s

காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் – ”வெட்கமாக இல்லையா”

141 0

தி ஹண்ட்ரட் எனப்படும் கிரிக்கெட் லீகில் பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்ததற்காக, சன்ரைசர்ஸ் நிர்வாகத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

SRH The Hundred Auction: சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு எதிராக செயல்படும் நாட்டைச் சேர்ந்த வீரரை ஏலத்தில் எடுத்தது ஏன்? என சன்ரைசர்ஸ் நிர்வாகத்திற்கு நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பாகிஸ்தான் வீரருக்கு ரூ.2.34 கோடி

தி ஹண்ட்ரட் எனப்படும் கிரிக்கெட் தொடர் கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்தில் நடைபெற்றது. பெரும்பாலும் இந்திய உரிமையாளர்களை கொண்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. நடப்பாண்டிற்கான தொடர் வரும் ஜுலை மாதம் தொடங்க உள்ள நிலையில், வீரர்களுக்கான ஏலம் நேற்று நடைபெற்றது. அதில் சன் குழுமத்தைச் சேர்ந்த சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி, இந்திய மதிப்பில் 2 கோடியே 34 லட்சம் ரூபாய்க்கு, பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அஹ்மதை ஏலத்தில் எடுத்தது. இந்த போட்டி தொடரின் வரலாற்றில் இந்தியருக்கு சொந்தமான அணியில், ஒரு பாகிஸ்தான் வீரர் ஒப்பந்தம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். இருநாடுகளுக்கு இடையேயான எல்லை பிரச்னை காரணமாக கடந்த 2009ம் ஆண்டுக்குப் பிறகு, ஐபிஎல் அணி நிர்வாகங்கள் பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுப்பதை தவிர்த்து வருகின்றன. அதே பாணி தி ஹண்ட்ரட்ஸிலும் நிலவி வந்த நிலையில், சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி அந்த நிலைப்பாட்டை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

சன்ரைசர்ஸ் நிர்வாகத்தின் மீது விமர்சனம்

ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் எனும் அணியை சொந்தமாக கொண்டுள்ள சன் குழுமம், தென்னாப்ரிக்காவில் நடைபெறும் டி20 லீகில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் எனும் அணியை சொந்தமாக கொண்டுள்ளது. அதிலும் பாகிஸ்தான் வீரர்கள் யாரும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. இந்நிலையில் தான்,  லீட்ஸ் நகரை மையமாக கொண்ட எர்ஸ்ட்வைல் நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் அணியை கடந்த ஆண்டு முழுமையாக கைப்பற்றியது. இதற்காக இங்கிலாந்து ரூபாய் மதிப்பில் சுமார் 100 மில்லியன் பவுண்டுகளை வழங்கியுள்ளது. இதையடுத்து நேற்று நடைபெற்ற ஏலத்தில்  சன்ரைசர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான காவ்யா மாறன் பங்கேற்றார். அப்போது, பாகிஸ்தான் வீரரை ஏலம் மூலம் ஒப்பந்தம் செய்தது தான் தற்போது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

நெட்டிசன்கள் ஆவேசம்:

இந்தியாவிற்கு எதிராக செயல்படும் ஒரு நாட்டைச் சேர்ந்த வீரரை ஒப்பந்தம் செய்தது தவறு என, சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக பலரும் ஆவேசமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி, “சர்வதேச போட்டிகளின் போது வெளிப்படையாகவே இந்தியாவை விமர்சிக்கும் வகையில் செயல்பட்ட ஒருவரை, சன்ரைசர்ஸ் அணி எப்படி ஒப்பந்தம் மேற்கொண்டது? பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் இத்தகைய அணி நிர்வாகங்களை ரசிகர்கள் ஒதுக்க வேண்டும். சன்ரைசர்ஸ் ரசிகர்களுக்கு இது ஒரு மோசமான நாள், ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத அணியாக சன்ரைசர்ஸ் செயல்படுகிறது. கொல்கத்தா அணி எதிர்பாராத விதமாக முஸ்தஃபிசுர் ரஹமானை ஒப்பந்தம் செய்ததை காட்டிலும், மிகப்பெரிய தவறை சன்ரைசர்ஸ் அணி தற்போது செய்துள்ளது.

டி20 உலகக் கோப்பையின் போது கூட இந்திய அணிக்கு பாகிஸ்தான் நெருக்கடி கொடுக்க முயன்றதை எல்லாம் நாடு இன்னும் மறக்கவில்லை. ஆனால், சன்ரைசர்ஸ் அணி அதையெல்லாம் மனதிலேயே கொள்ளவில்லை போல என சாடி வருகின்றனர்.

தி ஹண்ட்ரட்ஸ் ஏலம் 

தி ஹண்ட்ரட்ஸ் தொடருக்கான ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட பாகிஸ்தானியர்களில், அப்ரார் அஹ்மது இரண்டாவது வீரர் ஆவார்.  முன்னதாக மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான உஸ்மான் தாரிக்கை பர்மிங்ஹாம் ஃபினிக்ஸ் அணி,இந்திய மதிப்பில் சுமார் 1.72 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. அந்த அணி நிர்வாகத்திற்கும் ஐபிஎல்-க்கும் எந்த தொடர்பும் இல்லை. முன்னதாக ஏலத்தில் பட்டியலிடப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் சயிம் அயுப் ஆகிய இரண்டு பாகிஸ்தான் வீரர்களையும் யாருமே ஏலத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டிற்கான தி ஹண்ட்ரட்ஸ் போட்டி வரும் ஜுலை 21ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 16ம் தேதி வரை நடைபெற உள்ளது.

Related Post

“மத்திய – மாநில அரசு உறவு” முக்கிய முடிவை அறிவிக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

Posted by - February 25, 2025 0
இன்று நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் வரும் மார்ச் 14ஆம் தேதி நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடர், தொடர்பான ஆலோசனைகளை மேற்கொள்வதுடன் மத்திய – மாநில அரசு…

இன்று மாலை 6 மணிக்கு மேல் பரப்புரை செய்தால் சிறை தண்டனை

Posted by - April 17, 2024 0
வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர , வேட்பாளர்கள் வாகனங்களை ஏற்பாடு செய்து கொடுக்கக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் மக்களவைத் தேர்தலில், முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும்…
CBSC

10,12-ம் வகுப்பு மாணவா்களுக்கு இனி மதிப்பெண் சதவீதம் இல்லை- சி.பி.எஸ்.இ. அறிவிப்பு

Posted by - December 2, 2023 0
புதுடெல்லி: மாணவா்களிடையே தேவையற்ற போட்டி மனப்பான்மையைத் தவிா்க்கும் வகையில், தோ்வில் முதலிடம் பிடித்த மாணவா் என்பது போன்ற தனிப்பட்ட மாணவா்களின் பட்டியலை வெளியிடுவதை சி.பி.எஸ்.இ. ஏற்கெனவே நிறுத்திவிட்டது.…

ChatGPT எப்படி நமக்கு உதவும்?ChatGPT AI – உங்கள் கையிலும் இப்போது!

Posted by - December 20, 2025 0
இன்றைய டிஜிட்டல் உலகில், Artificial Intelligence (AI) ஒரு முக்கிய கருவியாக வளர்ந்து வருகிறது. அதில் ChatGPT ஒரு பிரபலமான AI மெஷின் ஆகும். தமிழர்கள் குறிப்பாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *