முருங்கையிலை மாதிரி.. செம்பருத்தி இலை.. இயற்கையின் தங்கபஸ்பம்..வெயிட்லாஸ் முதல் தலைமுடி வளர்ச்சி வரை

299 0

சென்னை:

முருங்கையிலை போலவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள இலைகளில் மிக முக்கியமானது செம்பருத்தி இலைகள்.. செம்பரத்தை இலைகள் என்றும் சொல்வார்கள்.

செம்பருத்தி செடியை பொறுத்தவரை, இதன் பூக்கள், விழுதுகள், இலைகள் என அத்தனையும் மருத்துவ குணம் வாய்ந்தவை.. வழுவழுப்பு தன்மை உடைய இந்த இலைகள் மிகவும் குளிர்ச்சி வாய்ந்தவை. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வெறும் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டி குடித்தாலே போதும்… உடல் சூட்டினால் ஏற்படக்கூடிய கோளாறுகள் நீங்கும்.

கண் எரிச்சல், கண் நோய்கள், கண் வீக்கம், கண்களில் நீர் வடிதல், கண்களில் கட்டி போன்ற சூட்டை கிளப்பக்கூடிய பிரச்சனைகளுக்கு இந்த தண்ணீர் அருமருந்தாகும்.. அதேபோல, சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கடுப்பு போன்ற பிரச்சனை இருந்தாலும், இந்த தண்ணீரே அருமருந்தாகிறது.முருங்கையிலை மாதிரி.. செம்பருத்தி இலை.. இயற்கையின் தங்கபஸ்பம்..வெயிட்லாஸ்  முதல் தலைமுடி வளர்ச்சி வரை | Do you know Health Benefits of Hibiscus Leaf  and Hibiscus Leaves ...

கஷாயம்:

இந்த இலையில் டீ அல்லது கஷாயம் வைத்து குடித்தால், ரத்த அழுத்த பிரச்சனைகள் மெல்ல குறையும்.. கெட்ட கொழுப்பை இந்த செம்பருத்தி இலைகள் குறைக்கின்றன.. குறிப்பாக, தமனிகளின் உள்ளே, அடைப்புகளை நீக்குவதன் மூலம், கொழுப்பின் அளவை இவைகள் குறைக்கின்றன. அதேபோல, செம்பருத்தி இலையில் வைட்டமின் C நிரம்பி உள்ளதால், இருமல், ஜலதோஷம் போன்ற பிரச்சனைகளுக்கும் நிவாரணம் கிடைக்கிறது. இந்த டீயை தொடர்ந்து குடித்துவரும்போது, மாதவிடாய் சீராகும்.. மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்று வலியும் குறையும்.. எனவே, ஈஸ்ட்ரோஜன் குறைவாக உள்ள பெண்கள் இந்த செம்பருத்தி இலை டீயை தவறவிடக்கூடாது. மன அழுத்தம் அதிகமாக இருப்பவர்கள், இந்த டீயை குடித்து வந்தால், மனம் அமைதி பெறும்..

புற்றுநோய்:

புற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கு இந்த செம்பருத்தி இலைகள் தூண்டுகோலாக விளங்குகின்றன.. அதனால்தான், புற்றுநோயால் ஏற்பட்ட புண்களை ஆற்ற, இந்த இலைகளை அரைத்து பற்றுபோல பூசுவார்கள்.. தலைமுடி மற்றும் சரும பாதுகாப்பில் செம்பருத்தி இலைகள் வரப்பிரசாதமாக திகழ்கின்றன.. ஆண்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ள இந்த இலைகள், முக சுருக்கத்தை தள்ளிப்போடக்கூடியவை.. இளமையை தக்க வைக்கக்கூடியவை. அதனால்தான், அழகு சாதன பொருட்களில் மூலப்பொருளாக செம்பருத்தி இலைகள் கட்டாயம் இடம்பெறுகின்றன.

கண்டிஷனர்:

தலைமுடிக்கு இந்த இலை போல, இயற்கையான பெஸ்ட் கண்டிஷனர் வேறு எதுவும் இருக்க முடியாது.. பளபளப்பு + மென்மைத்தனம் இரண்டுமே கிடைக்க வேண்டுமானால், இந்த இலைகளை அரைத்து தேய்த்தாலே போதும்.

அதேபோல, முடி அதிகமாக வளர வேண்டுமானால், அல்லது முடி அதிகமாக கொட்டுகிறது என்றால், இந்த இலையின் விழுதே போதுமானது.. நரைமுடி, பொடுகுத்தொல்லை இருந்தாலும், இந்த இலைகளுடன், சிறிது கறிவேப்பிலை, மருதாணி இலை சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தாலே, மொத்த பிரச்சனையும் தீரும்..

சிறப்புகள்:

செம்பருத்தி இலைகளை அரைத்து, இட்லி மாவில் கலந்து, தோசை ஊற்றி சாப்பிடுவார்கள்..

இதனால், அஜீரணம் நீங்குவதுடன், உடலிலுள்ள கழிவுகள், நச்சுக்கள் வெளியேற இவை துணைபுகின்றன.. மேலும், உடல் சூடு தணிந்து, உடலுக்கு குளிர்ச்சியும் கிடைக்கிறது.. வயிறு, சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி குடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. அதனால்தான், இன்றுவரை ஆயுர்வேத மருத்துவத்தில் செம்பருத்தி இலைகள் மிக முக்கியத்தை பெற்று வருகின்றன.

Related Post

டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க முகக்கவசம் அணிவது நல்லது- தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

Posted by - September 15, 2023 0
சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுடன் பருவகாலத்தில் பரவும் இன்புளூயன்சா தொற்றும் தீவிரமடைந்து வருவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுமாறு பொது சுகாதாரத் துறை வலியுறுத்தி உள்ளது.…

பருவமழை தீவிரம்… மழை நிலவரங்களை கண்காணித்து வரும் மாநில அவசர கால செயல்பாட்டு மையம்

Posted by - November 30, 2023 0
சென்னை: இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து…

பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்காமல் அலட்சியபடுத்திய தமிழக அரசு…பொங்கி எழுந்த இடைநிலை ஆசிரியர்கள்…

Posted by - February 29, 2024 0
சென்னை: ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி அடுத்தகட்டமாக இன்று (பிப்.29) முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009…

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் விமான டிக்கெட் எடுத்தால் சேவை கட்டணம் கிடையாது

Posted by - September 25, 2023 0
சென்னை: இந்தியன் ரெயில்வே சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி) அடித்தள நாள் மற்றும் உலக சுற்றுலா தினத்தையொட்டி விமான டிக்கெட் முன்பதிவு செய்தால் 3 நாட்களுக்கு சலுகை…

பிடிஆர்-க்கே இந்த நிலைமையா? சட்டசபைக்கு வந்த சங்கதி? தேர்தல் நேரத்தில் ஸ்டாலினுக்கு புது தலைவலி?

Posted by - April 22, 2025 0
சட்டசபையில் இன்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதால் திமுக-வின் உட்கட்சி மோதல் அம்பலமாகியுள்ளது. தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *