மக்களே எச்சரிக்கை..! அதிகரிக்கும் மர்ம காய்ச்சல்… இது கொரோனா வேரியன்டா?…

303 0

H3N2 influenza Virus | வேகமாகப் பரவி வரும் H3N2 இன்ஃப்ளூயன்ஸாவிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள, கூட்டத்தைத் தவிர்ப்பது மற்றும் கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற சில விஷயங்களை நினைவில் கொள்வது அவசியம். H3N2 இன்ஃப்ளூயன்ஸா தொற்றின் அறிகுறிகள், சிகிச்சை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை இங்கே.

H3N2 Influenza Symptoms : டெல்லி, சென்னை போன்ற பெரும் நகரங்களில் மர்ம காய்ச்சலின் தாக்க அதிகரித்துள்ளது. இது, H3N2 இன்ஃப்ளூயன்ஸா என மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். H3N2 இன்ஃப்ளூயன்ஸா “ஹாங்காங் காய்ச்சல்” என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு வகை இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் ஆகும். இது சுவாச நோயை ஏற்படுத்துகிறது.

புது தில்லியில் H3N2 இன்ஃப்ளூயன்ஸா A வகை தொற்றுக்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இது தவிர, கடுமையான குளிரிலிருந்து வெப்பத்திற்கு வானிலை மாறும் போதும் காய்ச்சல் அறிகுறிகள் ஏற்படலாம்.

H3N2 இன்ஃப்ளூயன்ஸா அறிகுறிகள் என்ன?

காய்ச்சல், இருமல், தொண்டை புண், தொண்டை கரகரப்பு, மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கு அடைத்தல், உடல் வலி, தலைவலி, குளிர் மற்றும் சோர்வு ஆகியவை H3N2 இன்ஃப்ளூயன்ஸாவின் பொதுவான அறிகுறிகளாகும். சில சமயங்களில், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கும் ஏற்படலாம். இந்த பொதுவான அறிகுறிகள் ஒரு வாரத்திற்கு அல்லது அதற்கு மேலும் நீடிக்கலாம். எனவே, மருத்துவர்களை அணுகுவது நல்லது.

இதற்கு எப்படி சிகிச்சையளிப்பது?

H3N2 காய்ச்சல் ஏற்பட்டால், நன்றாக ஓய்வு எடுப்பது மிகவும் அவசியம். அத்துடன், திரவ நிலையில் இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். காய்ச்சல் மற்றும் உடல் வலியைக் குறைப்பதற்கு அசெட்டமினோஃபென் அல்லது இப்யூபுரூஃபன் போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்ளவும்.

 

H3N2 இன்ஃப்ளூயன்ஸாவின் அறிகுறிகள் கடுமையாக இருந்தால், ஒசெல்டமிவிர் மற்றும் ஜானமிவிர் போன்ற வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். கடுமையான அதிகுறிகள் நீடித்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.

H3N2 இன்ஃப்ளூயன்ஸாவில் இருந்து எப்படி உங்களை பாதுகாப்பது?

H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொற்றை தடுக்க, ஆண்டுதோறும் தவறாமல் காய்ச்சல் தடுப்பூசியை போட்டுக்கொள்வது, சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளை தவறாமல் கழுவுதல், நோய்வாய்ப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்ப்பது, தும்மும்போது அல்லது இருமும்போது வாய் மற்றும் மூக்கை மூடுவது, மக்கள் கூட்டமான இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது, வெளியில் செல்லும் பொது மாஸ்க் போடுவது, அனாவசியமாக வெளியில் செல்வதை தவிர்ப்பது போன்ற சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.

இது கொரோனா போன்று பரவக்கூடிய நோயா?

H3N2 இன்ஃப்ளூயன்ஸா வேகமாக மற்றவர்களுக்கு பரவும். H3N2 வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் பேசும்போது, இருமல் அல்லது தும்மும்போது வெளியாகும் நீர்த்துளிகள் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிமையாக பரவும். கொரோனாவை போல வைரஸால் மாசுபட்ட மேற்பரப்பைத் தொட்டபின்னர், கைகளை சுத்தம் செய்யாமல் ஒருவர் வாய் அல்லது மூக்கைத் தொடுவதன் மூலமும் இது பரவுகிறது. கர்ப்பிணிப் பெண்கள், இளம் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் ஏற்கனவே இதயம், சர்க்கரை மற்றும் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும்.

Related Post

பாடசாலையா? பாலியல் குற்றவாளிகள் கூடாரமா? பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்! கொதிக்கும் ஈபிஎஸ்

Posted by - December 26, 2024 0
பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ? இந்த ஆட்சியின் அலட்சியத்தால், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது- ஈபிஎஸ். தமிழ்நாட்டின் பெருமைமிகு…

நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: சென்னையில் 3 ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் அமைப்பு

Posted by - September 15, 2023 0
சென்னை: நிபா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் முன்எச்சரிக்கையாக அரசு மருத்துவமனைகளில் அதற்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி…

கார்த்திகை தீபம்- திருவண்ணாமலைக்கு 3 ஆயிரம் சிறப்பு பஸ் …

Posted by - November 23, 2022 0
டிச.6-ந்தேதி காலை 6-மணிக்கு பரணி தீபமும் மாலை 6-மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படுகிறது. மகா தீபம் ஏற்றப்படுவதை பார்க்க மக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ், கார்,…

தமிழ்நாடு முழுவதும் பால், தயிர் விலை உயர்வு.. இன்று முதல் அமல்

Posted by - January 20, 2023 0
ஆவின் பாலிற்கும், தனியார் பாலிற்கும் லிட்டருக்கு ரூ.20 வரை வித்தியாசம் இருந்து வருவதால் ஆவின் பால் கடைகளில் உடனே விற்று தீர்ந்து விடுகிறது. தமிழகத்தில் தனியார் பாலின்…

குடவாசல் அருகே விசிக கொடிக்கம்பம் அகற்றம்… வருவாய்த்துறையினரை கண்டித்து திடீர் சாலை மறியல்…!!

Posted by - January 20, 2024 0
திருவாரூர் அருகே குடவாசல் பேருந்து நிலையத்தின் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை வருவாய்த்துறை, காவல்துறை பிடுங்கியதால் பரபரப்பு நிலவியது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவில் திருவாரூர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *