“மியூட் மோடில் திமுக அரசு” தீக்குளித்த விவசாயி.. பொங்கி எழுந்த இபிஎஸ்

127 0

“80 வயது மூதாட்டிக்கு பாதுகாப்பு இல்லை என்பது எவ்வளவு வெட்கக்கேடான நிலை? ஒரு முதல்வராக இந்த செய்தியெல்லாம் ஸ்டாலினை ஏன் உறுத்தவில்லை?” என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தருமபுரி எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த விவசாயி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்தை முன்வைத்து திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.

ஸ்டாலினை ஏன் உறுத்தவில்லை?

எக்ஸ் தளத்தில் இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில், “தருமபுரி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த ஜெயராமன் எனும் விவசாயி தீக்குளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

ஸ்டாலின் ஆட்சியின் மீது மக்களுக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி. மக்களின் எந்த புகாருக்கும் அரசு செவி சாய்ப்பதில்லை. It’s in complete #MuteMode ! பச்சைத் துண்டுடுத்தும் விவசாயியை, தன் உயிரை விடத் துணிய வைத்த ஸ்டாலின் அரசு, தன்னுடைய கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறது.

மேலும், ராணிப்பேட்டையில் 80 வயது மூதாட்டியை 19 வயது இளைஞன் பாலியல் தொல்லை அளித்து கொலை செய்ததாக செய்திகள் வருகின்றன. 80 வயது மூதாட்டிக்கு பாதுகாப்பு இல்லை என்பது எவ்வளவு வெட்கக்கேடான நிலை? ஒரு முதல்வராக இந்த செய்தியெல்லாம் ஸ்டாலினை ஏன் உறுத்தவில்லை?

தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற விவசாயி: 

குற்றவாளிகளுக்கு பயமில்லை; அரசு இயந்திரத்தின் மீது கடிவாளம் இல்லை- மொத்தத்தில் இந்த ஸ்டாலின் ஆட்சியைத் தேர்ந்தெடுத்தது தவறு தான் என்று தமிழ்நாட்டு மக்கள் நாள்தோறும் வருத்தமே படுகிறார்கள்! விவசாயி ஜெயராமன் உயிரைக் காக்க வேண்டும்.

 

 

அவருக்கு நிவாரணம் வழங்கி, அவரின் குறையைத் தீர்த்து வைக்க வேண்டும் எனவும், ராணிப்பேட்டை மூதாட்டியை பாலியல் தொல்லை அளித்து கொலை செய்த வழக்கில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Related Post

சனாதனம் குறித்து பேச்சு: தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலின் போட்ட முக்கிய உத்தரவு ..

Posted by - September 14, 2023 0
சென்னை: தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் 2-ந்தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பேசும்போது, கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா…

மலேரியாவை விரட்டும்! மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்! கோரைக்கிழங்கின் அற்புதம்! எப்படி சாப்பிடுவது?

Posted by - December 27, 2023 0
சென்னை: கோரை கிழங்கு எல்லா தரப்பினருக்கும் நிறைய மருத்துவ பலன்களை கொடுக்கிறது. சித்தர்கள் நமக்கு எண்ணற்ற மூலிகைகளை விட்டுச் சென்றுள்ளனர். அந்த வகையில் மிக முக்கியமானது கோரைக்…

சென்னையில் வீடுகளுக்கு முன் நோ பார்க்கிங் போர்டு வைத்ததால் நடவடிக்கை – நீதிமன்றம் உத்தரவு

Posted by - September 10, 2024 0
சென்னை நகரில் வீடுகளின் முன் அனுமதியின்றி ‘நோ பார்க்கிங்’ போர்டுகள் மற்றும் தடுப்புகளை வைத்திருப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை…

கனமழை எச்சரிக்கை: 10 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் மழை! வானிலை மையம் தகவல்

Posted by - September 9, 2025 0
மயிலாடுதுறை தொடங்கி தேனி வரை 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமாக இருக்கிறது.…

இனிமே அதெல்லாம் நடக்காது.. நடக்கவிடப்போறது இல்ல.. அடித்துப் பேசிய தவெக தலைவர் விஜய்!

Posted by - April 26, 2025 0
இதற்கு முன்பு பொய் சொல்லி ஆட்சியைப் பிடித்திருக்கலாம். இனிமேல் அதுபோல நடக்காது என்று தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முகவர்கள் கருத்தரங்க கூட்டம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *