eeeeeeeeeeeeeee

போராடும் ஆசிரியர்கள் மீது **ஞ்சா வழக்கு; மிரட்டிய போலீஸ்- வைரலாகும் ஆடியோ! அராஜகத்தின் உச்சம்!

92 0

எக்மோர் ரயில் நிலையம் முன்பு என்னைப் பின்தொடர்ந்து கிட்டத்தட்ட 25 காவலர்கள் மற்றும் 4 சீருடை இல்லாத காவல் துறையினர், என்னைச் சுற்றி வளைத்தனர்.

சம வேலைக்கு சம ஊதியம் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் தலைநகர் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து 18ஆம் நாளாகப் போராடி வருகின்றனர். எனினும் இந்தப் போராட்டத்துக்கு அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களைக் காவல்துறை வலுக்கட்டாயமாகக் கைது செய்து வருகிறது.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டால் கஞ்சா வழக்குப் பதிவு செய்வோம் என்று காவல்துறை மிரட்டியதாக, ஆசிரியர் ஒருவரின் ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுதொடர்பாக வெளியான ஆடியோ பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:

’’நேற்று காலை 9.45 முதல் மாலை 7.00 மணி வரை முழுவதும் காவல்துறை patrol வாகனத்தில் வைத்திருந்தார்கள்.

எக்மோர் ரயில் நிலையம் முன்பு என்னைப் பின்தொடர்ந்து கிட்டத்தட்ட 25 காவலர்கள் மற்றும் 4 சீருடை இல்லாத காவல் துறையினர், என்னைச் சுற்றி வளைத்தனர்.

அவர்கள் முதலில், ’’நீங்கள் வாத்தியார்தானே’’ என கேட்டனர்.

’’இல்லை’’ என்று சொன்னேன்.

அதில் ஒருவர், ‘’நேற்று இவர் போராட்டத்தில் கோஷம் போடும்போது வாகனத்தில் இவரை தூக்கிப் போட்டேன்’’ என்று கூறினார்.

பின்னர் அவர்கள் 9.45- 11.30 வரை சுமார் 2 மணி நேரம் 15 நிமிடமாக எழுப்பிய வினாக்கள்.

பெயரைக் கேட்டனர்.

குணசேகர் என்றேன்.

’’முகநூலில் திமுகவை மிசா என்று குறிப்பிட்டது நீதானே’’ என்று கேட்டனர், இல்லை என்றேன்.

1. உங்களை யார் வழி நடத்துகிறார்கள்?

2. ஃபெலிக்ஸ்க்கு கால் செய்?

3. செல்போனில் லாக்கை எடு.

4. இன்று எங்கு போராட்டம்?

அனைத்துக்கும் நான் கூறிய ஒரே விடை தெரியாது.

’’உன் பையில் **ஞ்சாவை வைத்து வழக்குப்பதிவு செய்வோம், உன் வாழ்க்கையே போய்விடும்’’ என்று கூறினார்கள். நான் சிரித்துக் கொண்டே, ’’தாராளமாக செய்து கொள்ளுங்கள்’’ என்று கூறினேன். கடுமையான கோபத்தில் தகாத வார்த்தைகளால் திட்டினார்கள்.

எதற்காக போராடுகிறாய் என்று கேட்டார்கள். சம வேலைக்கு சம ஊதியம் என்றேன், அங்கிருந்து ஒரு ஆட்டோ டிரைவரை கூப்பிட்டு உனக்கு எவ்வளவு சம்பளம் என்று கேட்டார்கள். அவர் ஒரு நாளைக்கு 1200 என்று கூறினார். நான் கேட்டேன்.. ஆட்டோ டிரைவரும் நானும் ஒன்றா?’’ என்று.

திரும்பத் திரும்ப மொபைல் லாக்கை எடுக்க சொல்லினார்கள். ’’என் கொள்கைக்கு மாறாகவும் என் இனத்திற்கு துரோகமும் செய்ய மாட்டேன்’’ என்றேன். கடும் சொற்களைப் பயன்படுத்தி என்ன கொள்கை என்று கூறினார்கள்.

பின்னர் வாகனத்திற்குள் ஏற்றினார்கள். இருபுறமும் இரண்டு IS ஏறி மொபைலை லாக் எடுக்க கூறினார்கள், முடியாது என்றேன். ஒரு மணி நேரம் போராடினார்கள். பின்னர் என் கையைப் பிடித்து ஒவ்வொரு விரலாக பத்து விரலையும் தொட்டுப் பார்த்தார்கள். லாக் ஓபன் ஆகவில்லை. கடுமையான சொற்களைப் பயன்படுத்தி திட்டினார்கள், சில பேர் அன்பாக பேசி, பின் எண்ணைக் கேட்டார்கள். எதற்கும் நான் செவிமடுக்கவில்லை.

11.30 ஆனவுடன் எங்களுக்குப் போராட்டம் களம் அவர்களுக்கு  ஊடகங்கள் மூலம் தெரிந்து விட்டது. பின்னர் என்னை தொந்தரவு செய்யவில்லை.

இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது

  1. நம் போராட்டம் அரசுக்கு மிகுந்த நெருக்கடியை கொடுத்துள்ளது.
  2. யார் எப்படி திட்டமிடுகிறார்கள் என்று அவர்களுக்கு தெரியவில்லை.
  3. உளவுத்துறை சாதாரண ஆசிரியரிடம் கூட போன் லாக்கை எடுக்க முடியவில்லை. நாம் நாம் எவ்வளவு மன உறுதியோடு உள்ளோம் என்று அவர்களுக்கு காட்டியுள்ளோம்.
  4. எத்தனை வழக்கு பதிவு செய்தாலும் அடக்குமுறை நடத்தினாலும் இவர்கள் அஞ்ச மாட்டார்கள் என்று அவர்களுக்கு தெரிய வைத்துள்ளோம்.
  5. தலைமை இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் போராட துணிந்து விட்டார்கள் என்று அறிந்து விட்டார்கள்.
  6. உளவுத்துறை கடுமையான தோல்வி
  7. முகநூல் பதிவு, ட்விட்டர் பதிவு, புலனப்பதிவு அனைத்தையும் கண்காணிக்கிறார்கள்.

ஆகவே நம் போராட்டம் வெற்றியை நோக்கி பயணிக்கின்றது’’.

இவ்வாறு அந்த ஆடியோ நீளும் நிலையில், இந்தப் பதிவு வைரலாகி வருகிறது.

Related Post

death 1

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்

Posted by - December 28, 2023 0
சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஓரிரு நாளைக்குள் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக சார்பில்…

எண்ணெய் நிறுவன கழிவுகளை மீனவர்கள் அள்ளுவதா? அப்பாவி மக்களைப் பலியாக்குவதா? சீமான் கண்டனம்

Posted by - December 15, 2023 0
சென்னை: சென்னை அருகே எண்ணெய் நிறுவனத்தின் கழிவுகளை மீனவப் பெருங்குடி மக்களை அள்ள சொல்வதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

ஆட்டம் காணும் திமுக? அமைச்சர் கே.என். நேரு, மகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை – நெருங்கும் தேர்தல்

Posted by - April 7, 2025 0
தமிழக அமைச்சர் கே.என். நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது. திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கே.என். நேரு…

அவசரநிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்ட நாளை துக்க நாளாக அனுசரிப்போம்! – ஆளுநர் ஆர்.என்.ரவி

Posted by - June 25, 2024 0
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 50 ஆண்டுகளுக்கு முன்பு, 1975ஆம் ஆண்டு இதே நாளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்தாக கூறியுள்ளார். அரசியலமைப்பை தூக்கியெறிந்து, குடிமக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கிய…

டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை – 1.30 லட்சம் ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

Posted by - October 22, 2025 0
காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்மழை காரணமாக 1.30 லட்சம் ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதாலும், அறுவடைக்கு தயாரான குறுவை நெற்கதிர்களை மழைநீர் சூழ்ந்ததாலும் விவசாயிகள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *