ஹமாஸ்- இஸ்ரேல் போர்: காசாவில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது

364 0

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமான வகையில் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. ஐ.நா. பொதுச்சபையில் போர் நிறுத்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போர் இடைநிறுத்தம் தேவை என அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால், இரண்டையும் ஏற்க இஸ்ரேல் மறுத்துவிட்டது. போரை நிறுத்தினால் ஹமாஸ் அமைப்பிடம் தாங்கள் தோற்றதாகிவிடும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்திருந்தார்.ஹமாஸ்- இஸ்ரேல் போர்: காசாவில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 10  ஆயிரத்தை கடந்தது | Israeli troops divide north and south Gaza, as reported  death toll exceeds 10000
இஸ்ரேல் தொடர் தாக்குதலுக்கு இடையே நேற்று முன்தினம் காசாவில் தகவல் தொடர்பை துண்டித்தது இஸ்ரேல். அதனைத் தொடர்ந்து காசாவை வடக்கு, தெற்கு என இரண்டாக பிரித்துள்ளது. இத்தகவலை இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அத்துடன் இஸ்ரேல் தரைப்படைகள் எப்போது வேண்டுமானாலும் முழுமையாக தாக்குதல் நடத்த தயாராக இருக்கிறது.

இதற்கிடையே ஹமாஸ்- இஸ்ரேல் போரில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் 4,100-க்கும் மேற்பட்ட குழந்தைகள், 2,640 பெண்கள் அடங்குவர். இந்த தகவலை காசாவில் அதிகாரம் நடத்தி வரும் ஹமாஸின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆக்கிரமிப்பு செய்துள்ள மேற்கு கரையில் 140-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் வன்முறை மற்றும் சோதனையின்போது கொல்லப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேலில் 1,400 பேர் உயிரிழந்துள்ளனர். 242 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.

ராஃபா எல்லை வழியாக சுமார் 1,100 பேர் காசா முனையில் இருந்து வெளியேறியுள்ளனர். தற்போது காசாவில் மீண்டும் தகவல் தொடர்பு கிடைக்கப் பெற்றுள்ளது. பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பவர்களை உலக நாடுகள் மறந்து விடுவோ என அவர்களது குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

Related Post

சீனாவில் மீண்டும் கொரோனா போன்ற கொடிய தொற்று பரவும் அபாயம்- நிபுணர்கள் எச்சரிக்கை

Posted by - September 27, 2023 0
பீஜிங்: கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் உருவான கொரோனா என்ற கொடூர நோய் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்கள் உயிரை…

இது புதிய வைரஸா..? இதுவும் கொரோனா போன்றதா..? தடுப்பூசி ஏதேனும் உள்ளதா..?

Posted by - January 7, 2025 0
ஹியூமன் மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) என்பது ஒரு பொதுவான சுவாச வைரஸ் ஆகும். இது கீழ் மற்றும் மேல் சுவாச நோய்த்தொற்றுகளை (சளி போன்றது) ஏற்படுத்துகிறது. இது பொதுவாக…

எலிகள் மூலம் பரவும் ஒமைக்ரான் உருமாறிய கொரோனா- சி.எம்.சி. தலைமையிலான விஞ்ஞானிகள் ஆய்வு

Posted by - April 27, 2023 0
கொரோனா உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது எவ்வாறு பரவியது என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 2021-ம்…

சிங்கப்பூரில் பரவி வரும் புது வகை கொரோனா!..

Posted by - May 22, 2024 0
நோய் வருவதும், அதைக் குணப்படுத்துவதும், சாதாரண மருத்துவ நிகழ்வுதான் என்றாலும், அந்த நோய் தொற்று நோயாக இருக்கும் பட்சத்தில், அது பரவாமல் தடுப்பது மிகவும் முக்கியமானது. புதுவகையான…

மீண்டும் உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார் எலான் மஸ்க்!

Posted by - June 1, 2023 0
டெஸ்லா இன்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் மீண்டும் உலகின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்த்தை பெற்று இருக்கிறார். இவர் பெர்னார்டு அர்னால்டை பின்னுக்குத்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *