500 பள்ளிகள் தத்துகொடுப்பது: தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் விளக்கம்

140 0

அரசு பள்ளிகளின் வளர்ச்சியில் CSR மூலம் தனியார் பள்ளிகளின் பங்களிப்பு இருக்கும் என்று தான் சொன்னோம்.

தமிழ்நாட்டில் 500 அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு தத்துக்கொடுப்பதாக தகவல் வெளியான நிலையில், இதனை தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் மறுத்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டிலுள்ள 13,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், மழலையர் துவக்கப் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள், சிபிஎஸ்இ உள்ளிட்ட இதரவாரிய பள்ளிகள் என ஒட்டு மொத்த பள்ளிகளுக்கும் பல்வேறு சங்கங்கள் இயங்கி வந்தன.

அந்த சங்கங்களை எல்லாம் ஒருங்கிணைந்து பெரும்பான்மையான சங்கங்கள் ஒன்றுகூடி தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் என்ற பெயரில் ஒரு புதிய ஒரு சங்கத்தை உருவாக்கி அந்த சங்கத்தின் துவக்க விழாவிற்கு பள்ளிக் கல்வித்துறை அரசு செயலாளர், தனியார் பள்ளி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை வாழ்த்துரை வழங்கவும் விழாவினை துவக்கி வைக்கவும் அழைத்தோம்.அவர்கள் அனைவரும் வருகை தந்து விழாவினை சிறப்பித்தார்கள். அரசு பள்ளிகளில் பயின்ற நாங்கள் தான் தனியார் பள்ளிகளை நடத்தி வருகிறோம். நாம் அரசு பள்ளிகளுக்கு எந்த விதத்திலாவது பயன்பாடாக இருக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தின் அடிப்படையில் அந்த நிகழ்வின் போது பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றிய அதே தருணத்தில், வரும் கல்வியாண்டில் 500 அரசு பள்ளிகளைத் தேர்வு செய்து அருகாமையில் இருக்கிற தனியார் பள்ளிகள் அந்த பள்ளிகளில் பயில்கிற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிடும் வகையிலே நூலகங்கள், பள்ளிக்கு வர்ணம் பூசுதல், பள்ளி விளையாட்டு மைதானங்களை சுத்தப்படுத்துதல், தூய்மைப் படுத்துதல் விளையாட்டு உபகரணப் பொருட்களை வாங்கிக் கொடுத்தல், மாணவர்களுக்குத் தேவையான இதர General knowledge என்று சொல்லக் கூடிய பொது அறிவு வளர்ச்சிக்கான புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தல், அதற்கான பொருட்கள் வாங்கிக் கொடுத்தல், கணினி உள்ளிட்ட கண்டுபிடிப்புகள் சம்பந்தப்பட்ட நவீன பொருட்களை வாங்கிக் கொடுத்தல் என்று பல்வேறு வகையிலே உதவிட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் மாணவர்களின் வளர்ச்சிக்காக அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த CSR மூலம் தனியார் பள்ளிகளின் பங்களிப்பு இருக்கும் என்று தான் சொல்லப்பட்டதே தவிர எந்த இடத்திலும் அரசு பள்ளிகளை தத்தெடுப்போம் என்று நாங்களும் சொல்லவில்லை தத்தெடுப்போம் என்று அமைச்சர் உள்ளிட்ட அதிகாரி பெருமக்கள் யாரும் சொல்லவில்லை.

Related Post

தமிழகத்தில் இன்று மிக கனமழை எச்சரிக்கை: 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

Posted by - November 22, 2023 0
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்து உள்ள நிலையில் இயல்பான அளவைவிட குறைவாகவே பெய்துள்ளது. வழக்கமாக நவம்பர் மாதத்தில் சராசரியாக பெய்ய வேண்டிய…

அமுக்கிரா கிழங்கு.. ஊளைச்சதை முதல் நரம்பு தளர்ச்சிவரை நீக்கும் அமுக்கிரான் கிழங்கு பொடி.. செம மூலிகை

Posted by - January 9, 2024 0
சென்னை: நரம்புகளை பலப்படுத்துவது முதல் முதுமையில் ஏற்படும் பிரச்சனைகளை விரட்டுவதுவரை பயன்படக்கூடியது அமுக்கிரா கிழங்கு.. அதனால்தான், சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த கிழங்குக்கெனவே தனி இடம் உள்ளது.…

திரையரங்கில் அதிக நாட்கள் ஓடிய விஜயகாந்தின் படங்கள்.. அவர் மறைந்தாலும் அவர் சாதனைகள் மறையாது

Posted by - December 29, 2023 0
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த், கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்பட்டிருந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். திரைப்பட வாழ்க்கை 1978…

தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள 10 முக்கிய அறிவிப்புகள்?

Posted by - February 19, 2024 0
2024–25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். 2024–25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதில் இடம்பெற்றுள்ள …

ஓசி பஸ் சர்ச்சை.. வாய்விட்டு மாட்டிய எம்.எல்.ஏ.. திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நகேந்திரன்..

Posted by - June 12, 2025 0
பொன்முடி ஓசி பஸ் என சொன்னது சர்ச்சையான நிலையில், தற்போது மீண்டும் திமுக MLA-ஏ இப்படி சொல்லியிருப்பது எதிர்க்கட்சியினரின் விமர்சன வலையில் சிக்கியுள்ளது. பெண்கள் ஓசி பஸ்ஸில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *