நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: தமிழக-கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு

282 0

உடுமலை:

நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவை அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ் நோய் தமிழகத்தில் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதையொட்டி திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக-கேரள எல்லையில் உள்ள ஒன்பதாறு சோதனைச் சாவடியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.நிபா வைரஸ் பாதித்து இருவர் உயிரிழப்பு - கேரளா விரைந்த மத்திய குழு | Tamil  News 2 dead for Nipah Virus Kerala central team to assist state govt

குறிப்பாக கேரள மாநிலத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளதா? என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு எந்த இடத்திலும் இல்லை.

ஆனாலும் தமிழக-கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நிபா வைரஸ் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்றனர்.

Related Post

மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை ரூ.6,000… ரேசன் அட்டை இல்லாதவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு

Posted by - March 1, 2024 0
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரண…

இந்த 6 பழங்களில் ஒன்றை வெறும் வயிற்றில் சாப்பிடுவது உங்க ஆயுளை அதிகரிக்குமாம்… எப்படி தெரியுமா?

Posted by - December 15, 2023 0
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பழங்கள் அவசியமானவை என்று சிறு வயது முதலே நமது மனதில் பதியவைக்கப்பட்டள்ளது. ஆனால் சில பழங்களை நாம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கூடுதல்…

திமுகவையும், காங்கிரஸையும் நிராகரிக்க சென்னை தயாராக உள்ளது : பிரதமர் மோடி

Posted by - April 10, 2024 0
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், இந்த ஆற்றல் மிக்க நகரத்தில் ரோட்ஷோ என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். மக்கள் சேவையில் தொடர்ந்து கடினமாக உழைக்கவும்,…

8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Posted by - May 29, 2023 0
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. தமிழ்நாட்டில் 8…

வெறுமனே இந்த “மஞ்சள்” கலர் போதும்.. ஆச்சரியங்களை அள்ளி தரும் அதிசய உணவுகள்.. ஆயுசும் கூடும்.. அருமை

Posted by - November 18, 2023 0
சென்னை: உணவுகளில் இருக்கும் நிறங்களும் ஆரோக்கியம் தரக்கூடியவை.. கலர் கலர் காய்கறிகளே, உடலுக்கு நன்மையை தரும் என்கிறார்கள்.. அந்தவகையில், மஞ்சள் கலரையும் தவிர்த்து விட முடியாது. நீலம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *