தேர்தலுக்கு பின் கழகத்திலும் அரசியலிலும் பல மாற்றங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

199 0

பிப்ரவரி 26ஆம் தேதி முதல் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் வீடுவீடாகச் சென்று பரப்புரை மேற்கொள்ளப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பாஜகவின் அநீதிகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் திமுக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் முதல்கட்டமாக பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் விருப்ப மனுவும் பெற்று வருகிறது. தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் தொகுதிகளையும் கைப்பற்றிட திமுக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. சில நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளதால், அனைத்து கட்சிகளும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் உள்ளிட்டோருடன் முதலமைச்ச மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக அலோசனை மேற்கொண்டார்.

அப்போது, தேர்தல் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. 4,000க்கும் அதிகமான கோரிக்கைகள் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவுக்கு வந்திருக்கிறது. வரும் பிப்ரவரி 26ஆம் தேதி முதல் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் வீடுவீடாகச் சென்று பரப்புரை மேற்கொள்ளப்படும். பாஜகவின் அநீதிகள், கழக அரசின் சாதனைகள் பட்ஜெட் அம்சங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அடிமட்டத் தொண்டர் வரை அனைத்து விவரங்களும் தலைமைக்குத் தெரியும். தேர்தலுக்குப் பிறகு பல மாற்றங்களை கழகத்திலும், அரசியலிலும் எதிர்பார்க்கலாம்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதன் பிறகு டி.கே.எஸ் இளங்கோவன் தீர்மானங்களை வாசித்தார்.

Related Post

ஒரே நாடு ஒரே தேர்தல் – தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

Posted by - December 13, 2024 0
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கருத்தை முதலமைச்சர் ஸ்டாலின் படிக்கவில்லையோ என்ற சந்தேகம் எழுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

முலாம்பழம்.. சர்க்கரை நோயாளியின் “சூப்பர்” சாய்ஸ் பழம்.. வெறும் வயிற்றில் முலாம்பழத்தை சாப்பிடலாமா?

Posted by - January 9, 2024 0
சென்னை: முலாம்பழத்தின் நன்மைகள் என்னென்ன தெரியுமா? முலாம்பழம் ஜூஸ் சாப்பிட்டாலே போதும், ஏகப்பட்ட உபாதைகள் தீரும். வைட்டமின் A, B, C, B1, B6 K, கால்சியம்,…

ஒரே “பட்டை” போதுமே.. ஆச்சரியத்தை அள்ளி அள்ளி தரும் இந்த மரத்து பட்டை.. பெஸ்ட் “வலி நிவாரணி” பவுடர்

Posted by - December 30, 2023 0
சென்னை: முருங்கை மரத்தை போலவே, வேப்ப மரத்தை போலவே, தவிர்க்கவே முடியாதது ஆலமரம்.. இந்த மரத்தின் மொத்த பாகங்களுமே நன்மைகளை தரக்கூடியது.. அந்தவகையில், ஆலமரத்தின் பட்டைகளின் ஒருசில…

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34 லட்சம் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

Posted by - May 28, 2023 0
இந்த பணத்தை பெற்றதற்கான நியாயப்பூர்வமான காரணங்கள் எதையும்  அறக்கட்டளையின் நிர்வாகிகளால் தெரிவிக்க இயலவில்லை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளைக்கு சொந்தமான வங்கிக் கணக்கில் இருந்த 34 லட்சத்து…

”அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமார்” – 5 காவலர்கள் கைது, சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு

Posted by - July 1, 2025 0
சிவகங்கையில் அஜித்குமார் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களையும் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கையில் அஜித்குமார் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. அஜித்குமார் மரண…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *