பள்ளிகள் திறப்பு எப்போது? தள்ளிப்போக வாய்ப்பு? அமைச்சர் அன்பில் சொன்னது என்ன?

223 0

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பிறகான பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஏற்கெனவே அறிவித்து இருந்த நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா என்று அண்மையில் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ’’ இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு ஜூன் 2ஆம் தேதி என்று சொல்லி இருக்கிறோம். அந்த நேரத்தில் வெயிலின் தன்மையைப் பார்த்து, தமிழக முதல்வர் அலுவலகத்தில் வானிலை குறித்து பிரத்யேக குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அவர்கள் சொல்வதைப் பொறுத்து, பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும்’’ என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தார்.

குறைந்த கோடை வெயில்

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வந்தாலும், பரவலான இடங்களில் பருவ மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் சற்றே குறைவாக உள்ளது.

முன்கூட்டியே பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கக் கோரிக்கை

இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஏராளமான மாணவர்களும் பெற்றோர்களும் கோடை விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் திரும்பி வர வேண்டும் என்பதால், முன்கூட்டியே பள்ளிகள் திறப்பு குறித்து முறையாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.

Related Post

திரைப்படங்கள் வெளியீட்டில் உதயநிதி தலையீடு… எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Posted by - January 21, 2023 0
தமிழ்நாடு போதைப் பொருட்கள் நிறைந்த மாநிலமாக உள்ளது என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அரியலூர் பேருந்து நிலையம் அருகே எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று…

பிடிஆர் வசமாகும் 2 முக்கிய இலாகாக்கள்..! ஸ்டாலின் புது கணக்கு – ஆட்டம் போட்டவர்களுக்கு ஆப்பு?

Posted by - April 25, 2025 0
அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு புதிய இலாக்காக்கள் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.…

3 பேரின் பதவி பறிப்பு – காரணம் என்ன..?

Posted by - September 30, 2024 0
தமிழக அமைச்சரவையில் புதியதாக நான்கு பேர் இணைந்திருக்கும் நிலையில், மூன்று பேரின் பதவியும் பறிக்கப்பட்டிருக்கிறது. புதியவர்களுக்கு பதவி கிடைத்ததற்கான காரணம் குறித்தும், பழையவர்களின் பதவி பறிப்பிற்கான பின்னணி…

ரூ.1000 உரிமைத்தொகை.. தமிழ்நாடு அரசின் இணைய பக்கத்தை திறந்தால் ஷாக்.. என்ன இது? ஏன் இப்படி?

Posted by - September 25, 2023 0
சென்னை: மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை சரிபார்க்க தொடங்கப்பட்ட இணையதளம் கடந்த 3 நாட்களாக இயங்காமல் இருப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான…

சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்… புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு…

Posted by - February 19, 2024 0
Tamil Nadu Budget 2024: மாபெரும் தமிழ்க் கனவு என்ற தலைப்பின் கீழ் ஏழு தலைப்புகளில் முக்கிய அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும்: தமிழக அரசு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *