மோத போகும் மற்றும் ஒரு நடிகர்..லோகேஷ் செய்யப்போகும் தரமான செய்கை!!

Posted by - April 5, 2023 0
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம்…

ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள வீரன் படத்தின் முதல் விமர்சனம்!

Posted by - June 2, 2023 0
ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் இன்று (ஜூன் 2) வெளியான திரைப்படம் தான் வீரன். இப்படத்தை சத்யஜோதி தியாகராஜன் தயாரித்துள்ளார். வீரன்…

குஷ்புவிடம் வருத்தம் தெரிவித்த நடிகர் விஜய் – எதற்க்கு தெரியுமா..?

Posted by - July 20, 2024 0
திரைப்படத்தில் ஏற்பட்ட சில தவிர்க்க முடியாக சூழலால் கோபமாக இருந்த நடிகை குஷ்புவிடம் நடிகர் விஜய் வருத்தம் தெரிவித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் மற்றும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *