மாவட்ட ஆட்சியரை அவமதித்த உதயநிதி! : அண்ணாமலை கண்டனம்

247 0

இன்பநிதி நண்பர்களுக்காக கலெக்டரை நிற்க வைத்த அமைச்சர் மூர்த்தி!

திமுகவின் மன்னராட்சி மன நிலைக்கு, தமிழக மக்கள் வரும் 2026 ஆம் ஆண்டு முடிவு கட்டுவார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண, தனது மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்களுடன் சென்றிருக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜல்லிக்கட்டு விழா மேடையில் தனது மகனின் நண்பர்களை அமர வைப்பதற்காக, நாற்காலியில் அமர்ந்திருந்த மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அவர்களை, மேடையில் இருந்து அகற்றியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.new project 13 3

துணை முதலமைச்சர் மகனின் நண்பர்களுக்காக, பெண் மாவட்ட ஆட்சியரை நாற்காலியை விட்டு எழுந்திருக்க செய்வது, தமிழகத்தின் இருண்ட காலமான திமுகவின் 2006 – 2011 ஆட்சிக் காலத்தை விட மோசமான அதிகார துஷ்பிரயோகம்.

முதலமைச்சர் குடும்பத்துக்குச் சேவகம் செய்வதற்காகவே இருக்கும் அமைச்சர்கள் மேடையில் இருக்கையில், பெண் அரசு அதிகாரியை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள்? துணை முதலமைச்சர் உதயநிதிக்கு, 2011 தேர்தல் முடிவுகளும், அதற்குப் பின் வந்த பத்து ஆண்டுகளும் நினைவிருக்கட்டும். இந்த மன்னராட்சி மன நிலைக்கு, தமிழக மக்கள் வரும் 2026 ஆம் ஆண்டு முடிவு கட்டுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

Related Post

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

Posted by - February 14, 2024 0
FEATURED அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை…

மிரட்டும் டெங்கு காய்ச்சலால் ஒரே நாளில் 59 பேர் அனுமதி- தடுப்பு நடவடிக்கை தீவிரம்

Posted by - November 27, 2023 0
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் காய்ச்சல் காரணமாக நேற்று ஒரே நாளில் 59 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி…

உங்க வயித்துல ‘இந்த’ அறிகுறிகள் இருக்கா? அப்ப அது ஆபத்தான வயிற்று புற்றுநோயா இருக்கலாமாம்..!

Posted by - November 10, 2023 0
வயிற்று உப்புசம் மற்றும் வீக்கம் பெரும்பாலும் எல்லாருக்கும் ஏற்படும் ஓர் பொதுவான பிரச்சனை. ஆனால், சில நேரங்களில் இது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். வயிற்றுப் புற்றுநோய், இரைப்பை…
Gemini Generated Image e239sme239sme239

இன்று தமிழ் புத்தாண்டு! உற்சாகமாக கொண்டாடும் தமிழர்கள்!

Posted by - April 14, 2026 0
தமிழ் புத்தாண்டு இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது தமிழ் புத்தாண்டு. ஒவ்வொரு…

விஜயகாந்த் எப்போது மனம் உடைந்து போனார்? அவரது மகனே சொன்ன தகவல்

Posted by - December 29, 2023 0
மறைந்த கேப்டன் விஜயகாந்த் அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் எப்போது மனம் உடைந்துபோனார் என்பதை அவருடைய மகன் சண்முக பாண்டியன் ஒருமுறை தெரிவித்திருக்கிறார்.  மறைந்த கேப்டன் விஜயகாந்த்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *