இன்று 11 மாவட்டங்களுக்கு கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

252 0

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்கிழக்கு வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் ஒன்பதாம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு மேல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. வட தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்துக்கு பலத்த காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வரும் 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் 25 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், மின்னல் மற்றும் பணப்பாக்கத்தில் தலா 20 சென்டிமீட்டர் மழை பதிவானது

Related Post

என்னாது கொரோனா அதிகரிக்கிறதா! அப்படிலாம் இல்லையே.. டேட்டாவுடன் வந்த கொரோனா தரவு ஆய்வாளர்

Posted by - December 15, 2023 0
சென்னை: தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் புதிய கொரோனா வேரியன்ட் பரவவில்லை என கொரோனா தரவு ஆய்வாளர் விஜயானந்த் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு…

நகைச்சுவை நடிகர் சிவநாராயணமூர்த்தி உடல்நலக் குறைவால் மரணம்

Posted by - December 8, 2022 0
நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி உடல்நலக் குறைவால் காலமானார். ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களுடன் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சென்னை: தமிழ் திரைப்பட…

பருவமழை தீவிரம்: தமிழகத்தில் மேலும் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

Posted by - November 23, 2023 0
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில்…

‘கூட்டணி ஆட்சியா? அமித் ஷாவுக்கு பதில் சொன்ன EPS’ பரபரப்பு Press Meet!

Posted by - July 14, 2025 0
அதிமுக கூட்டணி வலிமையானதாகவும், ஒற்றுமையுடன் இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான அரசு 2026 அமைந்தால், அது கூட்டணி ஆட்சியாகதான் இருக்கும்…

பெண் தோழியுடன் தொடர்ந்த பழக்கம்… வழக்கறிஞரை கும்பலுடன் வந்து தாக்கிய கணவர் – நடந்தது என்ன?!

Posted by - August 7, 2023 0
சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் செந்தில் குமார். இவர் சட்டப் படிப்பு படித்தபோது உடன் பயின்ற மதுரையை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இவருக்கும் நீண்ட நாள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *