நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி
உடல்நலக் குறைவால் காலமானார். ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களுடன் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சென்னை: தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி (67), திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்துள்ள பொன்னவராயன் கோட்டையைச் சேர்ந்தவர் சிவநாராயண மூர்த்தி. இயக்குநரும், நடிகருமான விசு மூலம் தமிழ் திரையுலகில் இவர் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டார். இவருடைய முதல் படம் பூந்தோட்டம். பிரபல நகைச்சுவை நடிகர்களான விவேக் மற்றும் வடிவேல் அணியில் இணைந்து பல நகைச்சுவை காட்சிகளில் நடித்து பிரபலமான காமெடியனாக அறியப்பட்டார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித், விஜய் உட்பட பல திரை நட்சத்திரங்களுடன் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது அவர் சொந்த ஊரில் வசித்து வந்த நிலையில், திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு நேற்றிரவு 8.30 மணியளவில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு அவருடைய சொந்த ஊரில் இன்று மதியம் 02.00 மணிக்கு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Related Post
ராகுகாலம்: அதன் பலன்கள் & நாள் வாரியாக நேரம்…
#Rahukalam #RahukalamToday #TamilNews #TamilAstrology#TamilUpdates #AstrologyTamil #TodayRahukalam #TamilDailyNews ராகுகாலம் என்பது ஒவ்வொரு நாளும் ஓர் நிரந்தரமான நேரத்தில் வரும் அசுப காலம். இந்த நேரத்தில் புதிய…
நாளைமறுநாள் வரை தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும்…
தஞ்சையில் மோதல்: பேருந்தை மற்றொரு பேருந்தின் மீது மோதியதால் பரபரப்பு..
இரண்டு பேருந்திற்க்கும் இடையே யாரும் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தஞ்சை: பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சைக்கு பேருந்துகளை இயக்குவதில் இரண்டு தனியார் பேருந்து டிரைவர்களிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பேருந்து…
தளபதியின் வரலாறு.! தவெக தலைவர் விஜய்க்கு 50ஆவது பிறந்தநாள்..!
தமிழ் சினிமாவில் தனக்கென்று ஓரிடத்தைப் பிடித்துள்ள நடிகர் விஜய், தற்போது அரசியல் கட்சித் தலைவராகவும் உருவெடுத்துள்ளார். பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பாடகி ஷோபா தம்பதிக்கு,…
இடத்தகராறு காரணமாக வழக்கறிஞர் உள்பட 2 பேர் வெட்டிக் கொலை – தென்காசியில் பரபரப்பு
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையே இடத்தகராறு நிலவியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் வழக்கறிஞர் அசோக் குமார்…
Categories
- MEMES (12)
- Uncategorized (1)
- அரசியல் (184)
- இந்தியா (470)
- உலகம் (174)
- சினிமா (815)
- தமிழ்நாடு (1,087)
- தமிழ்நாடு தேர்தல் 2026 (288)
- பொழுதுபோக்கு (698)
- விளையாட்டு (85)
Recent Posts
- ஓட்டு மிஷினில் 16வது இடம் விஜய்க்கா.? நோட்டாவிற்கா.? நடந்தது இது தான்- தேர்தல் ஆணையம் லேட்டஸ்ட் அப்டேட்

- “சபரீசன் ‘சூப்பர் சிஎம்’ ஆக செயல்படுகிறார்” – அண்ணாமலை குற்றச்சாட்டு

- அம்மா உணவகம் முதல் தாலிக்கு தங்கம் வரை? – முடங்கிய திட்டங்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கத் தயாராகும் இபிஎஸ்

- தொகுதி மறுவரையறை தொடர்பாக பொய் பிரசாரம் செய்யும் எதிர்கட்சிகள் – பிரதமர் மோடி

- ஆட்சிக்கு வந்தால் இவ்வளவும் இருக்கும்.. தவெக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்!
