ஒருவழியாக..! முதல்முறையாக ”திமுக” பெயரை சொன்ன விஜய் – ”வீட்டிற்கு அனுப்ப உறுதி”

105 0

திமுக தலைமையிலான அரசை 2026ல் மாற்றுவோம் என, மகளிர் தின வாழ்த்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்,

சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்,

விஜய் வாழ்த்து:

சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீடியோ மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “எல்லோருக்கும் வணக்கம். இன்று மகளிர் தினம். தமிழ்நாடு முழுவதும் உள்ள என்னுடைய அம்மா, அக்கா, தங்கை, தோழிகள் என அனைவருக்கும் இந்த நாளில் வாழ்க்த்து சொல்லாமல் இருக்க முடியாது. உங்கள் அனைவருக்கும் என்னுடைய மகளிர் தின வாழ்த்துகள். சந்தோஷம் தானே?

 

திமுக அரசை சாடிய விஜய்:

பாதுகாப்பாக இருந்தால் தானே சந்தோஷத்தை உணர முடியும். அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாதபோது, பாதுகாப்பின்மையை உணரும்போது சந்தோஷம் இருக்காது தானே? அப்படி என நீங்கள் நினைப்பது புரிகிறது. என்ன செய்வது,  நீங்க, நான் என எல்லோரும் சேர்ந்து தான் இந்த திமுக அரசை தேர்தெடுத்தோம். ஆனால், அவர்கள் நம்மை இப்படி ஏமாற்றுவார்கள் என இப்போது தானே தெரிகிறது. எல்லாமே இங்கு மாறக்கூடியது தானே. மாற்றக்கூடியது தானே. கவலைப்படாதீங்க. 2026ல் நீங்க எல்லாரும் சேர்ந்து இல்லை நாம் எல்லாரும் சேர்ந்து, மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய இவர்களை மாற்றுவோம். அதற்கு மகளிர் தினத்தன்று நாம் அனைவரும் சேர்ந்து உறுதியேற்போம். ஒன்று மட்டும் சொல்கிறேன். எல்லா சூழல்களிலும் உங்களுடைய மகனாகவும், அண்ணனாகவும், தம்பியாகவும், தோழனாக உங்களோடு நான் நிற்பேன். நன்றி, வணக்கம் ” என தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.

”திமுக” பெயரை உச்சரித்த விஜய்

விஜய் தனது அரசியல் கட்சியை தொடங்கிவிட்டது. அதன்பிறகு கட்சி மாநில மாநாடு, புத்தக வெளியீட்டு விழா, இரண்டாமாண்டு தொக்க விழா என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். ஆனால், அத்தனை இடங்களில் மாநில அரசு, ஆளுங்கட்சி, அரசியல் எதிரிகட்சி என்று மட்டுமே திமுகவை மறைமுகமாக குறிப்பிட்டு வந்தார். ஒருமுறை கூட அவர் திமுக எனும் பெயரை பொதுவெளியில் உச்சரிக்காமல் இருந்தார். இதுவே அவர் மீது பெரும் விமர்சனமாக இருந்தது. இந்நிலையில், முதல்முறையாக திமுக என பெயர் குறிப்பிட்டு, அவர்களது தலைமையிலான அரசை மாற்றுவோம் என விஜய் குறிப்பிட்டுள்ளார். அவரது அரசியல் நகர்வுகளில் இது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த வீடியோவை தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள்,  சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். விஜயை யாரும் பெரிதாக பொதுவெளியில் விமர்சிக்க வேண்டாம் என, அண்மையில் திமுக தலைமை உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தான், திமுக மீதான நேரடி தாக்குதலை விஜய் தொடர்ந்துள்ளார்.

Related Post

தவெகவை முடக்க முயற்சி செய்தனர்; அவர்களின் எண்ணம் ஈடேறாது: சிடிஆர் நிர்மல் குமார்

Posted by - October 29, 2025 0
சென்னை: “தமிழக வெற்றிக் கழகத்தை முடக்க முயற்சி செய்தனர். அவர்களின் எண்ணம் நிச்சயமாக ஈடேறாது. மக்கள் விஜய் மீது 100% நம்பிக்கை வைத்துள்ளனர்” என அக்கட்சியின் இணை…

பிரபல தொலைக்காட்சியை வாங்கப்போகும் தவெக?

Posted by - January 21, 2026 0
தமிழ்நாட்டின் பிரபலமான செய்தி தொலைக்காட்சி ஒன்றை வாங்க தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மிகவும் தீவிரமாக…

சொந்த கட்சியினரால் அல்லது மக்களால் திமுக அழியும்: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

Posted by - November 8, 2025 0
சென்னை: ‘சொந்த கட்​சி​யின​ரால் அல்​லது மக்​களால் திமுக அழி​யும்’ என பாஜக முன்​னாள் மாநில தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன் தெரி​வித்​தார். வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்​டாட்​டம்…

எனது பேட்டியை விஜய்க்கு எதிராக சித்தரிப்பதை நிறுத்துங்கள்: அஜித்

Posted by - November 8, 2025 0
எனது பேட்டியை விஜய்க்கு எதிராக சித்தரிப்பதை தயவுசெய்து நிறுத்துங்கள் என்று அஜித் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அஜித் அளித்த பேட்டியொன்றில் கரூர் விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து…

”தமிழக அரசே.. விஜயை சுதந்திரமாக பேச விடுங்க” காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கோரிக்கை

Posted by - September 23, 2025 0
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சுதந்திரமாக பேசவும், பயணிக்கவும் தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். வாக்குத் திருட்டுக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *