தங்கம் விலை அதிர்ச்சிகர உச்சம்: பவுன் ரூ.97,000-ஐ கடந்தது!

253 0

சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை இன்று (அக்.17) வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதன்படி, தங்கம் விலை ஒரு பவுன் ரூ.97,000-ஐ தாண்டி விற்பனையாகிறது.

கடந்த செப்.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்த ஒரு பவுன் தங்கம் விலை அக்.7-ல் ரூ.90,400 ஆக உயர்ந்தது. இன்று அக்.17-ம் தேதி ஒரு பவுன் ரூ.97,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுவது வழக்கம். அதன்படி ட்ரம்ப் வரி விதிப்பு, எச்1பி விசா கட்டணம் உயர்வு, போர்ச் சூழல்கள் எனப் பல்வேறு அரசியல், பொருளாதார சூழல்களால் சர்வதேச அளவில் பெரிய முதலீட்டாளர்கள் மட்டுமின்றி சிறிய முதலீட்டாளர்களும் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளனர். இதனால், இவற்றின் தேவை அதிகரித்து, விலை உயர்கிறது. விரைவில் பவுன் தங்கம் ரூ.1 லட்சத்தை தொடும் என்று கணிக்கப்படுகிறது.அதேபோல் பிரிக்ஸ் நாடுகளும், டாலருக்கு மாற்றான சக்திவாய்ந்த கரன்சியை உருவாக்கும் முனைப்பில் உள்ளதால், அந்த நாடுகளும் தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரித்து வருகிறது. இதுவும் தங்கம் விலை உயர்வுக்குக் காரணம். இந்தியாவில் பண்டிகை காலம் என்பதாலும் தங்கம், வெள்ளி விலை ஏற்றம் காண்கிறது. ஆனால், பண்டிகை காலம் என்பது தற்காலிக காரணம் தான். முக்கியக் காரணம் சர்வதேச பொருளாதார, அரசியல் சூழல்களே.அதன்படி இன்று (அக்.17) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,200-க்கும், பவுனுக்கு ரூ.2400 உயர்ந்து ஒரு பவுன் ரூ.97,600-க்கும் விற்பனை ஆகிறது. இது நகை வாங்குவோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளி விலை ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.203-க்கு விற்பனையாகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,03,000-க்கு விற்பனையாகிறது.

Related Post

பிரசவத்திற்கு சென்ற பெண்ணின் வயிற்றில் துணி வைத்து தைத்த டாக்டர்கள்- ஒரு வருடத்திற்கு பிறகு அகற்றம்

Posted by - April 19, 2023 0
திருப்பதி: மாநிலம் ஜகித்யாலா பகுதியை சேர்ந்தவர் நவ்யா ஸ்ரீ கடந்த ஆண்டு பிரசவத்திற்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நவ்யா ஸ்ரீக்கு சுகப்பிரசவம் நடக்காததால் டாக்டர்கள்…

முதலீட்டாளர்களே மாதத்தின் கடைசி நாளில் கவனிக்க வேண்டிய பங்குகள்..

Posted by - July 31, 2024 0
இந்திய பங்குச்சந்தைகளின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய குறியீடு வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்து வர்த்தகமாகின. இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் மாருதி, எம்&எம்,…

அதள பாதாளத்தில் பங்குச் சந்தை.. மாஸ் காட்டிய ஐடி பங்குகள்!

Posted by - August 3, 2024 0
மிகவும் மோசமான உலகளாவிய குறிப்புகளுக்கு மத்தியில் இன்று பங்குச் சந்தை பெரிய சரிவை செய்துள்ளது. நாளின் முடிவில் சென்செக்ஸ்-நிஃப்டி ஒவ்வொன்றும் 1%க்கும் அதிகமாக சரிந்தன. ஐடி மற்றும்…

முழு சுதந்திரம் கொடுத்த மோடி.. இறங்கி அடிக்க தயாராகும் இந்திய ராணுவம்.. உத்தரவு என்ன.?

Posted by - April 30, 2025 0
பிரதமர் தலைமையில் நேற்று நடந்த பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோடி போட்ட உத்தரவு என்ன தெரியுமா.? கடந்த 22-ம் தேதி…

TCS ஆட்குறைப்ப நிறுத்துங்க“; மத்திய தொழிலாளர் துறை அமைச்சருக்கு பறந்த கடிதம் – யார் எழுதியது.?

Posted by - July 29, 2025 0
டிசிஎஸ் நிறுவனம் 12 ஆயிரம் ஊழியர்களை படிப்படியாக வேலையை விட்டு நிறுத்தப்போவதாக அறிவித்த நிலையில், இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு, மத்திய தொழிலாளர் துறை அமைச்சருக்கு கடிதம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *