ஸ்டாலின் அங்கிள் வெரி வொர்ஸ்ட் அங்கிள்..

222 0

#TVK | #TVKVijay |#VijaySpeech|#TVKMaduraiMaanadu | #TamilagaVettrikazhagam | #Vijay | #TVKLeader | #TVKMaanadu | #MaduraiTVKMaanadu | #TVKFlag | #தமிழகவெற்றிக்கழகம் | #TVKMaduraiMaanaduUpdateWithpixelmedia

தவெக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசினார்.

மதுரையில் நடைபெறும் 2ஆவது தவெக மாநில மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் அனல் பறக்கும் பேச்சால் தொண்டர்களை கவர்ந்து வருகிறார். குறிப்பாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளையும் விமர்சித்து பேசியுள்ளார். அதேபோன்று அதிமுகவை பாஜகவின் அடிமை கட்சி என்றும் கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து பேசிய தவெக தலைவர் விஜய், நான் கட்சி தொடங்க போவதாக செய்திகள் வெளியானது. அவர் வர மாட்டார், அவர் தொடங்க மாட்டார் என தெரிவித்தார்கள். கட்சி தொடங்கிய பிறகு விஜய் அரசியலுக்கு தெரியாது. அவர் எதை பேசப் போகிறார் என்றும் விமர்சித்தார்கள் என தெரிவித்தார்.

பின்பு பேசிய விஜய், ஷூட்டிங்கில் வந்து ஆட்சியை பிடிக்க முடியாது என்றனர். அதற்கு பலரும் எடுத்துக்காட்டாகவும் கூறினர். விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாகாது என்றனர். இந்த அரசியல் ஆய்வாளர்களுக்கு நான் சொல்வது இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல, மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் வரும். நான் ஒன்றும் மார்க்கெட் போன பின் அடைக்கலம் தேடி, அரசியலுக்கு வரவில்லை, படைக்கலத்தோடு வந்திருக்கிறேன் என தன் மீதான விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்தார்.

அதன் பின்பு திமுக தலைவர் ஸ்டாலின் குறித்தும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். அதில், வெற்று விளம்பர மாடல் திமுக பாஜக உடன் ரகசிய கூட்டணி வைத்துள்ளது. ஒரு ரெய்டு வந்தால் போதும் உடனே டெல்லிக்கு போய் ரகசிய மீட்டிங் போடுறாங்க. ஸ்டாலின் அங்கிள்  வெரி ராங்க் அங்கிள். கூட்டணி வைக்கலாம். கூட்டணி வச்சு தப்பிச்சிக்கலாம் என்று திமுக நினைக்கிறது, அது நடக்காது. பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. அண்ணா பல்கலைக்கழக பிரச்னை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கதறிட்டு இருக்காங்க. உங்களை அப்பான்னு வேறு சொல்லனுமா! சாரி அங்கிள்.. என்ன இதெல்லாம்.. வெரி வெரி வொர்ஸ்ட் அங்கிள் என கடுமையாக விமர்சித்து விஜய் கிண்டல்.

Related Post

கடன் வாங்கி கொள்ளையடித்த திமுக அரசு தொடர வேண்டுமா? – இபிஎஸ் கேள்வி

Posted by - April 9, 2026 0
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாத பொம்மை முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார் என் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சென்னை அண்ணா நகரில் அதிமுக வேட்பாளர் கோகுல…

பிஹார் தோல்வி பிடிக்குள் சிக்கிய காங். – என்ன செய்யப் போகிறது திமுக?

Posted by - November 19, 2025 0
பிஹார் தேர்தல் முடிவுகளை வைத்து தமிழகத்தில் தங்களின் பேரவலிமையைக் கூட்டிக் கொள்ளலாம் என எதிர்பார்த்திருந்த காங்கிரஸ் கட்சி, இப்போது திமுக தரும் இடங்களை மறு பேச்சுப் பேசாமல்…

இரு முனை போட்டியாக மாறி வரும் தமிழக தேர்தல் களம்!

Posted by - April 11, 2026 0
திமுக – அதிமுக கட்சிகளிடையே தொடரும் தாக்குதல் பாணி பிரச்சாரமானது தமிழக தேர்தல் களத்தை 4 முனைப் போட்டி என்ற நிலையில் இருந்து இருமுனைப் போட்டிக்கு நகர்த்தி…

இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள்

Posted by - January 5, 2026 0
அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். TN Govt Teachers Protest: சம வேலைக்கு…

தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் வாக்குரிமை: திருமாவளவன் எச்சரிக்கை! ஸ்டாலின் நடவடிக்கை தேவை!

Posted by - August 2, 2025 0
எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ்நாட்டில் வாக்குரிமை இல்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும் – திருமாவளவன் விழுப்புரம்: வடமாநிலத்தவர்களை தமிழ்நாட்டில் வாக்காளர்களாக சேர்த்தால் தமிழ்நாட்டின அரசியல் தலைவர்களாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *