CBSC

10,12-ம் வகுப்பு மாணவா்களுக்கு இனி மதிப்பெண் சதவீதம் இல்லை- சி.பி.எஸ்.இ. அறிவிப்பு

302 0

புதுடெல்லி:

மாணவா்களிடையே தேவையற்ற போட்டி மனப்பான்மையைத் தவிா்க்கும் வகையில், தோ்வில் முதலிடம் பிடித்த மாணவா் என்பது போன்ற தனிப்பட்ட மாணவா்களின் பட்டியலை வெளியிடுவதை சி.பி.எஸ்.இ. ஏற்கெனவே நிறுத்திவிட்டது. அதன் தொடா்ச்சியாக, தற்போது ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதம், தரவரிசை போன்ற விவரங்கள் வெளியீட்டையும் நிறுத்த சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது.12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு! பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல்  வெளியீடு! | How to download 12th marksheet online Tamil Nadu | Link to  download the 12th marksheet - Tamil CareerIndia

இதுகுறித்து சி.பி.எஸ்.இ. தோ்வுக் கட்டுப்பாட்டாளா் சன்யம் பரத்வாஜ் கூறியதாவது:- 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி பொதுத் தோ்வு முடிவில் மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்படும். மாணவா் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண் விவரம், ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதம், தரவரிசை, அனைத்துப் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்கள் பட்டியல் போன்ற விவரங்கள் வெளியிடப்படாது.

எனவே, உயா் கல்வி நிறுவனங்கள் அல்லது வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் சி.பி.எஸ்.இ. மாணவா்களின் பாட மதிப்பெண்களின் அடிப்படையில், அவா்கள் பெற்ற மொத்த மதிப்பெண்ணையும், மதிப்பெண் சதவீதத்தையும் கணக்கிட்டுக்கொள்ள வேண்டும்’ என்றாா்.

சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத் தோ்வுகள் வரும் 2024, பிப்ரவரி 15-ந் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 

Related Post

ஏழ்மையிலும் விடா முயற்சி- வேதியியலில் டாக்டர் பட்டம் பெற்ற பெண் கூலி தொழிலாளி

Posted by - July 19, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், நாகுல கூடேம் கிராமத்தை சேர்ந்தவர் பாரதி. இவருக்கு 3 சகோதரிகள் உள்ளனர். வீட்டிற்கு மூத்த மகள் பாரதி. இவர் பிளஸ்…

திருமணம் செய்துக் கொள்ள மறுத்ததால் இரும்பு கம்பியால் தாக்கி டெல்லி மாணவி கொலை

Posted by - July 29, 2023 0
டெல்லியை சேர்ந்த இளம்பெண் நர்கிஸ் (25). இவர், இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்குள்ள கமலா நேரு கல்லூரியில் படிப்டை முடித்துள்ளார். பின்னர், மாளவியா நகரில் உள்ள ஸ்டெனோகிராஃபர்…

பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு! – மோடி கேரண்டி என்ற பெயரில் தேர்தல் அறிக்கை!

Posted by - April 14, 2024 0
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தம் 543 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம்…

டேட்டிங் ஆப் மூலம் உடலுறவுக்கு அழைப்பு: வீடியோ எடுத்து பணம் பறித்த கும்பல் கைது

Posted by - August 9, 2023 0
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் தன்பாலின ஈர்ப்பாளர் டேட்டிங் ஆப் மூலம், ஆசைவார்த்தைகளை பரிமாறி, உறவுக்கு அழைத்து வீடியோ எடுத்து மோசடி செய்த கும்பலை போலீசார் கைது…

உ.பி: ஒரே மருத்துவமனையில் 60 கர்ப்பிணிகளுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு – ஆய்வு செய்ய கமிட்டி அமைப்பு

Posted by - August 7, 2023 0
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லாலா ரஜபத் ராய் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வரும் பெண்களில் எச்.ஐ.வி. எனப்படும் எய்ட்ஸ் நோய் பாதிப்பு அதிகமாக இருப்பது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *