சச்சின் படத்தில் விஜய் செகண்ட் சாய்ஸ்…முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா ?

226 0

விஜய் நடித்த சச்சின் படத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் புனீத் ராஜ்குமார் நடிக்கவிருந்ததாக கலைப்புலி எஸ் தானு தெரிவித்துள்ளார்

மீண்டும் திரையரங்கில் சச்சின்

நடிகர் விஜய் அரசியல் பணிகளில் முழு வீச்சாக களமிறங்கும் நேரம் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதே போல தனது கடைசி படத்துடன் சினிமாவை விட்டு முழுவதுமாக விலகும் தருணமும் ரசிகர்களுக்கு மிக கஷ்டமான தருனமாக இருக்கும். விஜயின் கடைசி படத்திற்கு ஜன நாயகன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. எச்.வினோத் இயக்கி வருகிறார். கே.வி என் ப்ரோடக்‌ஷன் தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே , பாபி தியோல் , மமிதா பைஜூ , பிரகாஷ் ராஜ் , கெளதம் மேனன் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். ஜனநாயகன்

இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்படவில்லை. இதனிடையில் விஜய் நடித்த சச்சின் திரைப்படம் மீண்டும் திரையரங்கில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் கோடை விருந்தாக ரிலீசாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சற்று முன் அறிவித்துள்ளார். விஜய் நடிப்பில் முழுக்க முழுக்க கல்லூரி காதலை மையமாக வைத்து வெளியான படம் சச்சின். மிகவும் துள்ளலான நகைச்சுவை கலந்த காதல் படமாக இந்த படம் உருவாகியிருக்கும்

சச்சின் படத்தில் நடிக்க இருந்த கன்னட சூப்பர்ஸ்டார்

சச்சின் படம் கடந்த 2005ம் ஆண்டு ரிலீசான படம். இந்த படம் வெளியாகி 20 ஆண்டுகள் வெளியானதை கொண்டாடும் விதமாக தற்போது ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.  சச்சின் படத்தை பிரபல இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் இயக்கியிருப்பார். இந்த படத்திற்கு ஜீவா ஒளிப்பதிவு செய்திருப்பார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருப்பார். விடி விஜயன் ஒளிப்பதிவு செய்திருப்பார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருப்பார். அவருடன் வடிவேலுவும் கல்லூரி மாணவராக நடித்திருப்பார். படத்தில் விஜய் – ஜெனிலியா காட்சிகளுக்கு இணையாக, வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களின் மனம் கவர்ந்தவை.

 

சச்சின் படத்தில் முன்னதாக மறைந்த கன்னட சூப்பர்ஸ்டார் புனீத் ராஜ்குமார் நடிக்கவிருந்ததாகவும் அவரது கால்ஷீட் கிடைக்காததால் விஜய் இந்த படத்தில் நடித்து படத்தை வேற லெவலுக்கு ஹிட் கொடுத்ததாக படத்தின் தயாரிப்பாலர் கலைப்புலி எஸ் தானு தெரிவித்துள்ளார்.

Related Post

‘விக்ரம்’ படத்திலேயே ‘லியோ’ பற்றி ஹின்ட் கொடுத்த லோகேஷ்? – வீடியோவில் இதை கவனிச்சீங்களா?

Posted by - February 7, 2023 0
தற்போது லியோ படம் காஷ்மீரில் படமாவதால் இதுவும் எல்சியூவில் வரும் என ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். கடந்த 3 ஆம் தேதி லியோ படத்தின் ப்ரமோ வெளியாகி…

‘எவனுக்கு ஓட்டு போட்டாலும் நீ டாக்டர் ஆக முடியாது’.. செம்பி படத்தில் நீக்கப்பட்ட வசனம்! காரணம் என்ன

Posted by - January 3, 2023 0
செம்பி பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த 30ஆம் தேதி திரைக்கு வந்த படம் செம்பி. முதல் நாளில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தில்…

அனைத்து காட்சிகளும் ரத்து! தியேட்டர் எடுத்த அதிர்ச்சி முடிவு

Posted by - May 13, 2023 0
ஃபர்ஹானா ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் ஃபர்ஹானா படம் நேற்று ரிலீஸ் ஆனது. அந்த படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாக…

வேற லெவலுக்கு சென்ற விஜய்.. 200 கோடி சம்பளம் .

Posted by - May 25, 2023 0
லியோ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. இப்படத்தை 7 ஸ்க்ரீன் லலித் குமார் தயாரிக்கிறார். பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் திரிஷா, சஞ்சய்…

STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த இயக்குனர் தேசிங் பெரியசாமி.. என்ன கூறியுள்ளார் பாருங்க

Posted by - August 11, 2023 0
STR 48 தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் STR 48. உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *