தடுமாறும் பாகிஸ்தான் அரசு…சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமரிடம் உதவி கேட்ட தற்போதைய பிரதமர்!

176 0

 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரிடம், பிரதமர் செபாஸ் செரீஃப் உதவி கேட்டுள்ளார்.

இந்தியாவுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் மற்றும் பிரதமர் செபாஸ் ஷெரீப் ஆகியோர் தற்போது சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானிடம் உதவி கேட்டுள்ளனர்.

இம்ரான் கானிடம் உதவி கேட்கும் செபாஸ் செரீஃப்:

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் மற்றும் பிரதமர் செபாஸ் ஷெரீஃப் ஆகியோர் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உதவியை நாடியுள்ளனர். சிறையில் உள்ள இம்ரான் கானுடன் பேச்சுவார்த்தை நடத்த நான்கு முன்னாள் ராணுவ அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறையில் இருக்கும் இம்ரான் கான்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அல்-காதிர் அறக்கட்டளை தொடர்பான நில ஊழல் வழக்கில்  14 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இம்ரான் கான் கடந்த  2023 ஆகஸ்ட் முதல் முதல் சிறை தண்டனை அனுபவத்து வருகிறார். ஆனால் இவர் மீது, பொய் குற்றச்சாட்டுகளை கூறி சிறையில் அடைக்கப்பட்டதாக, இம்ரான் கான் கட்சியினர் (  தெஹ்ரீக்-இ-இன்சாஃப் ), தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தியாவுடனான உறவு குறித்தும் கோசங்களை எழுப்பி வருகின்றனர்.

வெடிக்கும் போராட்டம்:

இந்நிலையில், பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் எதிர்க்கட்சியினர் போராட்டமும் பாகிஸ்தான் அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சிந்து மாகாணத்தில் போராட்டங்களை , நாட்டின் ராணுவத் தலைவர் அசிம் முனீருக்கு ஆதரவளிக்கவும் இம்ரான் கான் மற்றும் அவரது கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இம்ரான் கானை சமாதனபடுத்தும் செபாஸ் செரீஃப்:

இதற்கு முன்பு, புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, அப்போது பிரதமராக இருந்த இம்ரான் கான், பாகிஸ்தான் உளவு பிரிவு ( ஐஎஸ்ஐ ) தலைவர் பதவியில் இருந்த அசிம் முனீரை நீக்கினார்.

ஐஎஸ்ஐ வரலாற்றில் முதல்முறையாக, பதவியில் இருந்த ஒரு தலைவர் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பே நீக்கப்பட்டது இதாக பார்க்கப்பட்டது. இது முனீர் மற்றும் கானுக்கு இடையிலான உறவை மோசமாக்கியது. உண்மையில், இம்ரான் கானின் சிறையில் இருப்பதற்கு அசிம் முனீர் ஒரு பெரிய பங்கைக் கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுடன் அதிகரித்து வரும் பதட்டங்கள் ஷெரீப் மற்றும் முனீர் இருவரையும் இம்ரான் கான் முன் நிறுத்தியுள்ளன. கானின் பிடிஐ கட்சி நாட்டில் ஒரு வலுவான எதிர்க்கட்சியாக மாறி வருகிறது, மேலும் அதன் தொடர்ச்சியான போராட்டங்கள் மூலம் பொதுமக்களின் கருத்தை ஆதரவையும் பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால், பெரும் போராட்டங்கள் அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருவதால்,  ஷெரீப்பும் முனீரும்,  இம்ரானை கானை சமாதானப்படுத்த அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Post

சீனாவில் வேகமெடுக்கும் வைரஸ் பரவல்… மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

Posted by - November 28, 2023 0
கொரோனா தொற்றின் போது கடைபிடிக்கப்பட்ட கண்காணிப்புக்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களை செயல்படுத்த வேண்டும். சீனாவில் குழந்தைகளிடையே பரவி வரும் மர்ம காய்ச்சல் எதிரொலியாக , மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை…

ஒரே அசிங்கமா போச்சு குமாரு.. “பச்சையா” ஆமாம்னு பதில் சொன்ன Gemini AI.. மோடியிடம் மன்னிப்பு கேட்ட Google!

Posted by - March 7, 2024 0
இந்திய பிரதமர் மோடி (PM Modi) பற்றிய கேள்விக்கு “ஆமாம்” அவர் அப்படிப்பட்ட ஆளுதான் என்று பதில் கூறியதன் விளைவாக.. கூகுள் (Google) நிறுவனத்தின் ஜெனரேட்டிவ் ஏஐ…

2 கருப்பைகள் கொண்ட பெண்: இரண்டிலும் கர்ப்பம் தரித்த அதிசயம்

Posted by - November 18, 2023 0
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தை சேர்ந்தவர் கெல்சி ஹேட்சர். 32 வயதான இவர் 2 கருப்பைகள் கொண்ட பெண்ணாக இருக்கிறார். பிறப்பிலேயே அரிய கருப்பை கொண்ட இவருக்கு காலேப்…

Hero Splendor Electric: இந்தியாவின் நம்பர் ஒன் பைக்.. ஸ்ப்ளெண்டரை மின்சார எடிஷனில் களமிறக்கும் ஹீரோ – 180KM ரேஞ்ச்

Posted by - September 16, 2025 0
Hero Splendor Electric: இந்திய பைக் சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் ஸ்ப்ளெண்டர் மாடலை, மின்சார எடிஷனில் அறிமுகப்படுத்த ஹீரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. Hero Splendor…

இடைக்கால போர் நிறுத்தம் தொடர்கிறது: இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

Posted by - November 30, 2023 0
ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை போர் ஓயாது என காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. கத்தார், எகிப்பு, அமெரிக்கா ஆகிய நாடுகள் பிணைக்கைதிகளை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *