விக்னேஷ் சிவன் படத்தில் விவசாயி வேடத்தில் சீமான்…?

190 0

#seeman #ntk #vivasayi #vigneshsivan #nayanthara #pixeltv #pixelmedia #tamilcinema #tamillive #tamilnews

நாம் தமிழர் கட்சி தலைவரும், முன்னாள் இயக்குநர் கம் நடிகருமான சீமான் சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். மு.களஞ்சியம் சீமானை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். விக்னேஷ் சிவனின் புதிய படத்திலும் அவர் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் படத்தில் சீமான் விவசாயியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாம் தமிழர் கட்சி தலைவரும், முன்னாள் இயக்குநர் கம் நடிகருமான சீமான் சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். மு.களஞ்சியம் சீமானை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். விக்னேஷ் சிவனின் புதிய படத்திலும் அவர் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

விக்னேஷ் சிவன் அஜித்தை இயக்குவதாகவும், லைகா அப்படத்தை தயாரிப்பதாகவும், அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், அந்த வாய்ப்பு மகிழ்திருமேனிக்குச் சென்றது. இதனைத் தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தை கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பதாக கூறப்பட்டது. அதுவும் கைவிடப்பட்டு, கடைசியில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் விக்னேஷ் சிவன் இயக்க, பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தை தயாரிக்க முன் வந்தது.இதில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்க, எஸ்.ஜே.சூர்யா முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்கிறார். இசை அனிருத். படத்துக்கு எல்ஐசி (லவ் இன்ஸ்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. “இது நான் பதிவு செய்திருக்கும் பெயர். இதனை மாற்றாவிட்டால் வழக்குத் தொடுப்பேன்” என்று இசையமைப்பாளரும், இயக்குநருமான எஸ்.எஸ்.குமரன் எச்சரிக்கை விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.எல்ஐசி படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது. இதில் பிரதீப் ரங்கநாதனின் தந்தையாக விவசாயி வேடத்தில் சீமான் நடித்ததாகவும், இந்த கதாபாத்திரத்துக்காகவே அவர் தாடி வளர்த்திருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு தரப்பிலிருந்து எதிர்பார்க்கலாம்.

Related Post

ரஜினியின் ஜெயிலர் படத்தை பார்க்க வந்த தனுஷ், அனிருத்- திரையரங்கில் இசையமைப்பாளர் செய்த வேலை, வீடியோ

Posted by - August 10, 2023 0
ஜெயிலர் இனி தமிழ் சினிமாவில் 2 வாரங்களுக்கு ஜெயிலர் படம் பற்றி தான் அதிகம் பேசப்படும். காரணம் ரஜினி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் அமோகமான வரவேற்பை…

லியோ படப்பிடிப்பில் இணையும் அர்ஜுன்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Posted by - May 9, 2023 0
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில்…

அச்சு அசல் ராஷ்மிகா போலவே இருக்கும் பெண்! வீடியோ வைரல்

Posted by - October 27, 2023 0
நடிகை ராஷ்மிகா தற்போது தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் தடம் பதிக்க தொடங்கிவிட்டார். அவர் தற்போது ரன்பீர் கபூர் ஜோடியாக அனிமல் படத்தில் நடித்து இருக்கிறார். அதில்…

விடாமுயற்சி: அஜித் குமாருடன் பிரச்சனை? படத்திலிருந்து விலகுகிறதா லைகா புரொடக்ஷன்ஸ்!

Posted by - August 24, 2023 0
துணிவு வெற்றிக்குப் பிறகு அஜித்குமாரின் அடுத்த படத்தை லைகா நிறுவன தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அஜித் மற்றும் தயாரிப்பு தரப்பிற்கு திரைக்கதை…

வாரிசு இசை வெளியீட்டு விழா… பட தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம்? : ஏன் தெரியுமா?

Posted by - December 26, 2022 0
varisu audio launch | வாரிசு இசை வெளியீட்டு விழாவின் போது நேரு உள்விளையாட்டு அரங்கின் இருக்கைகள் சேதமடைந்துள்ளன. விஜயின் ‘வாரிசு’ திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *