பல வருடங்களுக்கு பின் புதிய படத்தில் மீண்டும் இணையும் சூர்யா – ஜோதிகா – வெளியான முக்கிய அப்டேட்..!!!

183 0

திரைவாழ்க்கையிலும் நிஜ வாழக்கையிலும் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த சூர்யா – ஜோதிகா பல வருடங்களுக்கு பின் புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா . தனது கடின உழைப்பால் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில் நடிகை ஜோதிகாவை நீண்ட நாட்களாக காதலித்து வந்த நடிகர் சூர்யா இரு வீட்டார் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர் . இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர்.

கடந்த 1999ம் ஆண்டு வெளிவந்த பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் முதன் முறையாக சேர்ந்து நடித்த இவர்கள் இருவருக்கும் ஜோடி பொருத்தம் நன்றாக இருந்ததால் அடுத்தடுத்த படங்களில் இணைந்து நடித்தனர்.

திருமணத்திற்கு பின் திரையில் ஜோடி சேராத இவர்கள் எப்போது ஒரே படத்தில் சேர்ந்து நடிக்க போகிறார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது.

பல வருடங்களுக்கு பின் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்கும் இந்த படத்தை பெங்களூரு டேஸ் படத்தை இயக்கிய அஞ்சலி மேனன் அல்லது சில்லுக்கருப்பட்டி பட இயக்குநர் ஹாலிதா சமீம் ஆகிய இருவரில் ஒருவர் இயக்கலாம் எனக் கூறப்படுகிறது.

நீண்ட நெடு நாட்களுக்கு பின் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து திரைப்படத்தில் நடிக்க உள்ளது அவர்களது ரசிகர்கள் மத்தியில் புதுவித மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

சம்பளத்துக்கு மேல் ஜெயிலர் படத்தால் ரஜினிக்கு கிடைத்த ஷேர்- மொத்தம் இத்தனை கோடி பெற்றாரா?

Posted by - September 1, 2023 0
ரஜினியின் ஜெயிலர் நடிகர் ரஜினி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் என்ற திரைப்படம் படு மாஸாக வெளியாகி இருந்தது. நெல்சன் திலீப்குமார் இயக்க சன்…

சினிமாவை விட்டு போகிறார் சாய் பல்லவி.. காரணம் இதுதானா

Posted by - November 29, 2022 0
சாய் பல்லவி தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் சாய் பல்லவி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கார்கி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.…

Kottukkaali Movie Review: ஆக்ரோஷமா? அமைதியா? – கொட்டுக்காளி படத்தின் விமர்சனம் இதோ!

Posted by - August 23, 2024 0
உலகளவில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகளை வென்ற கொட்டுக்காளி படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று (ஆகஸ்ட் 23) தியேட்டரில் வெளியாகியுள்ளது. இந்த படம் பின்னணி…

எங்களால் முடிந்த வரை முயற்சித்தோம்.. துருவ நட்சத்திரம் ரிலீஸ் தள்ளிவைப்பு குறித்து கவுதம் வாசுதேவ் மேனன் உருக்கம்

Posted by - November 24, 2023 0
விக்ரம் நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் இன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், படம் இன்று வெளியாகாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது . கௌதம் வாசுதேவ் மேனன்…

கவர்ச்சியில் ஹீரோயின்களுக்கு போட்டியாக வந்த அட்லீயின் மனைவி – வைரல் போட்டோஸ்

Posted by - March 11, 2024 0
இந்திய சினிமாவில் இருக்கும் மாஸ் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் அட்லி. தனது குருவை போலவே பிரம்மாண்டத்திற்கு பெயர்போன இயக்குனர் என்ற பெயரை பெற்றுள்ள இயக்குனர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *