10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது… 91.55% பேர் தேர்ச்சி- இம்முறையும் மாணவிகளே அதிக தேர்ச்சி!

180 0

தமிழ்நாட்டில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 12,616 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 10 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதற்காக, மாநிலம் முழுவதும் 4107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்ட சூழலில், ஏப்ரல் 12- ஆம் தேதி முதல் 22- ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றன. இதனையடுத்து திட்டமிட்டபடி இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.அந்த வகையில், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 91.55% ஆக உள்ளது. வழக்கம் போலவே மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 94.53% ஆகவும் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 88.58% உள்ளது. மாணவர்களை விட 5.95% மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவ, மாணவிகள் ஏற்கெனவே தேர்வுத்துறைக்கு தெரிவித்திருந்த செல்போன் எண்களுக்கு தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்பட்டன. இதுதவிர, அரசுத் தேர்வு இயக்ககத்தின் இணைய தளங்களான www.results.nic.inwww.dge.tn.gov.in ஆகியவற்றின் மூலமும் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

Related Post

திமுக ஆட்சியின் அனைத்து பகல் கொள்ளைகளும் விரைவில் முடிவுக்கு வரும் – அண்ணாமலை

Posted by - April 11, 2025 0
திமுக ஆட்சியில் நடைபெறும் அனைத்து பகல் கொள்ளைகளும் விரைவில் முடிவுக்கு வரும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில் காணொலி…

தத்தளிக்கும் (தென்)தமிழகம்…ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டியது..

Posted by - December 18, 2023 0
வரலாற்றில் இல்லாத வகையில் தென் மாவட்டங்களில் மழை பெய்துள்ளதாக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். சென்னை கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்த தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ்…

பிற மாநாடுகளுக்கு அனுமதி அளிக்கும் போது முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது ஏன்? – உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

Posted by - June 7, 2025 0
மதுரையில் பிற மாநாடுகளுக்கு அனுமதி அளித்தபோது முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மட்டும் அனுமதி வழங்க மறுப்பது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இந்து…

‘டீ’ யில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த காதலி ; விஷமாக மாறிய காதல்… கம்பி என்ன வைத்த போலீஸ்

Posted by - March 4, 2025 0
காதலை கைவிட நினைத்த காதலனுக்கு டீயில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்ற காதலி. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் சட்டக்கல்லூரி…

அமைச்சராக பதவியேற்றார் டி.ஆர்.பி ராஜா…

Posted by - May 11, 2023 0
மன்னார்குடி எம்.எல்.ஏவும் தி.மு.க ஐ.டி விங் செயலாளருமான டி.ஆர்.பி ராஜா அமைச்சராக பதவியேற்றுள்ளார். மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றப் பிறகு அவரது அமைச்சரவை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *