image

வேலை கையிலெடுத்த சிவகார்த்திகேயன்…

86 0

சிவகார்த்திகேயனின் 26 ஆவது படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது

அமரன் படத்தைத் தொடர்ந்து கமல் தயாரிப்பில் நடிக்க இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாக இருக்கிறது.

பராசக்தி திரைப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்தபடத்தை வெங்கட் பிரபு இயக்குவார் என்று பரவலாக எதிர்பார்ப்புகள் இருந்தன. இதனிடையில் சிவகுமார்  முருகேசன் தயாரிப்பில் ஒரு குட்டி கிராமத்து பின்னணியை கொண்ட கமர்சியல் படத்தில் சிவா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. சிவகுமார் முருகேஷ் இயக்கியுள்ள தாய்கிழவி திரைப்படம் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இந்த படம் பிப்ரவரி 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தற்போது சிவகார்த்திகேயன் 26 ஆவது படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்க இருக்கும் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகியுள்ளது . நாளை இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக இருக்கிறது

மீண்டும் கமல் தயாரிப்பில்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்தது. வீர மரணமடைந்த மேஜர் முகுந்தின் வாழ்க்கையை தழுவி உருவான அமரன் திரைப்படம் உலகளவில் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.  இப்படம் ராஜ்கமல் நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபம் ஈட்டி தந்த படமாக அமைந்தது. அமரன் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வெளியான மதராஸி மற்றும் பராசக்தி திரைப்படங்கள் எதிர்பார்த்த வசூல் வெற்றியை தரவில்லை. அதேபோல் ராஜ்கமல் இணைந்து தயாரித்த தக் லைஃப் திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக கமல் தயாரிப்பில் எஸ்.கே நடிக்க இருப்பது ரசிகர்களின் உற்சாகத்தை கிளப்பியுள்ளது. இப்படம் தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் தமிழ் கடவுள் முருகனின் வேலை கையில் ஏந்தியபடி ஒருத்தர் நிற்கிறார். அண்மை காலங்களில் வேலை மையப்படுத்தி பல அரசியல் நிகழ்ந்து வரும் நிலையில் இந்த போஸ்டர் வெளியாகியுள்ளது பேசுபொருளாகியுள்ளது .

Related Post

ஸ்ருதிஹாசன் முகத்துக்கு என்னாச்சு.. புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

Posted by - November 29, 2022 0
ஸ்ருதி நடிகை ஸ்ருதிஹாசன் எப்போதும் அனைத்தையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். அவரது காதல் விஷயங்களை கூட இன்ஸ்டாகிராமில் வெளிப்படையாக பகிரக்கூடியவர். அவரது முகத்தில் பிளாட்டிக் சர்ஜரி செய்ததை கூட…

பிரபல தயாரிப்பாளரை எதிர்க்கும் விஜய் ரசிகர்கள்

Posted by - December 8, 2022 0
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு, துணிவு திரைப்படங்களின் வெளியாகவுள்ளது. இப்படம் குறித்து பிரபல தயாரிப்பாளர் கருத்து தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகை நெருங்க நெருங்க வாரிசு, துணிவு திரைப்படங்களின்…

கார் விபத்தில் சிக்கும் அஜித்… டூப் இல்லாமல் உயிரை பணயம் வைத்து ஆக்டிங்… ரசிகர்களை அதிரவைத்த வீடியோ!

Posted by - April 4, 2024 0
விடாமுயற்சி திரைப்படத்தில் கார் சேஸ் சண்டைக்காட்சியில் டூப் இல்லாமல் அஜித் நடித்த காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நடிகர் அஜித் தற்போது லைகா நிறுவனம் தயாரிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில்…
sheela

திருமண உறவில் இருந்து வெளியேறுகிறேன்- ஷீலா பகிரங்க அறிவிப்பு

Posted by - December 2, 2023 0
வளர்ந்து வரும் நடிகையான ஷீலா ராஜ்குமார் தன் எதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். பரத நாட்டிய கலைஞரான இவர் கூத்து பட்டறை நடத்தி வரும் தம்பி…

தமிழுக்கு வரும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ நடிகர்.. பா.ரஞ்சித் தயாரிப்பில் புது படம்.!

Posted by - February 29, 2024 0
ரஞ்சித் கிளாப் அடித்துப் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். அவரது பிற தயாரிப்புகள் போல் இதுவும் விளிம்புநிலை மக்களைக் குறித்துப் பேசுவதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் பா.ரஞ்சித்தின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *