SSS

நெல் சாகுபடி ஊக்கத்தொகை விவகாரம் – தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!

188 0

நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு தமிழகத்திற்கு உத்தரவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதிய கடிதத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேளாண் சார்ந்த அனைத்துத் தரப்பினரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையில் ஈடுபடுவது அவசியமானது என தெரிவித்துள்ளார்.

ஆனால், முதலமைச்சர் ஸ்டாலினும் அவரது கட்சியும் எதில் கைதேர்ந்தவர்களோ அதையே இப்போதும் தொடர்கிறார்கள் என்றும், மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே விரிசலை உண்டாக்குவது, பொய் பிம்பங்களைக் கட்டமைப்பதை தொடர்ந்து செய்து வருகிறார்கள் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

விவசாயிகளின் காவலர்களாகவும் தமிழ் மக்களின் பாதுகாவலர்களாகவும் காட்டிக்கொள்வதை முதலமைச்சர் தொடர்ந்து செய்து வருவதாகவும் விமர்சித்துள்ளார்.
பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களின் உள்நாட்டு உற்பத்தியை விரிவுபடுத்துவது என்பது தேவை மட்டுமல்ல, உத்திசார்ந்தது எனக் குறிப்பிட்டுள்ள அவர்,எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி குறைவாக இருப்பதால்தான் நாம் அதிகளவில் பாமாயிலை இறக்குமதி செய்கிறோம் என்பது முதலமைச்சருக்கு தெரியாதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

விவசாயிகளின் நலனில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அக்கறையில்லை என விமர்சித்துள்ள நிர்மலா சீதாராமன், சமையல் எண்ணெய் இறக்குமதிச் செலவைக் குறைப்பதன் மூலம் பொருளாதார நிலைத்தன்மையை அடைய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறியுள்ளார்.

மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட தகவல், தேசிய உணவுப் பாதுகாப்பிற்கான பொறுப்பைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு அழைப்பு என தெரிவித்துள்ள அவர், முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமே இதனை ஒரு சர்ச்சையாக்கி ஆதாயம் தேடப் பார்க்கிறார் என குற்றம்சாட்டியுள்ளார்.

அத்தியாவசியப் பயிர்களை உற்பத்தி செய்வதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படும்போது தான் உண்மையான உணவு இறையாண்மை ஏற்படும் எனக்கூறியுள்ள நிர்மலா சீதாராமன், மத்திய அரசுக்கு எதிரான வெற்றுப் பேச்சுக்களில் நேரத்தை வீணடிப்பதற்குப் பதிலாக, வெளிநாட்டு நலன்களுக்கு ஏன் வாய்ப்புகளை வழங்குகிறார் என்பதைப் தமிழக மக்களுக்கு விளக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

அனைத்து மாநிலங்களுக்கும் செலவினத் துறைச் செயலாளர் எழுதிய கடிதத்தை வெளியிடுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் சவால் விடுப்பது ஆச்சரியமளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ள அவர், இத்தகைய சவால்களை விடுப்பதன் மூலம் முதலமைச்சர் வெற்று வீரத்தையே வெளிப்படுத்துகிறார் என விமர்சித்துள்ளார்.

தேச நலனில் துளியும் அக்கறை கொண்ட எந்தவொரு முதலமைச்சரும், மத்திய அரசின் ஆக்கப்பூர்வமான ஆலோசனையை வரவேற்றிருப்பார்கள் எனக்கூறியுள்ள நிர்மலா சீதாராமன், ஆனால், ஸ்டாலின் ஒரு பயனுள்ள ஆலோசனையைத் திட்டமிட்டு ஒரு குறையாகச் சித்தரிக்கிறார் என தெரிவித்துள்ளார்.

மேலும், திமுகவைப் பொறுத்தவரை இந்தியாவின் உத்திசார்ந்த தேவைகளை ஒரு பொருட்டாக எடுத்து கொள்வதில்லை என்றும், அரசியல் ஆதாயம் தேடுவது மட்டுமே திமுகவின் நோக்கம் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Related Post

Generated Image January 02 2026 11 05AM

தமிழகத்தில் அடுத்த ஆட்சி எங்க ஆட்சி தான்.!

Posted by - January 2, 2026 0
தமிழகத்தில் ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என உறுதியோடு களத்தில் இறங்கியுள்ளது பாஜக, அந்த வகையில் பிரம்மாண்ட மோடி பொங்கல் விழாவில் தொடங்கி அடுத்த 2 மாதங்களுக்கு…

“பேச முடியாத அளவில் துயரத்தில் உள்ளோம்”- உருக்கமாக பேசிய ஆதவ் அர்ஜுனா

Posted by - October 11, 2025 0
த.வெ.க.வை முடக்கும் நோக்கில் செயல்படுவதாக அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளோம் என்று ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். த.வெ.க.வை முடக்கும் நோக்கில் செயல்படுவதாக அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளோம்…
Generated Image November 27 2025 10 36AM

விஜய் கட்சியில் ஜெயலலிதாவின் தளபதி செங்கோட்டையன்… கொங்கு மண்டலத்தில் கெத்து காட்டும் தவெக

Posted by - November 27, 2025 0
#Sengottaiyan அதிமுக மூத்த நிர்வாகியும், மாஜி அமைச்சருமான செங்கோட்டையன், அதிமுகவை ஒருங்கிணைக்க எடுத்த நடவடிக்கைகள் தோல்வி அடைந்ததையடுத்து தனது ஆதரவாளர்களுடன் விஜய் முன்னிலையில் தவெகவில் இன்று இணைந்தார்.…

இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா… விஜய் தங்க ஹோட்டல் இல்லை என்று கைவிரிப்பு

Posted by - September 8, 2025 0
விஜய் தங்குவதற்கு திருச்சியில் உள்ள ஹோட்டல் அதிபர்கள் இடம் கொடுக்க மறுத்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. திருச்சி: அரசியல் சதுரங்கத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் காய் நகர்த்துகின்றனர். ஆனால் இதெற்கெல்லாம்…

‘கீழயே நில்லுங்க – முகத்தை பார்க்க மாட்டேன்’ புஸ்ஸி ஆனந்த் மீது கடும் கோபத்தில் விஜய்..!

Posted by - July 31, 2025 0
’விஜயை வைத்து புதுச்சேரியில் முதல்வர் ஆவதுதான் புஸ்ஸி ஆனந்தின் நீண்ட நாள் திட்டம் என்பதை விஜய் மெல்ல, மெல்ல உணரத் தொடங்கிவிட்டார்’தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *