திருமண வாழ்க்கையில் பிரச்சினையா… அப்போ இந்த வாஸ்து டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க!

202 0

பல சந்தர்ப்பங்களில் திருமண வாழ்க்கையின் இனிமை சில சமயங்களில் கசந்துவிடுகிறது. இருவருக்கும் இடையே ஏற்படும் பிரச்சனை மட்டுமே இதற்கான காரணமாக இருக்காது. வீட்டின் வாஸ்துவும் ஒரு காரணமாக இருக்கலாம் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

திருமணம் என்பது மக்களால் ஒரு முக்கியமான சடங்காக கருதப்படுகிறது. திருமணத்தின் மூலம் குடும்பம் என்ற ஒரு அமைப்பு உருவாகிறது. திருமண உறவுகளில் சில சமயங்களில் விரிசல் ஏற்படுகிறது.

திருமணமான சில மாதங்களிலோ வருடங்களிலோ கணவன் – மனைவி பிரிந்து சென்று விடுகின்றனர். திருமண உறவில் ஒருவருக்கொருவர் நேரம் கொடுப்பதற்கான அடிப்படைத் தேவை உங்கள் வாழ்க்கையில் படிப்படியாக குறைவதால் இந்த பிரச்சினை பெரும்பாலும் எழுகிறது. பல சந்தர்ப்பங்களில் திருமண வாழ்க்கையின் இனிமை சில சமயங்களில் கசந்துவிடுகிறது. இருவருக்கும் இடையே ஏற்படும் பிரச்சனை மட்டுமே இதற்கான காரணமாக இருக்காது. வீட்டின் வாஸ்துவும் ஒரு காரணமாக இருக்கலாம் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

அவ்வாறு திருமண உறவில் மகிழ்ச்சியுடன் வாழ பின்பற்ற வேண்டிய சில வாஸ்து டிப்ஸ்களை இப்போது தெரிந்துகொள்ளலாம்.

1. வீட்டின் படுக்கையறை மற்றும் தலைவைத்து உறங்கும் திசையை சரிபார்க்க வேண்டும். ஏனெனில், வாஸ்து சாஸ்திரத்தின் படி, வாஸ்து தோஷம் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைக் கூட சீர்குலைத்து விடும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

2. வாஸ்து சாஸ்திரத்தின் படி, வட மேற்கு-வடக்கு திசை மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை கொடுக்கும் எனக் கூறப்படுகிறது. எனவே புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு இந்த வடமேற்கு-வடக்கு மூலை வீட்டை கொடுப்பது நல்லது. இது வாழ்க்கையை இனிமையுடனும் திருப்தியுடனும் வாழ வைக்குமாம்.

3. வாஸ்துசாஸ்திரத்தின் படி, வடக்கு நோக்கி தலை வைத்து உறங்குவது தாம்பத்ய வாழ்க்கையை பாதிக்கிறது. அது மட்டுமின்றி, பல உடல்நல பிரச்சனைகளையும் உண்டாக்குமாம். தம்பதியினர் வடக்கு திசையில் தலை வைத்து ஒன்றாக தூங்கினால் எழுந்தவுடன் மிகவும் சோர்வாக உணவார்கள். இது முக்கியமாக காந்த அலைகளால் ஏற்படுகிறது. இது திருமண வாழ்க்கையையும் உடலையும் பாதிக்கும் என வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

4. வாஸ்துசாஸ்திரத்தின் படி, தெற்கு நோக்கி தலை வைத்து தூங்குவது ஒட்டுமொத்த உறவை ஆழப்படுத்துகிறது. இதனுடன் திருமண வாழ்வில் உற்சாகமும் திருப்தியும் கூடுகிறது. அதிலும் கணவன் தெற்கு நோக்கி தூங்கினால் திருமண வாழ்வில் பிரச்சனைகள் வராது என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.5. வாஸ்துசாஸ்திரத்தின்படி, திருமண வாழ்க்கையின் மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிக்க, கணவனும் மனைவியும் வீட்டின் தென்மேற்கு பகுதியில் தூங்க வேண்டும். மேலும், உங்கள் வீட்டின் வடகிழக்கு பகுதி வட்டமாக இருந்தால் அது தோஷத்தை ஏற்படுத்தும். அதனால் குழந்தை பெறுவதிலும் சிக்கல்கள் ஏற்படும் என வாஸ்து சாஸ்திரம் தெரிவிக்கிறது.

Related Post

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு… எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ

Posted by - August 22, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஓடிக் கொண்டிருக்கிறது. குணசேகரன், ஈஸ்வரியை தாக்கிய விவகாரம் தான் இப்போது கதையின் ஹைலைட்டான கதையாக…

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் டாப் 5 பைனலிஸ்ட் சம்பளம், டைட்டில் வின்னருக்கு தான் கம்மியா? லிஸ்ட் இதோ

Posted by - January 19, 2025 0
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் டாப் 5 இடங்களை பிடித்த போட்டியாளர்களின் சம்பளம் விவரம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் இணையத்தில் பிக் பாஸ்…

சீக்ரெட்டாக இன்னொரு திருமணம் செய்துகொண்டேன்- வனிதா விஜயகுமார்

Posted by - July 18, 2023 0
வனிதா விஜயகுமார் பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நுழைந்து இப்போது அட்டகாசமாக நடித்து வருபவர் நடிகை வனிதா விஜயகுமார். படங்கள் நடித்துவந்த இவர் இடையில் திருமணம்,…

கோயமுத்தூர் ஸ்பெஷல் பச்சைப்பயிறு குழம்பு

Posted by - April 21, 2023 0
பச்சை பயற்றில் இரும்புச்சத்து அதிகளவு உள்ளது. கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க பச்சை பயறு உதவுகிறது. தேவையான பொருட்கள் முளைகட்டிய பச்சை பயறு – 1/2 கப் தக்காளி…

லியோ படத்தில் என்னுடைய ரோல் இப்படி தான் இருக்க போகிறது.. உண்மையை போட்டு உடைத்த அர்ஜுன்

Posted by - February 10, 2023 0
லியோ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இதற்கு முன்பு இவர்களின் கூட்டணியில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. லியோ…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *