பிரதமர் மோடியின் இருக்கை அருகே முற்றுகையிட சென்ற காங்கிரஸ் எம்பிக்கள் – வீடியோ ஆதாரத்தை வெளியிட்டார் கிரண் ரிஜிஜு!

45 0

காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சித்துள்ளார்.

மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பிரதமர் மோடியை தாக்க திட்டமிட்டிந்ததாக தனக்கு உறுதியான தகவல் கிடைத்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். பிரதமரின் பாதுகாப்பு கருதியே அவரது பதிலுரை ரத்து செய்யப்பட்டதாகவும், எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்களை கேடயமாகப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்ததாக ஓம் பிர்லா கூறினார்.

பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி செய்துள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பிரதமர் மோடியின் இருக்கைக்கு அருகே காங்கிரஸ் எம்பிக்கள் முற்றுகையிடும் வீடியோவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளார்.அந்த பதிவில், காங்கிரஸ் கட்சி தங்கள் எம்பிக்களின் மிகவும் இழிவான நடத்தையைப் பற்றி பெருமை கொள்வதகவும், நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் தாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், பாஜக உறுப்பினர்கள் எவ்வளவோ தடுத்தும் பிரதமரின் நாற்காலியை காங்கிரஸ் பெண் எம்பிக்கள் முற்றுகையிட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related Post

கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?

Posted by - December 8, 2025 0
பணி நியமனங்களில் முறைகேடு விவகாரத்தில் 1,020 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக தெரிவித்துள்ள அமலாத்துறை அமைச்சர் கே என் நேரு மீது எப்ஐஆர் பதிவு செய்ய கோரி…

”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்

Posted by - November 27, 2025 0
Vijay  vs Seeman: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை கடுமையாக சாடி பேசியுள்ளார். ஒரு வழக்கு போட்டதும்…

அதிமுகவை விமர்சிக்க ஆதவ் அர்ஜூனாவுக்கு என்ன தகுதி உள்ளது – அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி!

Posted by - February 10, 2026 0
விஜய்யை எந்த மாநிலத்திற்கு செங்கோட்டையன் முதல்வராக்க போகிறார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அச்சம்பத்து எஸ்…

சம வேலைக்கு சம ஊதியம்: போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் 1560 பேர் மீது வழக்கு பதிவு

Posted by - December 27, 2025 0
சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் ஆயிரத்து 560 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம வேலைக்கு சம…

“பேச முடியாத அளவில் துயரத்தில் உள்ளோம்”- உருக்கமாக பேசிய ஆதவ் அர்ஜுனா

Posted by - October 11, 2025 0
த.வெ.க.வை முடக்கும் நோக்கில் செயல்படுவதாக அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளோம் என்று ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். த.வெ.க.வை முடக்கும் நோக்கில் செயல்படுவதாக அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளோம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *