வாயை மூடிக்கிட்டிரு… பெண்ணை அதட்டிய அமைச்சர் பொன்முடி

335 0

pதொடர்ந்து அமைச்சர் பொன்முடி  மக்களிடையே சர்ச்சைக்குரிய வகையில் பேசி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார் .   பேருந்தில் பெண்களுக்கு இலவச திட்டம் தமிழக அரசு கொண்டு வந்திருப்பதை,  பஸ்ஸில் பெண்கள் எல்லாம் எப்படி போகிறீர்கள்? ஓசி பஸ்ஸில் போகிறீர்கள் என சொல்லி பெரும் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டார்.

அந்த விவகாரத்தில் எதிர்கட்சித் தலைவர்களும் பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.  இதை அடுத்து விழுப்புரத்தில் நடந்த விழாவில் அமைச்சர் பொன்முடியிடம் பெண்கள் குறைகளை கூறிய போது , இந்த கிராமத்தில் எனக்கு அப்படியே ஓட்டு போட்டு கிழிச்சுட்டீங்க.. பெருசா கேட்க வந்துட்டீங்க.. உட்காருங்க.. என்று அதட்ட,   பெரும் சர்ச்சையையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் குறை சொல்லிய ஒரு பெண்ணை வாயை மூடிக்கிட்டு இரு என்றுஅமைச்சர் பொன்முடி அதட்டியதால் சலசலப்பு எழுந்திருக்கிறது.

pon

விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்று பேசிய போது, நாங்கள் ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் ஆகின்றன.  பல பணிகள் நடக்கின்றன.  கிராமங்களிலும் நகரங்களிலும் பல பணிகள் நடந்து வருகின்றன.  நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருக்கும் நேருவின் மூலமாக நகர்ப்புற வளர்ச்சிக்காக முதல்வர் ஸ்டாலின் ஏராளமான பணிகளை செய்து கொண்டிருக்கிறார்.

சென்னையாக இருந்தாலும் சரி , திருக்கோவிலூர் ஆக இருந்தாலும் சரி,  விழுப்புரம் ஆக இருந்தாலும் சரி… என்று அமைச்சர் பொன்முடி பேசிக் கொண்டிருந்தபோது,  ஒரு பெண் எழுந்து குறைகளைச் சொன்னார்.  அவரை பார்த்து கேலி செய்த அமைச்சர் பொன்முடி,   ‘’வாயை மூடிக்கிட்டுரு..’’ என்று அதட்டினார்.  பின்னர் அந்த பெண்ணிடம்,  ’’உன் வீட்டுக்காரர் வந்திருக்கிறாரா?’’ என்று கேட்டார்.  அதற்கு அந்தப் பெண் சொன்ன பதிலை கேட்ட பின்னர்,  ’’போயிட்டாரா.. பாவம்..’’ என சிரித்துக் கொண்டே சொன்னார்.

அப்போது தொண்டர்கள் சத்தம் போடத் துவங்கினர்.  உடனே அமைச்சர் பொன்முடி , அமைதியாக இருக்கும் படி கூறி,  அந்த அம்மா குறை சொல்லுது நல்லது தானே என சொல்லி சமாளித்து தன் பேச்சை தொடர்ந்தார்.

Related Post

சினிமாவை விட்டு விலகும் முடிவில் விஜய்? அப்போ கடைசி படம் இதுதானா! ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

Posted by - June 18, 2023 0
சினிமாவை விட்டு விலகும் முடிவில் விஜய்? அப்போ கடைசி படம் இதுதானா! ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் விஜய், சினிமாவை…

சூரி முதல் விஜயபாஸ்கர் வரை.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களமாடிய விஐபிக்களின் காளைகள்…!

Posted by - January 18, 2023 0
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களமிறங்கிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சூரி உள்ளிட்டோரின் காளைகள் வெற்றிபெற்றன. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது.…

கேதுவால் இந்த ஆண்டு இறுதிக்குள் செல்வந்த நிலையை அடையவுள்ள 3 ராசிகள்!

Posted by - December 7, 2024 0
2025 ஆம் ஆண்டு வரை இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். சில நல்ல செய்திகளும் வரும். எனவே கேது கிரகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்…

இவர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என எந்தக் கடவுளும் சொல்லவில்லை -நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

Posted by - January 25, 2023 0
2021-ஆம் ஆண்டு இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடிப்பி மலையாளத்தில் உருவான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி…

“நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான், கை விட மாட்டான்”.. மாஸாக புத்தாண்டு வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்

Posted by - January 1, 2025 0
ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த வேட்டையன் மாபெரும் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *