துபாயில் வீடா, கார் ரேஸ் எனக்கா? – கொந்தளித்து பேசிய நிவேதா பெத்துராஜ்

227 0

தொடர்ந்து கண்ணியமான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புவதாகவும், தன் மீது அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் கார் பந்தயம் நடத்த நான் தான் காரணம் என்ற குற்றச்சாட்டுக்கு நடிகை நிவேதா பெத்துராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அப்படத்தைத் தொடர்ந்து டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், யூடியுபர் ஒருவர், அண்மையில் நிவேதா பெத்துராஜ் குறித்து அவதூறாக பேட்டியளித்திருந்தார். அவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் குறித்து எக்ஸ் தளத்தில் நிவேதா பெத்துராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், தனக்காக ஏகப்பட்ட பணம் செலவு செய்யப்படுவதாக பொய் பேசுவர்கள், ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசம் செய்யும் முன்பு அந்த தகவலை சரிபார்ப்பார்கள் என நினைத்து அமைதியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

2002 ஆம் ஆண்டு முதல் தனது குடும்பம் துபாயில் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும், 16 வயதிலிருந்தே பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். திரையுலகிலும் தனக்கு பட வாய்ப்புகளை தரும்படியோ யாரிடமும் கேட்டதில்லை என்றும், தான் எப்போதும் பணத்திற்காக பேராசை கொண்டதில்லை என்றும் கூறியுள்ளார்.2013 ஆம் ஆண்டு முதல் கார் பந்தயம் தனது விருப்பமாக இருப்பதாக கூறியுள்ள நிவேதா, உண்மையில் சென்னையில் கார் பந்தயம் நடத்தப்பட இருப்பது குறித்தும் தனக்கு தெரியாது என விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து கண்ணியமான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புவதாகவும், தன் மீது அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Post

முகப்பருக்களைத் தடுக்க… தவிர்க்க..

Posted by - December 2, 2022 0
முகத்துக்கு மஞ்சள் பூசுவதை முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள். பருக்கள் ஏற்பட, மலச்சிக்கல் ஒரு முக்கிய காரணி. சுத்தமான காற்றும், சூரிய ஒளியும் முகத்துக்குத் தேவை. அவ்வப்போது காலையில் 7…

திமுக-அதிமுக பங்காளிங்க, எனக்கு மச்சான் விஜய் தான்.. தளபதிக்கு ஸ்கெட்ச் போடும் பெரும் தலை

Posted by - August 21, 2024 0
தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலிலேயே அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் சட்டமன்ற தேர்தல் தான் அவரது தொடக்கமாக இருக்கிறது.…

14,121 உற்பத்தியாளர்கள் மூலம் தினமும் 1,38,000 லிட்டர் பால் கொள்முதல் – கலெக்டர் தகவல்

Posted by - November 15, 2023 0
திருப்பூர்: தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கால்நடை, பால்வளம்,மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி வீரபாண்டி பிரிவில்…

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் காலமானார்: தொண்டர்கள், ரசிகர்கள் கண்ணீர்

Posted by - December 28, 2023 0
சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள்…

அன்றே மோசடி செய்த நிகிதா.. அதுவும் அவர் பேர்ல? அஜித்குமார் மரண வழக்கில் புதிய திருப்பம்

Posted by - July 3, 2025 0
2011ல் துணை முதலமைச்சரின் பிஏ-வை வைத்து வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கின் எஃப் ஐஆர் தற்போது வெளியாகியுள்ளது. திருப்புவனம் இளைஞர் அஜித்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *