மீனவர்கள் நலனில் ஊழல் திமுக அரசுக்கு அக்கறை கிடையாது!- அண்ணாமலை

231 0

வரும் பாராளுமன்றத் தேர்தலில், சந்தர்ப்பவாத, ஊழல் திமுக காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிப்போம்  என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் (ட்விட்டர்) பதிவில்,

இன்றைய மாலை என் மண் என் மக்கள் பயணம், பாண்டிய மன்னர்களின் அரசவைப் புலவராகவும், அகத்திய மாமுனிவரின் முதன்மைச் சீடராகவும் விளங்கிய அதங்கோட்டாசான் பிறந்த புண்ணிய பூமியான குமரி மாவட்டத்தில், கிள்ளியூர் பகுதியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீது பேரன்பு கொண்ட மக்கள் சூழ சிறப்பாக நடந்தேறியது.

கர்மவீரர் காமராஜரும், மக்கள் பணிக்கு தன் வாழ்வை அர்ப்பணித்த ஐயா பொன்னப்ப நாடாரும் அரசியல் செய்த மண் இன்று, மக்கள் பணி என்றால் என்னவென்றே தெரியாத காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏக்களால் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

செண்பகவல்லி அணை, முல்லைப் பெரியாறு அணை, நெய்யாறு அணை என்று தமிழக உரிமை அனைத்தையும் அடகு வைத்துள்ளது திமுக அரசு. காமராஜர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட நெய்யாறு இடதுகரை கால்வாய், இன்று நீர்வரத்து இல்லாமல் இருக்கிறது. சட்டசபையில் திமுகவிடம் இதை பற்றி கேள்வி எழுப்பினால், தண்ணீர் வராத கால்வாயை சுத்தம் செய்தால் என்ன என்று பேசியுள்ளார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். டாஸ்மாக் போதும் என்றிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். 1971 ஆம் ஆண்டு, மதுவிலக்குக்காகப் போராடிய 33,000 பேரைக் கைது செய்த கருணாநிதியின் மகன் தானே. வேறு எப்படி இருப்பார்?

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியில், குமரி கிராம்பும், மார்த்தாண்டம் தேனும், மட்டி வாழைப் பழமும் புவிசார் குறியீடு பெற்றுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் விளைபொருட்கள் உலகத்தில் அனைத்து இடத்திற்கும் செல்லவேண்டும் என்பதே நமது பாரத பிரதமரின் ஆசை.

மோடியின் முகவரி : கிள்ளியூர்

மத்திய அரசின் Startup India திட்டத்தின் மூலம் தொழில் முனைவோரான திருமதி சுசீலா, பிரதமரின் இலவச மருத்துவக் காப்பீடு திட்டத்தின் மூலம் பலனடைந்த திரு. பால்மணி, பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் வீடு பெற்ற திருமதி. சாந்தினி, இளைஞர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் நேரு யுவ கேந்திரா சங்கதன் திட்டத்தின் மூலம் பலனடைந்த திரு ராஜேஷ், உழவர் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மூலம் பலனடைந்த திரு. மணிகண்டன். இவர்கள்தான் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் முகவரி.

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பெயரை உச்சரிக்க கூட தகுதி இல்லாத மனிதர் இந்த மலை முழுங்கி மனோ தங்கராஜ் .மத்திய அரசு தமிழகத்தின் மீனவர்களின் நலனுக்காக வழங்கும் நிதி எங்கே செல்கிறது? கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தினமும் 600 லாரியில் குமரி மாவட்டத்தின் வளங்கள் சூறையாடப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால் தேங்காப்பட்டினம் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்பு பணிகளுக்கு போதிய கல் அனுப்பாமல் ஆமை வேகத்தில் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த துறைமுகத்தின் முகத்துவாரத்தில் கடல் அலையால் ஏற்படும் மணல் திட்டுகளில் சிக்கி இதுவரை 50 க்கும் மேற்பட்ட படகுகள் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்துகளில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் எத்தனை உயிர் போகும் வரை இந்த ஊழல் திமுக அரசு காத்திருக்கும். மீனவர்களில் நலனில் துளி கூட இல்லாத அரசு இந்த ஊழல் திமுக அரசு.

 

 

வரும் பாராளுமன்றத் தேர்தலில், சந்தர்ப்பவாத, ஊழல் திமுக காங்கிரஸ் கூட்டணியை தோற்கடித்து, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்க, குமரி மண்ணும் நிச்சயம் துணை நிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு… வானிலை அலெர்ட்!

Posted by - May 25, 2023 0
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 5…

தத்தளிக்கும் (தென்)தமிழகம்…ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டியது..

Posted by - December 18, 2023 0
வரலாற்றில் இல்லாத வகையில் தென் மாவட்டங்களில் மழை பெய்துள்ளதாக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். சென்னை கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்த தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ்…

மிச்சாங் புயல் வெள்ள பாதிப்பு: 4 மாவட்டங்களுக்கு மின்வாரியம் புதிய அறிவிப்பு

Posted by - December 14, 2023 0
மிச்சாங் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. நகரப்பகுதிகளில் வெள்ளம் வடிந்து உடனடியாக…

முருங்கை மரம்.. வேர் முதல் காய் வரை கொட்டிக்கிடக்கும் அதிசயம்.. ஆச்சரிய குச்சிகளும், அதிசய பூக்களும்

Posted by - December 21, 2023 0
சென்னை: முருங்கை என்றாலே பெண்களுக்கு அருமருந்தாகக்கூடிய கீரையாகும்.. முருங்கை ஈர்க்குகள் பெண்களுக்கு எப்படி உதவுகிறது தெரியுமா? முருங்கை விதைகளை வைத்து என்ன செய்யலாம்? பெண்களுக்கு 45 வயதாகிவிட்டாலே…

ஓலா, ஊபர் போராட்டம் எதிரொலி: 20 கிலோமீட்டருக்கு ரூ.1000 கட்டணம் – பயணிகள் கடும் அதிர்ச்சி

Posted by - October 18, 2023 0
சென்னை: ஓலா, உபேர் டிரைவர்கள் நேற்று முன்தினம் முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். வாடகை வாகனங்களை முறைப்படுத்த வேண்டும், பைக் டாக்சியை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *