இனி, இதை செய்யவேக் கூடாது! தவெக நிர்வாகிகளுக்கு கட்டளையிட்ட விஜய்..

177 0

Generated image

தவெக கட்சி சார்பில் வைக்கப்பட்ட பேனர் சரிந்து விழுந்ததில் 70 வயது முதியவர் படுகாயம் அடைந்தார்.

சென்னை வில்லிவாக்கத்தில் தவெக கட்சி சார்பில் வைக்கப்பட்ட பேனர் சரிந்து விழுந்ததில் 70 வயது முதியவர் படுகாயம் அடைந்த நிலையில், இனி பொது இடங்களில் பேனர் வைக்கக் கூடாது என தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் அவரது கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தவெக நிர்வாகிகளுக்கு கட்டளை:

இதுகுறித்து புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரின் உத்தரவு மற்றும் அன்புக் கட்டளையின்படி கழகத்தின் சார்பில் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும், விழாக்களும், உரிய அனுமதியுடன், மிகுந்த கண்ணியத்துடன் கட்டுப்பாடுடன் இருப்பதை கழக நிர்வாகிகள் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்.

இதுவரை, எந்தச் சூழலிலும் பொதுமக்களுக்கும். போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்களோ, விளம்பரப் பதாகைகளோ கழகம் சார்பில் வைக்கப்படவில்லை. நம் வெற்றித் தலைவரின் பேனர்கள் மற்றும் விளம்பரப் பதாகைகள் வைப்பதை விரும்புவதோ ஊக்கப்படுத்துவதோ இல்லை.

எனவே, கழகத் தலைவர் அவர்களின் உத்தரவை மாநிலம், மாவட்டம், நகரம், ஒன்றியம், பேரூர். கிளைக்கழகம் மற்றும் சார்பு அணிகள் உள்ளிட்ட கழகத்தின் அனைத்து நிலையிலான அமைப்புகளும் மிகவும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

என்ன சொன்னார்விஜய்?

குறிப்பாக, நகரில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும், நெடுஞ்சாலையோரங்களிலும் கழகத்தின் சார்பில் பேனர்கள் எந்த காரணத்திற்காகவும் அறவே வைக்கக் கூடாது.

இது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளையும், காவல்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிந்து, கழக வழக்கறிஞர்கள் அணியின் உதவியுடன் செயல்பட வேண்டும் என்று கழக நிர்வாகிகள், தோழர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

கொடிக்கம்பங்களுக்கு கட்டுப்பாடு:

தமிழ்நாட்டில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற பிறப்பித்த உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் அறிவுறுத்தல் வழங்கியிருந்தது.

வரும் ஜூலை 2ம் தேதிக்குள் கொடிக்கம்பங்களை அகற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டி வரும் என்றும் உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்தது. சாலையின் நடுவில் அமைந்துள்ள தடுப்புகளில் கொடிக்கம்பங்கள் நடக்க கூடாது என்றும் தெரிவித்திருந்தது.

Related Post

e

வரலாறு காணாத வாக்குப்பதிவு! 5 மணி நிலவரப்படி 82.24% – ஆட்சி மாற்றத்தின் அறிகுறியா?

Posted by - April 23, 2026 0
தமிழகத்தில் இந்த முறை தேர்தலில் வாக்குப்பதிவு வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதுகுறித்து பிரபல அரசியல் விமர்சகர்கள்…

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து எம்.பி. கல்யாண சுந்தரம் விடுவிப்பு .

Posted by - July 14, 2025 0
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளராக எம்.எல்.ஏ. சாக்கோட்டை க.அன்பழகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சாவூர் வடக்கு மாவட்டக்…
Generated Image November 20 2025 6 37PM

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக

Posted by - November 20, 2025 0
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தநிலையில் கடந்த 2 மாதமாக அமைதி காத்து வந்த விஜய், வருகிற டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில்…

சைலென்ட்டாக சம்பவம் செய்யும் நயினார்; தமிழகத்தில் பாஜக-வை வலுப்படுத்த பக்கா பிளான்

Posted by - August 20, 2025 0
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தனது இத்தனை கால அரசியல் அனுபவங்களை வைத்து, தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை சைலென்ட்டாக, அதே நேரத்தில் பக்காவாக செய்து…

“பலமடங்கு அரசியல் அவலங்களை அரங்கேற்றி” – ஈரோடு இடைத்தேர்தல்.. த.வெ.க வெளியிட்ட அறிவிப்பு!

Posted by - January 17, 2025 0
திமுகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வி.சி.சந்திரகுமார் இன்று நண்பகல் 12 மணியளவில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார். அதேபோல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *