நித்தியானந்தவின் புதிய திட்டம்

343 0

புதுடெல்லி:

சாமியார் நித்யானந்தா சமூக வலைதளங்கள் மூலம் வீடியோக்களை வெளியிட்டு பக்தர்களிடம் சொற்பொழிவாற்றி வருகிறார். இந்துக்களுக்காக கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி உள்ளதாக அறிவித்திருந்த அவர் அங்கிருந்தபடி பல்வேறு நாடுகளிலும் உள்ள அவரது சிஷ்யர்கள், பக்தர்களிடம் பேசி வருகிறார்.

இதுவரை கைலாசா நாடு எங்கிருக்கிறது என்ற பல யூகத்தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இது தொடர்பாக புதிய தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதாவது, பசிபிக் பெருங்கடல் பகுதியில் கோஸ்டாரிகா தீவுகளில் ஒன்றில் தான் கைலாசா அமைந்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.வெளிநாடுகளில் புதிய ஆசிரமங்கள் தொடங்க நித்யானந்தா திட்டம்

சமீபத்தில் கைலாசாவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில், கைலாசா நாட்டை அமெரிக்கா அங்கீகரித்தாக கூறப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள நெவார்க் நகரம், கைலாசா இடையே ஒப்பந்தம் கையெழுத்திடுவது போன்ற புகைப்படங்களை அவரது சீடர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி இருந்தனர்.

ஏற்கனவே இதுபோன்று ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள சில நகரங்கள் மற்றும் சில வெளிநாடுகளில் உள்ள நகரங்களுடன் வர்த்தக ரீதியான ஒப்பந்தங்களை செய்திருப்பதாக கைலாசாவின் அதிகாரப்பூர்வ இணைய தளங்களில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அடுத்தடுத்து பல நாடுகளிலும் உள்ள பெரிய நகரங்களுடன் உறவை மேம்படுத்தி வரும் நித்யானந்தா அந்த நாடுகளில் இருந்து கைலாசாவுக்கு முதலீடுகளை ஈர்த்து வருமானத்தை பெருக்குவதற்காக திட்டங்களையும் தீட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் சில கோவில்களை நித்யானந்தா விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பல நாடுகளில் தனது ஆசிரமங்களை திறக்கவும் அவர் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

முதலீடுகள் மூலம் கைலாசாவில் அனைவருக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்கும் வகையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக திட்டங்களையும் அவர் வகுத்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, வருகிற 18-ந் தேதி மகா சிவராத்திரி விழாவை கைலாசாவில் சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

கடந்த 5-ந்தேதி தைப்பூசம் கைலாசாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. இந்நிலையில் நித்யானந்தா இருக்கும் மகா கைலாசாவில் மட்டுமின்றி பெங்களூரு, திருவண்ணாமாலை உள்பட பல இடங்களில் உள்ள அவரது ஆசிரமங்களிலும் மகா சிவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

Related Post

7 கட்டமாக மக்களவைத் தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Posted by - March 16, 2024 0
7 கட்டமாக மக்களவைத் தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.…

அதி தீவிர புயலாக வலுப்பெற்ற பிபோர்ஜோய் புயல்.. மேற்கு கடலோர மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Posted by - June 8, 2023 0
தென்கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘பிபோர்ஜோய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல், மேற்கு நோக்கி நகர்ந்து…

paytm, phonepe, gpay அதிகம் பயன்படுத்துவரா? ஆர்பிஐ எடுக்கும் அதிர்ச்சி முடிவு

Posted by - November 28, 2022 0
3rd Party  UPI ஆப்ஸ் வழங்குநர்களுக்கான வால்யூம் வரம்பை (volume cap) கட்டுப்படுத்த, நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) தனது முன்மொழியப்பட்ட காலக்கெடுவை விரைவில்…

சென்னை கோரமண்டல் ரெயில் விபத்து மனித தவறே காரணம்- விசாரணை அறிக்கையில் தகவல்

Posted by - July 4, 2023 0
மேற்குவங்காளத்தில் இருந்து சென்னைக்கு வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த மாதம் 2-ந் தேதி ஒடிசாவில் விபத்தை சந்தித்தது. சிக்னல் மாற்றத்தால் சரக்கு ரெயில் மீது மோதி…

பூரண மதுவிலக்கு – முதலமைச்சர் அதிரடி…

Posted by - March 13, 2025 0
சட்டசபையில் 2025-26-ம் நிதியாண்டிற்கு ரூ.13 ஆயிரத்து 600 கோடிக்கான பட்ஜெட்டை நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பெண்கள், மாணவர்களுக்காக பல்வேறு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *