புதுச்சேரி, தமிழகம் முழுவதும் பக்ரீத் கொண்டாட்டம்: சிறப்பு தொழுகை, தியாக உணர்வுடன் இஸ்லாமியர்கள்

114 0

பக்ரீத் பண்டிகையொட்டி, முஸ்லிம்கள் புத்தாடை அணிந்தும், ஒருவரை ஒருவர் கட்டித்தழுவியும், இனிப்புகள் வழங்கியும் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி பகுதி பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். பக்ரீத் பண்டிகை தியாகத்துக்கான பெருநாளாக கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று காலையிலேயே இஸ்லாமியர்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளையும் பரிமாறி உற்சாகம் அடைந்தனர்.  திறந்தவெளி மைதானங்கள் மற்றும் மசூதிகளில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு மைதானங்களில் நடந்த தொழுகையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அனைத்து மக்களும் அமைதியோடு வாழ வேண்டும். நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்று இஸ்லாமியர்கள் பிரார்த்தனை செய்தனர். பக்ரீத் பெருநாளில் ஏழைகளுக்கு உதவி செய்வதும் வழக்கம். அதன்படி இஸ்லாமியர்கள் இன்று பல இடங்களில் ஏழைகளுக்கு உதவி வழங்கினார்கள். மேலும் பல இடங்களில் இறைச்சிகளையும் ஏழைகளுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.

பக்ரீத் பண்டிகையையொட்டி, நகர பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் காலை சிறப்பு தொழுகை நடந்தது. நெல்லித்தோப்பு ஈத்கா மைதானம், முல்லா வீதி குத்பா பள்ளி வாசல், சந்தாசாஹிப் தெரு அகமதியா பள்ளி வாசல், கோவிந்த சாலை மஸ்ஜிதுந்நூர், பெரியகடை பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. பக்ரீத் பண்டிகையொட்டி, முஸ்லிம்கள் புத்தாடை அணிந்தும், ஒருவரை ஒருவர் கட்டித்தழுவியும், இனிப்புகள் வழங்கியும் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். காரைக்கால்காரைக்காலில் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பின், ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி பக்ரித் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். காரைக்கால் மீராப்பள்ளி தோட்டம், கீதர் பள்ளிவாசல், செய்கு மொய்தீன் பள்ளி வாசல், பெரிய பள்ளிவாசல், புளியங்கொட்டை சாலை மஸ்ஜிதே, மொய்தீன் பள்ளிவாசல்களில் சிறப்பபு தொழுகை நடந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையின் போது, இஸ்லாமியர்கள் பல இடங்களில் சிறப்புத் தொழுகைகளில் ஈடுபட்டனர். விழுப்புரம் நகரில் உள்ள பல பள்ளிவாசல்களிலும், குறிப்பாக மஹல்லா பள்ளி வாசல், வாலாஜா பள்ளி வாசல், தக்குவா பள்ளி வாசல், ரஹ்மான் பள்ளி வாசல், மதினா பள்ளி வாசல் போன்ற இடங்களில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. மேலும், விழுப்புரம் நகராட்சி காமராஜர் பள்ளி மைதானத்தில் முஸ்லிம்கள் கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டனர். காணை அபுபக்கர் சித்திக் பள்ளி வாசலில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. திண்டிவனத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, திண்டிவனத்திலுள்ள 15 பள்ளி வாசல்களில் இருந்தும்  காலை 8 மணியளவில் முஸ்லிம்கள் ஊர்வலமாகசென்று, செஞ்சி ரோட்டில் உள்ள கபர்ஸ்தான் ஈத்கா மைதானத்தில்  சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

Related Post

Generated Image November 22 2025 5 37PM

TN Rain Alert: கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Posted by - November 22, 2025 0
TN Weather Update Today: தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல். தெற்கு அந்தமான் கடல் பகுதியில்…

தஞ்சை பெரிய கோவிலில் 18 நாட்கள் நடக்கும் சித்திரை பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

Posted by - April 17, 2023 0
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர்…

முள்ளங்கி வாங்க போறீங்களா.. அப்ப அதன் கீரையை எட்ட எறியாதீர்கள்.. இதயம், சிறுநீரகத்திற்கு நல்லது!

Posted by - October 17, 2023 0
சென்னை: முள்ளங்கி சாப்பிட்டிருப்பீர்கள், முள்ளங்கி கீரையை சாப்பிட்டுள்ளீர்களா? முயல்கள் விரும்பி சாப்பிடும் முள்ளங்கி கீரையின் மருத்துவ குணங்கள் என்ன? முள்ளங்கி வெள்ளை நிறத்திலும் பிங்க் நிறத்திலும் பூமிக்கு…

நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: சென்னையில் 3 ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் அமைப்பு

Posted by - September 15, 2023 0
சென்னை: நிபா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் முன்எச்சரிக்கையாக அரசு மருத்துவமனைகளில் அதற்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி…

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கிய பிச்சைக்காரர்- நாமக்கல் கலெக்டரிடம் வழங்கினார்

Posted by - February 20, 2023 0
நாமக்கல்: நாமக்கல் பிச்சையெடுப்பவர்கள், ‘ஐயா தர்மபிரபு ஏதாவது தர்மம் பண்ணுங்க’ என்று யாசகம் பெறுவது வழக்கம். ஆனால் தமிழகத்தை சேர்ந்த ஒரு பிச்சைக்காரர் தனக்கு கிடைத்த பணத்தை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *