பாண்ட்யா கூறிய ஒரு வார்த்தை.. கடைசி ஓவரில் இந்தியா வெற்றி கண்டது எப்படி? சூர்யகுமார் சுவாரஸ்ய தகவல்

273 0

லக்னோ: நியூசிலாந்து அணியுடனான 2வது டி20 போட்டியில் வெற்றி பெறுவதற்கு மிகவும் கடினமாக இருந்த போதும், பாண்ட்யா கூறிய ஒரே ஒரு வார்த்தை வெற்றி பெற வைத்ததாக சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.
இரு அணிகளும் மோதிய 2வது டி20 போட்டி லக்னோவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி கடைசி ஓவரில் 4 விக்கெட்கள் இழப்புக்கு த்ரில் வெற்றியை பதிவு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 99 ரன்களை மட்டுமே அடித்தது. மிகவும் குறைவான இலக்கை நோக்கி களமிறங்கினாலும் 19.5 ஓவர்களில் தான் இந்திய அணி வெற்றி கண்டது.

திடீர் தடுமாற்றம் முதல் போட்டியில் ஓரளவிற்கு அதிரடியாக இருந்த சூழலில் 2வது போட்டியில் ரசிகர்கள் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு மிக கடினமான பிட்ச்சாக இருந்தது. அதிக ஸ்பின் இருந்ததால் பேட்ஸ்மேனால் பந்தை கணிக்கவே முடியவில்லை. குறிப்பாக 2வது இன்னிங்ஸில் படு மோசமாக இருந்தது. சுப்மன் கில் (11), இஷான் கிஷான் (19), ராகுல் திரிபாதி (13), வாஷிங்டன் சுந்தர் (10) என அடுத்தடுத்து வெளியேறினர். கேப்டன் இன்னிங்ஸ் 70 /4 என இந்திய அணி தடுமாறிய போது தான் துணைக்கேப்டன் சூர்யகுமார் – கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி காப்பாற்றினர். எப்போதுமே அதிரடியாக ஆடும் சூர்யகுமார் யாதவ் மிகவும் நிதானமாக விளையாடினார். கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவை என வந்த போதும், அவர் நிதானமாக 5வது பந்தில் தூக்கி அடித்து வெற்றி பெற வைத்தார். சூர்யகுமார் விளக்கம் இந்நிலையில் இதுகுறித்து சூர்யகுமார் யாதவ் பேசியுள்ளார். அதில், புதுவிதமான சூர்யகுமாரை இன்று பார்த்திருப்பீர்கள். சூழலுக்கு ஏற்றார் போல நடப்பது முக்கியமாகும். வாஷிங்டனின் விக்கெட் வீழ்ந்ததும், கடைசி வரை அங்கு களத்தில் இருக்க வேண்டும் என நினைத்தேன். இது ஒரு சவாலான விக்கெட். கடைசி ஓவரில் ஒரே ஒரு அதிரடி ஷாட் தேவைப்பட்டது. அப்போது பதற்றத்தை அடக்குவது கடினமாகும். பாண்ட்யாவின் வார்த்தைகள் 5வது பந்தின் போது ஹர்திக் பாண்ட்யா என்னிடம் நேராக வந்த இந்த பந்தில் நீ ஆட்டத்தை முடிக்க வேண்டும் எனக்கூறினார். அவரின் அந்த வார்த்தைகள் எனக்கு நம்பிக்கை கொடுத்தது. அதன் விளைவாகவே தைரியமாக தூக்கி அடித்து வெற்றி பெற்றோம். 2வது இன்னிங்ஸில் பிட்ச்- இப்படி மாறும் என எதிர்பார்க்கவே இல்லை. எனினும் அதற்கேற்றார் போல ஆடிவிட்டோம் என சூர்யகுமார் கூறினார்.

Related Post

சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் தோல்வி! சோகத்தில் ரசிகர்கள்!

Posted by - April 9, 2025 0
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 22-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்…

ப்ளே ஆஃப் சுற்றை உறுதிசெய்யுமா சென்னை?

Posted by - May 20, 2023 0
சென்னை அணியைப் போன்றே, 15 புள்ளிகளைப் பெற்றுள்ள லக்னோ அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெற்று பிளேஆப் சுற்று வாய்ப்பை உறுதிப்படுத்தும் முனைப்பில் உள்ளது. ஐபிஎல் ப்ளே-ஆப்…

முடிவுக்கு வந்த இந்தியாவின் ராஜாங்கம்..

Posted by - February 23, 2026 0
ஐசிசி டி20 உலகக் கோப்பையில் தென்னாப்ரிக்கா அணியிடம் தோற்றதும் மூலம், 12 போட்டிகளாக தொடர்ந்த இந்தியாவின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2024ம் ஆண்டு டி20…

ஃபைனலி.. மாஸ் காட்டிய இந்திய அணி – அரையிறுதியில் ஆஸி.,? தெ.ஆப்.,? இங்கி.,? யாருடன் மோதல்?

Posted by - October 24, 2025 0
உலகக் கோப்பை லீக் சுற்றில் நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம், இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. உலகக் கோப்பை புள்ளிப்பட்டியலின் தற்போதைய நிலவரப்படி, அரையிறுதியில் இந்தியா…

ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்றார் தினேஷ் கார்த்திக்… பிரியாவிடை கொடுத்த ஆர்சிபி வீரர்கள்

Posted by - May 23, 2024 0
அகமதாபாத்தில் நடைபெற்ற பிளேஆஃப் போட்டியில் தோல்விக்குப் பிறகு விராட் கோலி உட்பட ஆர்சிபி வீரர்கள், மூத்த விக்கெட் கீப்பர்-பேட்டரான தினேஷ் கார்த்திக்கிற்கு மரியாதை செய்து பிரியாவிடை அளித்தனர்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *