விஜய் கட்சியில் அதிரடி: தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாற்றம்..!

197 0

TVK Vijay | நடிகர் விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்ததற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அண்மையில், நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி உள்ளார். தற்போது நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும் தெரிவித்திருந்தார். திரையுலகிற்கு முழுக்கு போட்டுவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் தனது அறிக்கையின் வாயிலாக கூறியிருந்தார்.

நடிகர் விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்ததற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இதனால் குஷியான அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட பணிகளில் இறங்கியுள்ளனர். அதே வேளையில், மாவட்ட வாரியாக கட்சியை வலுப்படுத்தும் நோக்கில்  தமிழக வெற்றி கழகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மாவட்ட செயலாளர் மாற்றம்; அதிரடி

அந்த வகையில், தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாற்றப்பட்டுள்ளார்.  விஜய் மக்கள் இயக்கமாக செயல்படும் போது, பில்லா ஜெகன் என்பவர் மாவட்ட தலைவராக இருந்தார். தற்போது அவர், திமுகவில் இணைந்து விட்டதால், தூத்துக்குடி மாவட்ட செயலாளராக எஸ்.ஜே.சுமன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது நியமிக்கப்பட்டுள்ள எஸ்.ஜே.சுமன், பில்லா ஜெகனின் சகோதரர் ஆவார்.

Related Post

அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!

Posted by - February 26, 2026 0
அண்ணா பல்கலை. தற்காலிக உதவி பேராசிரியர்களுக்கு மீண்டும் பணி; அதிரடியாக அறிவித்த அமைச்சர் கடந்த ஒரு மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அண்ணா பல்கலை. தற்காலிக…

அஜித் வீட்டில் விஜய்.. ”நான் இருக்கேன் மா” கையை இருகிப்பிடித்து ஆறுதல் சொன்ன தவெக தலைவர்..

Posted by - July 3, 2025 0
தவெக தலைவர் விஜய் உயிரிழ்ந்த அஜித்குமாரின் வீட்டிற்கு சென்று அவரது தாயரின் கையை இருகி கட்டிப்பிடித்து ஆறுதல் தெரிவித்தார். போலீசாரின் காவல் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் வீட்டிற்கு…

“கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் பேனர்கள், கட்அவுட்கள் வைக்கக்கூடாது” – நிர்வாகிகளுக்கு தி.மு.க தலைமை எச்சரிக்கை!

Posted by - March 16, 2023 0
 நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பேனர்கள் விளம்பரத்திற்காக உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல் திமுக பொதுக்கூட்டங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக…

உதயநிதி பதவியேற்பு விழா: எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு!

Posted by - December 13, 2022 0
உதயநிதி அமைச்சரானால் திமுக ஆட்சியில் நடைபெறும் ஒட்டுமொத்த ஊழலுக்கும் தலைவராவார் – ஈபிஎஸ் உதயநிதி அமைச்சராகவுள்ள நிலையில் நாளை நடைபெறவுள்ள பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி…

பீகார் முடிவு… செம குஷியில் திமுக.! காங்கிரஸ் இனி வாலாட்ட முடியாது

Posted by - November 15, 2025 0
பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பாஜக கூட்டணியிடம் காங்கிரஸ் படு தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *