பிரசவத்திற்கு சென்ற பெண்ணின் வயிற்றில் துணி வைத்து தைத்த டாக்டர்கள்- ஒரு வருடத்திற்கு பிறகு அகற்றம்

218 0

திருப்பதி:

மாநிலம் ஜகித்யாலா பகுதியை சேர்ந்தவர் நவ்யா ஸ்ரீ கடந்த ஆண்டு பிரசவத்திற்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நவ்யா ஸ்ரீக்கு சுகப்பிரசவம் நடக்காததால் டாக்டர்கள் ஆபரேசன் மூலம் வயிற்றிலிருந்து குழந்தையை வெளியே எடுக்க முடிவு செய்தனர். இதற்கு அவரது கணவர் மற்றும் உறவினர்களும் ஒப்புதல் அளித்தனர்.CARE Hospital | CHL Hospital: CARE acquires Indore's specialty hospital CHL

இதையடுத்து நவ்யா ஸ்ரீக்கு ஆபரேசன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது ஆபரேசன் செய்த டாக்டர்கள் நவ்யாஸ்ரீயின் வயிற்றில் துணியை மறந்து வைத்து தைத்துவிட்டனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நவ்யா ஸ்ரீக்கு நாளுக்கு நாள் வயிற்று வலி அதிகரித்து வந்தது. இதற்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிக்சை பெற்றனர். ஆனால் வயிற்று வலி குறையவில்லை.

இதையடுத்து டாக்டர்களின் பரிந்துரையின் பேரில் ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது வயிற்றில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் துணி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நவ்யா ஸ்ரீக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் இருந்த துணி அகற்றப்பட்டது. இதுகுறித்து செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது.

கலெக்டர் யாஸ்மின் பாஷா நவ்யா ஸ்ரீக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இதனை தொடர்ந்து டாக்டர் மற்றும் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Post

கொரோனா பரவலுக்கு பிறகு மாரடைப்பு பாதிப்பு அதிகரிப்பு- மருத்துவமனைகளில் தீவிர ஆராய்ச்சி

Posted by - July 22, 2023 0
புதுடெல்லி: கொரோனா தொற்று பரவலுக்குப் பிறகு மாரடைப்பு காரணமாக இளைஞர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக்…

ஆந்திரா ரெயில் விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு: உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு

Posted by - October 30, 2023 0
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசாவுக்கு நேற்று இரவு ஒரு பயணிகள் ரெயில் சென்றது. அந்த ரெயில் விஜயநகரம் மாவட்டத்தில் அலமந்தா- கன்கடப்பள்ளி இடையில் சிக்னலுக்காக காத்து…

பெங்களூருவில் ஆன்லைனில் ‘பிரிட்ஜை’ விற்க முயன்று ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த என்ஜினீயர்

Posted by - July 1, 2023 0
பெங்களூரு : பெங்களூரு விஜயநகர் பகுதியில் வசித்து வருபவர் பூர்ண சந்திரராவ் (வயது 41). என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பூர்ண சந்திரராவ் வீட்டில்…

தொப்பை இருக்கா.. தப்பி தவறியும் இந்த 2 உணவுகளை சேர்த்து சாப்பிடாதீர்கள்! பெரிய பிரச்சினையாகிடும்

Posted by - December 15, 2023 0
டெல்லி: உடல் எடையைக் குறைக்க முயல்வோர் நிச்சயம் சில வகை உணவுகளை ஒன்றாகச் சாப்பிடக் கூடாது. அவை என்னென்ன உணவுகள் என்பது குறித்து நாம் இதில் பார்க்கலாம்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *