படுக்கையில் சிறுநீர் கழித்த காதலன்.. கடுப்பான காதலி.. கத்திக்குத்தில் முடிந்த பிரேக் அப் பார்ட்டி.!

361 0

படுக்கையிலேயே சிறுநீர் கழித்த ஆத்திரத்தில் இளைஞரை அவரது காதலி கத்தியால் குத்திய சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது.

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தின் ஈஸ்ட் படேன் ரோக் பகுதியில் வசிப்பவர் 25 வயதான பிரியானா லாகோஸ்ட். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் சுமார் 2 ஆண்டுகளாக காதல் உறவில் இருந்துள்ளார். இந்த இருவருக்கும் சில கருத்து வேறுபாடு இருந்த நிலையில், பிரேக் அப் செய்து கொள்ளலாம் என கடந்த வாரம் முடிவெடுத்துள்ளனர்.

சரி அதற்கு முன்பாக பார்ட்டி செய்யலாம் என கடந்த ஜனவரி 13ஆம் தேதி வெளியே சென்று ஒன்றாக மது அருந்தி விட்டு வீடு திரும்பியுள்ளனர். இருவரும் இரவு படுத்து தூங்கிய நிலையில், காலையில் விழித்து பார்த்த போது காதலி பிரியானாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மது போதையில் தூங்கிக்கொண்டிருந்த அவரது பாய்பிரண்ட், இருவரும் ஒன்றாக படுத்திருந்த படுக்கையிலேயே சிறுநீர் கழித்துள்ளார்.கைது செய்யப்பட்ட இளம்பெண் பிரியானா

இதை விழித்து பார்த்ததும் ஆத்திரம் தாங்காத காதலி பிரியானா தனது பாய் பிரெண்டை அடிக்கத் தொடங்கியுள்ளார். தூங்கிக்கொண்டிருந்த அந்த பாய்பிரெண்ட் அடிவாங்கிக்கொண்டே விழித்த நிலையில், படுக்கையில் இருந்து விலகி வெளியே ஓடிய போது, பிரியனா சமையல் அறை கத்தியை வைத்து இளைஞரை குத்தியுள்ளார்.

இதில் அந்த நபரின் நுரையீரல் படுகாயமடைந்துள்ளது. சம்பவத்திற்குப் பின் காதலி பிரியானாவே பதறிப்போய் அந்த இளைஞரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளார். இந்நிலையில், காவல்துறை பிரியனாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. மேலும், அவர் மீது கொலை முயற்சி பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளது.

Related Post

பகல் நேரத்தில் அதிகமாக தூக்கம் வருதா..? இந்த விஷயங்களை தவிர்த்தால் சரியாயிடும்..!

Posted by - December 3, 2022 0
பகலில் மந்தமாக இருப்பது எல்லோருக்கும் எப்போதாவது ஒருமுறை ஏற்படும். இருப்பினும், நீங்கள் அடிக்கடி இந்த பிரச்சனையை சந்திப்பதாக கவனித்திருந்தால், நீங்கள் ஹைப்பர் சோம்னியாவை கொண்டுள்ளீர்கள் என்று அர்த்தம்.…

பாக்., இல்ல பிரச்னையே சீனா தான் – என்னெல்லாம் செய்றாங்க தெரியுமா? இந்தியாவை எச்சரித்த அமெரிக்கா

Posted by - May 26, 2025 0
இந்தியாவின் பிரதான எதிரி சீனா தான் என அமெரிக்கா பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. இந்தியாவிற்கு பாகிஸ்தான் துணை பாதுகாப்பு பிரச்னை மட்டுமே என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ”பாகிஸ்தானை வளர்த்துவிடும்…

1200 அடி உயரத்தில் ஊசலாடிய கேபிள் கார் – 14 மணி நேரத்துக்கு பின் குழந்தைகள் உள்பட 8 பேரும் மீட்பு

Posted by - August 23, 2023 0
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ளது கைபர் பக்துன்வா பிராந்தியம். இது கரடுமுரடான மலைகளும், ஆழமான பள்ளத்தாக்குகளும், நதிகளும், சமநிலைகளும் நிறைந்த ஒரு பிரதேசம் ஆகும். இங்குள்ள பள்ளத்தாக்குகளைக்…

வங்காளதேசத்தில் தீப்பிடித்து எரிந்த ரெயில்: 5 பேர் உடல் கருகி பலி

Posted by - January 6, 2024 0
வங்காளதேசம் நாட்டின் தலைநகர் டாக்காவிற்கு நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள ஜேஸ்சோர் நகரில் இருந்து பெனாபோல் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. திடீரென அந்த ரெயிலில் தீப்பிடித்தது.…

சிம் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி.. வருகிறது E-Sim.. ஆண்ட்ராய்டு போன் வைத்து உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

Posted by - January 19, 2023 0
Android 13 | இவை சாத்தியமானால், நிறுவனம் தனது செயல்பாட்டில் துரிதமாக எந்த தடை மற்றும் தாமதமின்றி செயல்பட வேண்டும். இதற்கு ஆப்பிள் நிறுவனமே மிகப்பெரிய உதாரணம்!…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *