மனைவி குறித்து கேள்வி எழுப்பிய கஸ்தூரி.. பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்

315 0

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் தமிழ் மொழி மீதான தனது பற்றை அவ்வப்போது பொதுவெளியில் பகிர்ந்து வருகிறார். கடந்தாண்டு நாடாளுமன்ற அலுவல் மொழி குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்ல என்றும் கூறியிருந்தார்.மனைவி குறித்து கேள்வி எழுப்பிய கஸ்தூரி.. பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரகுமான் | Tamil  cinema ar rahman post goes viral

இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைதள பக்கத்தில், ழ என்ற செங்கோலுடன், நடனமாடும் வகையில் வரையப்பட்ட தமிழன்னையின் ஓவியம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், “இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்” என்ற பாரதிதாசனின் வரியும் இடம் பெற்றிருந்தது.

சில தினங்களுக்கு முன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவுடன் கலந்து கொண்டனர். அப்போது அவரது மனைவி கூட்டத்தினரின் முன் பேச தயாரான போது இந்தியில் பேசாதீங்க தமிழில் பேசுங்கள் ப்ளீஸ் என்று ஏ.ஆர்.ரகுமான் அன்பு கட்டளை விடுத்தார். இதன்பின் பேசிய அவரது மனைவி, மன்னிக்கவும், தமிழில் சரளமாக பேச எனக்கு வராது. அதனால், தயவு செய்து மன்னித்து விடுங்கள் என்று கூறிவிட்டு ஆங்கிலத்தில் பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.A.R.Rahman's Wife - தமிழ்நாட்லதானே இருக்காங்க?.. ஏ.ஆர்.ரஹ்மான் மனைவியை  வம்புக்கு இழுத்த நடிகை கஸ்தூரி | Actress Kasthuri Criticized Music Director  A.R.Rahman's Wife - Tamil Filmibeat

இந்நிலையில், நடிகை கஸ்தூரி, “என்னது ஆர் ரஹ்மான் அவர்களின் மனைவிக்கு தமிழ் வராதா? அவங்க தாய் மொழி என்ன ? வீட்டுல குடும்பத்தில என்ன பேசுவாங்க? ” என்று சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு ஏ.ஆர்.ரகுமான், “காதலுக்கு மரியாதை” என்று பதிலளித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Related Post

சிங்கப்பெண்ணில் அன்பு-ஆனந்திக்காக களம் இறங்கும் லலிதா-மனோன்மணி.. சூழ்ச்சியை ஆரம்பிக்கும் பார்வதி-மித்ரா!

Posted by - February 25, 2025 0
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு மற்றும் ஆனந்திக்கு யார் தான் உதவி செய்யப் போகிறார் என்ற சந்தேகம்…

இந்த இன்சுலின் இலை தினமும் ஒன்னு காலையில சாப்பிட்டா சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்…

Posted by - November 22, 2025 0
இன்சுலின் செடி என்றழைக்கப்படும் இந்த செடி நீரிழிவு நோயாளிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அதை…

பார்வதி, கம்ருதீனுக்கு Red Card கொடுத்து வெளியே அனுப்பிய விஜய் சேதுபதி… ரசிகர்கள் கொண்டாடும் புரொமோ

Posted by - January 3, 2026 0
பிக்பாஸ் 9 விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் 9. இந்த சீசனில் மக்களால் வெறுக்கப்படும் போட்டியாளர்களாக பார்வதி மற்றும் கம்ருதீன் உள்ளனர். TTF…

பாக்கியலட்சுமி சீரியல் ரேட்டிங் வரணும்னு என் பொண்ண இப்படி பண்ணிட்டாங்க.. இனியாவின் ரியல் அம்மா வேதனை

Posted by - February 7, 2025 0
பாக்கியலட்சுமி சீரியலில் இனியா என்னும் கேரக்டரில் நேஹா நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே ஒரு சில சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.சமீபகாலமாக நெட்டிசன்கள் அதிகமாக நேஹாவை அதாவது…

இந்த 5 ராசிக்காரங்க அசைக்க முடியாத மனவலிமை உள்ளவங்க… இது மற்றவர்களை விட அவர்களுக்கு வலிமையைக் கொடுக்கும் ஒன்றாகும்

Posted by - January 27, 2023 0
நமது மனமே நமது மிகப்பெரிய ஆயுதம். பெரும்பாலான மக்களுக்கு அதை எவ்வாறு புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது என்பது தெரியும், மற்றவர்கள் அதைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் மனதளவில் வலுவாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *