ASDFGH

மீண்டும் அக்கவுண்ட்டுக்கு வந்த ரூ.2,000

93 0

முதியோர், கைம்பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையுடன், சிறப்பு நிதி வழங்கியுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். ஏற்கனவே வழங்கப்படும் தொகையுடன் ரூ.2,000 கூடுதலாக வரவு.

சிறப்பு நிதி ரூ.2000 கூடுதலாக வழங்கிய முதலமைச்சர்

இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “விளிம்புநிலையில் இருப்போர்க்கும் சிறப்பு நிதி! என குறிப்பிட்டு,

“கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன.

நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை இன்று நிறைவேற்றியுள்ளோம்! நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக 2000 ரூபாயை மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம்!

இதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என, மொத்தம் 29 இலட்சத்து 29 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா 3200 ரூபாயும்,

5 இலட்சத்து 92 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 3500 ரூபாயும்,

பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2 இலட்சத்து 58 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு, தலா 4000 ரூபாயும் இன்று காலை வழங்கியிருக்கிறோம்.

அதுமட்டுமின்றி, மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்திற்கான மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக, குடும்பம் ஒன்றுக்கு ரூ.8000 வீதம் மொத்தம் 1,62,900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்குக் கிலோ இரண்டு ரூபாய் ஆதார விலை என 8.53 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது.

இந்தத் தருணத்தில் மீண்டும் ஒருமுறை சூளுரைக்கிறேன் – தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம்!“ என தனது பதிவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

Related Post

கொடி பறக்குதா..! ”தவெக – அதிமுக கூட்டணி” பிள்ளையார் சுழி போட்டாச்சு – எடப்பாடி பேச்சு

Posted by - October 9, 2025 0
தமிழக வெற்றிக் கழகத்துடனான கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற குமாரபாளையம் பரப்புரையில்,…
CHT

விஜய்க்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி!

Posted by - February 4, 2026 0
தவெக தலைவர் விஜய் அதிமுகவை ஊழல் கட்சி என குறிப்பிட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய்க்கு கள நிலவரம் தெரியவில்லை என கூறியுள்ளார்.…

மாம்பழம் விற்பது போல கூவி கூவி ஆட்களைச் சேர்த்து வருகின்றனர் திமுகவினர் : அண்ணாமலை

Posted by - July 18, 2025 0
மாம்பழம் விற்பது போலக் கூவி கூவி ஓரணியில் தமிழ்நாடு என ஆட்களை திமுக சேர்த்து வருவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இத்தொடர்பாகத் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பேசியவர்,…
Gemini Generated Image ijuv8gijuv8gijuv e1775712729499

திமுகவின் தோல்வி கோவையில் இருந்து தொடங்கும் – அண்ணாமலை உறுதி!

Posted by - April 9, 2026 0
கோவையில் செந்தில்பாலாஜி தோற்கடிக்கப்படுவார் என்றும், திமுகவின் தோல்வி கோவையில் இருந்து தொடங்கும் என்றும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்…
erthjhgfdsaq

வாக்கு எண்ணிக்கை மையங்களில் திடீர் மாற்றம்? தேர்தல் ஆணையத்தின் நள்ளிரவு உத்தரவு – கலக்கத்தில் வேட்பாளர்கள்!

Posted by - April 25, 2026 0
தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி விறுவிறுப்பாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலைத் தொடர்ந்து, தற்போது அனைவரின் கவனமும் வாக்கு எண்ணிக்கை மையங்களின் (Counting Centers) மீது திரும்பியுள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *