பிளஸ் 2 மாணவர்களே.. முன்கூட்டியே வெளியாகும் தேர்வு முடிவுகள்- எப்போ தெரியுமா?

305 0

நாளை மறுநாள் ஏப்ரல் 8ஆம் தேதி காலை 9 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.

தமிழகப் பள்ளிக் கல்வி வாரியத்தின்கீழ் நடைபெற்ற 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே ஒருநாள் முன்னதாக வெளியாக உள்ளன.

இதன்படி, மே 8ஆம் தேதி காலை 9 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

2024- 25ஆம் கல்வி ஆண்டில் மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கி, மார்ச் 25ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 8.21 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதற்காகத் தமிழகம் முழுவதும் 3,316 தேர்வு மையங்கள் அமைக்​கப்​பட்டன. பொதுத் தேர்​வுக்கான அறை கண்காணிப்​பாளர் பணியில் 43,446 ஆசிரியர்கள் நியமிக்​கப்​பட்​டனர்.

முன்கூட்டியே வெளியாகும் தேர்வு முடிவுகள்

தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெற்றன. இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ஒருநாள் முன்கூட்டியே 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.

குறிப்பாக நாளை மறுநாள் ஏப்ரல் 8ஆம் தேதி காலை 9 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

தேர்வு முடிவுகளைப் பார்ப்பது எப்படி?

மாணவர்கள் தங்களின் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை tnresults.nic.indge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணைய தளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

results.digilocker.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் காலை 9.00 மணிக்கு தேர்வர்கள்‌ தங்களது பதிவெண்‌ மற்றும்‌ பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்‌.

பள்ளிகளில் தேர்வு முடிவுகளைப் பெறலாம்

பள்ளி மாணவர்கள்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளிகளிலும்‌ தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்‌.

மொபைல் வழியாகவும் பார்க்கலாம்

மேலும்‌ பள்ளி மாணவர்களுக்கு அவர்கள்‌ பயின்ற பள்ளிகளில்‌ சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில்‌ குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும்‌ தனித் தேர்வர்களுக்கு ஆன்‌லைனில்‌  விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும்‌ குறுஞ்செய்தி வழியாகவும்‌ தேர்வு முடிவுகள்‌ அனுப்பப்படும்‌.

Related Post

ஆரஞ்சு பழம் சீசன் வர போகுது! நல்லதுதான் செய்யும்! ஆனா மறந்தும் கூட “இந்த” உணவுகளுடன் சாப்பிடாதீர்!

Posted by - December 12, 2023 0
சென்னை: ஆரஞ்சு பழத்துடன் எப்போதும் இந்த பழத்தை சேர்த்து சாப்பிடவே கூடாது தெரியுமா? மேலும் ஆரஞ்ச் பழத்தின் நன்மைகளையும் தெரிந்து கொள்ளுங்கள். ரத்த குழாய்களில் சேரும் கெட்ட…

பொன்முடி வழக்கில் திருப்பம் – தண்டனையை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.. விவரம்!!

Posted by - March 11, 2024 0
தண்டனை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததால் பொன்முடி மீண்டும் திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏவாக வாய்ப்புள்ளது. மீண்டும் எம்எல்ஏ ஆவதால் அமைச்சர் ஆவதற்கும் பொன்முடிக்கு தடையில்லை..   சொத்துக்குவிப்பு வழக்கில்…
Generated Image November 29 2025 11 49AM

திக் திக் டிட்வா…சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் – வெதர்மேன் அலர்ட்

Posted by - November 29, 2025 0
டிட்வா புயல் காரணமாக தென் மாவட்டங்களில் மழையானது வெளுத்து வாங்கிய நிலையில், இன்று டெல்டா மாவட்டங்களிலும் நாளை முதல் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் கன மழைக்கான…

“நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது” புதிர் போடும் முதலமைச்சர் ஸ்டாலின்!

Posted by - January 22, 2025 0
‘இரும்பின் தொன்மை’ எனும் நூல் வெளியிட்டு விழாவில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். என்னவாக இருக்கும் என மக்கள் மத்தியில் பெரும்…

பெண் தோழியுடன் தொடர்ந்த பழக்கம்… வழக்கறிஞரை கும்பலுடன் வந்து தாக்கிய கணவர் – நடந்தது என்ன?!

Posted by - August 7, 2023 0
சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் செந்தில் குமார். இவர் சட்டப் படிப்பு படித்தபோது உடன் பயின்ற மதுரையை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இவருக்கும் நீண்ட நாள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *