விசிக உடன் தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படுமா? திமுகவின் மூவ் என்ன?

225 0

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, விடுதலை சிறுத்தைகள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியுடன் திமுக இன்று தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்துகிறது.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே இன்று இரண்டாவது கட்ட பேச்சு நடைபெற உள்ளது. 2 தனித் தொகுதிகளுடன், ஒரு பொதுத் தொகுதியை வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இன்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு கையெழுத்தாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும், மனிதநேய மக்கள் கட்சியுடன் முதல்கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக இன்று நடத்துகிறது. இதனிடையே, திமுக – காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதேபோல, திமுக- மதிமுக இடையே முரண்பாடு இல்லை என்றும், மனதளவில் உடன்பாடு இருப்பதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Related Post

திருவிடைமருதூர் | பிரச்சாரத்தில் திமுக அமைச்சர், அரசு கொறடா, எம்பியை வழிமறித்து கேள்வி கேட்ட விவசாயிகள்

Posted by - April 8, 2024 0
மயிலாடுதுறை: தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களை இணைக்கும் சாலையை சீரமைக்கக்கோரி கடந்த 3 ஆண்டுகளாக மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற திமுக…

நாடு முழுவதும் குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மனநிலை மக்களிடம் உள்ளது – அண்ணாமலை

Posted by - November 24, 2025 0
நாடு முழுவதும் குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மனநிலை மக்களிடம் உள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற இலங்கை…

அண்ணாமலை – எல்.முருகன் சாலை மறியல்.. நீலகிரியில் பரபரப்பு

Posted by - March 25, 2024 0
நீலகிரியில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக பெரும் எண்ணிக்கையிலான பாஜகவினருடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, வேட்பாளர் எல்.முருகன் உள்ளிட்டோர் வருகை தந்தனர். நீலகிரி மக்களவைத் தொகுதியில்…

தாக்கும் காங்கிரஸ்… தயங்கும் திமுக! – என்ன மாயம் செய்தார் ராஜேந்திர பாலாஜி?

Posted by - November 17, 2025 0
சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இம்முறை சிவகாசியில் போட்டியிடும் திட்டத்துடன் இருக்கும் திமுக மவுன சாட்சியாக நிற்பது…

“பழம் நமக்குத்தான்” – அன்புமணி உற்சாகப் பேச்சு

Posted by - November 13, 2025 0
“தேர்தல் ஆணையம் என்னை அங்கீகாரம் செய்துவிட்டார்கள். மாம்பழம் சின்னத்தை நமக்கு தான் தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது; அதை ஒன்றும் செய்ய முடியாது” என்று பாமக தலைவர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *