“மாப்பிள்ளைச் சம்பா சாப்பிட்டால், மாப்பிள்ளையாக இருக்கலாம் …” – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை!

315 0

மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளையாக இருக்கலாம்.! தங்க சம்பா சாப்பிட்டால் தங்கமாக இருக்கலாம் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

வேளாண் நிதிநிலை தாக்கல் செய்த போது மாப்பிள்ளை சம்பா அரிசி குறித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நகைச்சுவையோடு பேசியது, சட்டமன்ற உறுப்பினர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.

ஏரினும் நன்றால் எருவிடுதல் என்ற திருக்குறளுடன் சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை பட்ஜெட் தாக்கலை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். 3 ஆவது முறையாக வேளாண் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய, அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பச்சை துண்டு அணிந்து வந்தார். அவருக்கு உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முனைப்பாடியாரின் இன்சொல் விளைநிலமா என்ற அறநெறிச்சாரத்தை கூறி அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தனது உரையை தொடங்கினார். தனது உரையில் மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளை மாதிரி இருக்கலாம் என்றும் தங்க சம்பா சாப்பிட்டால் தங்கம் மாதிரி ஜொலிக்கலாம் என்றும் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நகைச்சுவையோடு தெரிவித்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் மெல்ல திரும்பி அமைச்சரை பார்த்து, லேசாக புன்னகைத்தார். உடனே குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு அப்போ எல்லோருக்கும் கொடுங்கள். சாப்பிட தயாராக இருக்கிறோம்” என்றார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.முன்னதாக, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் வேளாண் நிதிநிலை அறிக்கையை வைத்து அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, மலர் கொத்துக்கு பதிலாக சிறுதானிய பயிர்களின் கொத்தை பரிசாக அளித்தார்.

வேளாண்துறையில் பல்வேறு திட்டங்களை அறிவித்தமைக்காக நன்றி தெரிவிக்கும் வகையில் முதலமைச்சருக்கு எம்எல்ஏ டிஆர்பி ராஜா மதிப்புக் கூட்டப்பட்ட வேளாண் பொருட்களையும் பரிசாக வழங்கினார்.

வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலினும் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வமும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Related Post

ஆரஞ்சு பழம் சீசன் வர போகுது! நல்லதுதான் செய்யும்! ஆனா மறந்தும் கூட “இந்த” உணவுகளுடன் சாப்பிடாதீர்!

Posted by - December 12, 2023 0
சென்னை: ஆரஞ்சு பழத்துடன் எப்போதும் இந்த பழத்தை சேர்த்து சாப்பிடவே கூடாது தெரியுமா? மேலும் ஆரஞ்ச் பழத்தின் நன்மைகளையும் தெரிந்து கொள்ளுங்கள். ரத்த குழாய்களில் சேரும் கெட்ட…

பேங்க்கில் பணம் எடுக்குறீங்களா?பான் எண் இருக்கா?வங்கிகளுக்கு வருமான வரித்துறை திடீர் உத்தரவு பாருங்க

Posted by - October 25, 2023 0
சென்னை: வங்கிகளுக்கு வருமான வரித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.. இது வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. நாம் வைத்திருக்கும் அடிப்படை அட்டைகளில் மிக முக்கியமானது பான்…

பொங்கல் பரிசு ரூ.1000… ரேஷன் கடைகளில் வழங்கும் தேதி அறிவிப்பு

Posted by - December 23, 2022 0
Ponga Gift | பொங்கல் தொகுப்பு உடன் ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடுக அனைத்து அரிசி…

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ரூ.170: சில்லறை விற்பனையில் 200 ரூபாயை தாண்டியது

Posted by - August 1, 2023 0
தக்காளி விலை தொடர்ந்து ஏற்றத்தை கண்டு வருகிறது. நேற்று கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ 160 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்து வந்த நிலையில், இன்று…

சிக்கனில் இந்த பாகத்தை ஒருபோதும் சாப்பிடாதீங்க.. இந்த பிரச்சனை இருக்கவங்க தொடவே கூடாது.!

Posted by - December 18, 2024 0
சிக்கனை சிலர் மாதத்திற்கு நான்கு முதல் ஐந்து முறை சாப்பிடுகிறார்கள், மற்றவர்கள் வாரத்திற்கு குறைந்தது மூன்று முதல் நான்கு முறை சாப்பிடுகிறார்கள். சிலருக்கு சிக்கன் இல்லாமல் ஒரு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *