மூதாட்டிகளை குறிவைத்து கொள்ளை: திருட்டு பெண் படம் அனுப்பி போலீசார் தேடுதல் வேட்டை- கை, கால்களை உடையுங்கள் என ஆடியோ

288 0

செங்கம்:

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த சிறுகிளாம்பாடி செங்கம் மேலப்பாளையம் திருவண்ணாமலை சுற்றியுள்ள பகுதிகளிலும் வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறிவைத்து பெண் ஒருவர் காரில் வந்து நகைகளை கொள்ளையடித்து சென்றார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், அப்பகுதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், கிராம பஞ்சாயத்து பெரியவர்களுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு பெண்ணின் படம், ஆடியோ அனுப்பியுள்ளார். இந்த படத்தில் இருக்கும் மைதிலி என்ற பெண், சேலம் அருகே உள்ள பெரியகொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிராமங்களில் ஒதுக்குப்புறமான வீடுகள், குறிப்பாக வயதான முதியவர்கள் உள்ள வீடுகளை நோட்டமிடுவார்.

அங்கு சென்று உங்கள் மகளைத் தெரியும், உங்கள் உறவினர்களைத் தெரியும் என்று கூறி அவர்கள் அணிந்திருக்கும் நகை மற்றும் பீரோவில் உள்ள நகை ஆகியவைகளை பாலிஷ் போட்டு தருவதாகவும், சில நேரங்களில் முதியவர்களை உள்ளே தள்ளி பூட்டிவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றுவிடுவார். மைதிலி மீது 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இவருடன் பைக்கில் ஆண் ஒருவரும் வருவார். எனவே, பஞ்சாயத்து தலைவர்களாகிய உங்களுக்கு நான் அனுப்புகிறேன். நீங்கள் அனைவருக்கும் அனுப்புங்கள். இந்த பெண் இதே வேலையாக திரிகிறார். இவளைப் பார்த்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ செய்யுங்கள். ஏன், கை, காலை கூட உடையுங்கள்.

போலீஸ் மூலமாக தண்டிப்பது வாய்ப்பு குறைவு தான். பெண் என்பதால் அமைதியாக உள்ளோம். நம்ம ஊர் மக்கள் ஏழ்மையில் உள்ளனர். ஒரு பவுன் தங்கம் 50 ஆயிரம் ரூபாயை தொட்டுவிட்டது. திருடு போய்விட்டால் வாங்க முடியாது. இந்த ஆடியோ குறித்து அனைத்து பஞ்சாயத்து, தலைவர்களுக்கும் அனுப்பியுள்ளேன். தயவு செய்து இவள் படத்தை பிரின்ட் எடுத்து, மக்களிடம் கொடுங்கள். கொஞ்சம் எங்களுக்கும் உதவி செய்யுங்கள். இவ்வாறு ஆடியோவில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் திருட்டு பெண்னை தேடி வருகின்றனர் இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Post

தி.மலையில் 7 உயிரை காவு வாங்கிய சோகம் – திக் திக் நொடிகள்.. நடந்தது என்ன?

Posted by - December 3, 2024 0
இந்நிலையில் நேற்று காலை தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்புப் படையினர் உள்ளிட்டோர் இணைந்து மீட்பு பணிகளில் தீவிரமாக இறங்கினர். அவ்வப்போது…
Generated Image November 13 2025 5 12PM

சட்டம் – ஒழுங்கைக் காப்பதில் காவல்துறை தோல்வி அடைந்துள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Posted by - November 13, 2025 0
சட்டம் – ஒழுங்கைக் காப்பதில் தமிழக காவல்துறை தோல்வி அடைந்துள்ளதாகப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். கோவையில் அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் குற்றம்…

“செய்தி சேனல் ஒளிப்பதிவாளர் மீது கொடூர தாக்குதல்” – கண்டனம் தெரிவித்த அண்ணாமலை

Posted by - March 1, 2024 0
திமுக பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான, சஹாரா கூரியர் நிறுவனத்தை, தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் சோதனையிட்டதைப் படம்பிடித்த தனியார் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் மீது கொடூர…
vijaykanth

தீவுத்திடலில் விஜயகாந்த் உடல்… பொதுமக்கள் அஞ்சலி… மதியம் 1 மணிக்கு இறுதி ஊர்வலம்

Posted by - December 29, 2023 0
தேமுதிக தலைவரும், நிறுவனருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு…

நடிப்பது மட்டுமே நாடாள தகுதி என்பது அவமானம் – சீமான் விமர்சனம்

Posted by - June 18, 2023 0
திரைப்படத்தில் நடிப்பது மட்டுமே ஒரு நாட்டை ஆள்வதற்கு, ஒரு இனத்தை வழி நடத்துவதற்கு தலைவனாக இருப்பதற்கு தகுதி வந்து விடுவது என்று கூறுவது அவமானகரமானது என சீமான்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *