“ராகுல் எம்.பி பதவி பறிப்பை திருமாவளவன் நினைவில் கொள்ள வேண்டும்…”- பாமக வழக்கறிஞர் பாலு பேட்டி..!

249 0

அரசியல் கட்சித் தலைவர் எப்படி பேசக் கூடாது என்பதற்கு முன் உதாரணமாக திருமாவளவன் இருப்பதாக பாமக வழக்கறிஞர் பாலு விமர்சனம்.

நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம், சிதம்பரத்தில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்பதை மனதில் வைத்து பாமகவுக்கு எதிராக விசிக தலைவர் திருமாவளவன் பேசி வருவதாக, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாலு குற்றம்சாட்டியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் திரெளபதி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் வரக்கூடாது என ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் போராட்டம் நடத்தியதால் அங்கு வன்முறை ஏற்படும் சூழல் நிலவியது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அடுத்த உத்தரவு வரும் வரை கோயிலை பூட்டுமாறு உத்தரவிடப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு ஆவேசமாக உரையாற்றினார். அப்போழுது பாமக குறித்தும் அந்த கட்சியின் வழக்கறிஞர் பாலு மீது கடுமையான விமர்சனங்களை திருமாவளவன் முன்வைத்தார்.இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக வழக்கறிஞர் பாலு, அரசியல் கட்சித் தலைவர் எப்படி பேசக் கூடாது என்பதற்கு முன் உதாரணமாக திருமாவளவன் இருப்பதாக விமர்சித்தார். திருமாவளவனை அடையாளப்படுத்தியதே பாமக தான் எனவும் பாலு குறிப்பிட்டார். தேர்தலை மனதில் வைத்தே மேல்பாதி விவகாரத்தை திருமாவளவன் பேசி வருவதாகவும் கூறினார். மோடி சமூகத்தைப் பற்றி பேசியதால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை திருமாவளவன் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் பாலு தெரிவித்தார்.

Related Post

சட்ட விரோத பண பரிமாற்ற புகார்.. தமிழகத்தில் 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.. சிக்கியது யார்?

Posted by - September 26, 2023 0
சென்னை: தமிழ்நாட்டில் 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை, மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல ஊர்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில்…

தஞ்சையில் மோதல்: பேருந்தை மற்றொரு பேருந்தின் மீது மோதியதால் பரபரப்பு..

Posted by - November 21, 2022 0
இரண்டு பேருந்திற்க்கும் இடையே யாரும் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தஞ்சை: பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சைக்கு பேருந்துகளை இயக்குவதில் இரண்டு தனியார் பேருந்து டிரைவர்களிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பேருந்து…

மலைக்கோட்டை மதில் சுவரில் நீர்கசிவு- தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு

Posted by - July 20, 2023 0
நாமக்கல்: நாமக்கல் நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை உள்ளது. ஒரே கல்லால் ஆன இந்த மலையின் உச்சியில் 246 அடி உயரத்தில் கோட்டை மதில்சுவர் உள்ளது. இக்கோட்டையானது 16-ம்…

கேதுவால் இந்த ஆண்டு இறுதிக்குள் செல்வந்த நிலையை அடையவுள்ள 3 ராசிகள்!

Posted by - December 7, 2024 0
2025 ஆம் ஆண்டு வரை இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். சில நல்ல செய்திகளும் வரும். எனவே கேது கிரகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்…

சென்னையில் உச்சகட்ட பதற்றம்…. குவிந்த போலீசார் |

Posted by - December 26, 2025 0
இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ எனப்படும் பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். முற்றுகை போராட்டத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *