மெட்ராஸ் ஐ: அறிகுறியும்.. தற்காப்பு முறைகளும்.. Madras eye

226 0

சில வைரஸ் தொற்றுகள் கருவிழியை பாதிக்கக்கூடியவை. ஒருபோதும் சுய மருத்துவம் மேற்கொள்ளக்கூடாது. மழைக் காலங்களில் அதிகமாக பரவும் நோய்த்தொற்றுகளுள் ஒன்று, ‘மெட்ராஸ் ஐ’. கண் வெண்படல அழற்சி எனப்படும் இந்த கண் நோய், வைரஸ் தொற்றுகளால் ஏற்படுகிறது. சில சமயங்களில் பாக்டீரியா தொற்றாகவும் பரவும். சில வைரஸ் தொற்றுகள் கருவிழியை பாதிக்கக்கூடியவை. கண் பார்வை திறனை கடுமையாக பாதிக்கும் தன்மை கொண்டவை. எனவே மெட்ராஸ் ஐ தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எப்படி பரவும்? மெட்ராஸ் ஐ பாதிப்புக்குள்ளானவர் உபயோகிக்கும் பொருட்களை மற்றவர்கள் தொடுவது, பயன்படுத்துவது, நோய்த்தொற்றுக்கு ஆளானவர் கைகளால் தொட்ட இடங்களை தொடுவது போன்றவை மூலம் இந்த கண் நோய் பரவக்கூடும்.
Madras eye
நோய் பாதிப்புக்குள்ளானவர்களின் டவல்கள், தலையணை உறைகள், ஒப்பனைப் பொருட்கள் போன்றவற்றை தொடுவதையோ, பயன்படுத்துவதையோ தவிர்க்க வேண்டும். வீட்டில் யாருக்கேனும் நோய்த்தொற்று ஏற்பட்டால் மற்றவர்களும் அடிக்கடி கை கழுவ வேண்டும். அவர்களுக்கு மருந்து போட்டால் உடனே கைகளை கழுவி விட வேண்டும். மெட்ராஸ் ஐ வருவதற்கு காரணங்கள்? வைரஸ் தொற்று, பாக்டீரியா தொற்று காரணமாக ஏற்பட்டாலும் இந்த வைரஸ் தொற்றுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வேறுபாடுகள் உள்ளன. இவற்றுள் ஒரு சில வைரஸ் மாறுபாடுகள்தான் கருவிழியை பாதிக்கும் தன்மை கொண்டவை. ஒரு சிலருக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டதுமே கண்கள் மங்கலாக தொடங்கிவிடும். சிலருக்கு வாரக்கணக்கில் நீடிக்கும். முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமானது. ஒருபோதும் சுய மருத்துவம் மேற்கொள்ளக்கூடாது.
வைரஸ்கள் மாறுபாடு கொண்டவை என்பதால் கடைகளில் விற்கப்படும் கண் சொட்டு மருந்துகளை உபயோகிக்கக்கூடாது. மருத்துவரிடம் பரிசோதித்துவிட்டு அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மெட்ராஸ் ஐ-க்கான அறிகுறிகள்: கண் சிவப்பு நிறத்துக்கு மாறுதல், கண்களில் உறுத்தல் ஏற்படுதல், கண் எரிச்சல், கண்களில் பூழை ஏற்படுதல், கண்களில் நீர் வடிதல், கண் கூசுதல் போன்ற அறி குறிகள் தென்படும். வைரஸ் தொற்று தீவிரமாக இருந்தால் கண்களில் வீக்கம், பார்வை மங்குதல், வெளிச்சத்தை பார்ப்பதற்கு சிரமப்படுதல் போன்ற அறிகுறிகள் அதிகமாக தென்படும்.Madras eye

எப்போது குணமாகும்? ஒருவருக்கு மெட்ராஸ் ஐ தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் நான்கு முதல் 7 நாட்களுக்கு பிறகுதான் முழுமையாக வெளிப்படும். முறையான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டால் இரண்டு முதல் மூன்று வாரத்துக்குள் சரியாகிவிடும். Madras eyeகணினியில் வேலை பார்ப்பது உள்பட வழக்கமான வேலைகள் அனைத்தையும் பார்க்கலாம். ஆனால் சுகாதார வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கண்ணாடி அணிந்து கொள்வது பாதுகாப்பானது. அது மற்றவர்களுக்கு நோய்த்தொற்று பரவுவதை கட்டுப்படுத்த உதவும். எப்போது மருத்துவரை அணுக வேண்டும்? ஒருசில அறிகுறிகள் தென்பட தொடங்கினாலே கண் மருத்துவரை அணுகி பரிசோதித்துவிட வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தை உபயோகித்தால் சாதாரண தொற்று ஒரு வாரத்துக்குள்ளேயே சரியாகிவிடும். வைரஸ் தொற்று கடுமையாக இருந்தால் கண் இயல்புக்கு திரும்புவதற்கு இரண்டு முதல் நான்கு வாரங்கள் ஆகக்கூடும்.

Related Post

தமிழ்நாடு-புதுவையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்கியது: 9.76 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள் ….

Posted by - April 6, 2023 0
தேர்வு மையங்களுக்குள் மின் சாதன பொருட்கள், செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற…

முடிஞ்சிப்போன கதை! இப்போ ஏன்? – உதயநிதி அரசியல் குறித்த கேள்விக்கு மனைவி கிருத்திகா கொடுத்த பதில்

Posted by - January 8, 2025 0
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் காதலிக்க நேரமில்லை. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசியல் பயணம் குறித்த கேள்விக்கு…

1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!

Posted by - December 26, 2024 0
சட்டமன்ற தேர்தல் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தி.மு.க. அரசு வாக்குகளை அள்ள புது வியூகத்தை கையில் எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் 2026ம் ஆண்டு நடக்க…

இன்று கரையை கடக்கும் மாண்டஸ் புயல்.. 8 மாவட்டங்களில் அதிகனமழை கொட்டும் – வானிலை மையம் அலெர்ட்

Posted by - December 9, 2022 0
Cyclone Mandous | திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.…

நிலக்கரி சுரங்க அறிவிப்பு- சட்டப்பேரவையில் அதிமுக, காங்கிரஸ், பாமக எம்.எல்.ஏக்கள் காரசார விவாதம்

Posted by - April 5, 2023 0
நிலக்கரி சுரங்க அறிவிப்பு விவகாரம் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *